Home /News /technology /

5ஜி அட்வான்ஸ்டு: இது 5ஜியில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது? 6ஜி-க்கு இதுதான் அடித்தளமா?

5ஜி அட்வான்ஸ்டு: இது 5ஜியில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது? 6ஜி-க்கு இதுதான் அடித்தளமா?

காட்சி படம்

காட்சி படம்

5G Advanced : 5ஜி அட்வான்ஸ்டின் பர்ஸ்ட் ரிலீஸ், 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது.

நாம் 5ஜி-ஐ பற்றி பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், 5ஜி நெட்வொர்க்குகள் உலகின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சில நாடுகள் தங்களுக்கான கனெக்டிவிட்டி ஸ்டேஷன்களை அமைப்பதில் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. எளிமையாக கூறவேண்டும் என்றால் - 5ஜி என்பது டேட்டா வேகத்திற்கான ஒரு புதிய பரிமாண வளர்ச்சி ஆகும். இது நுகர்வோருக்கு கூடுதல் அம்சங்களையும் தயாரிப்புகளையும் அணுகவும் வழிவகுக்கிறது.

5ஜி ஆனது ஏஆர் / விஆர் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சிக்கான அடுத்த தலைமுறை 'கனெக்டிவிட்டி சோர்ஸ்' ஆக அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் ஆன்லைன் கேமிங்கை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுகிறது. உடன் ஐஓடி-க்கு (IoT) ஒரு புதிய வாழ்க்கையையும் அளிக்கிறது. இப்படியாக, நாம் எப்படி 5ஜி-ஐ ஒரு எதிர்காலமாக பார்க்கிறோமோ, அதேபோல தான் - 5ஜி அட்வான்ஸ்டும் (5G Advanced)!

5ஜி உடன் ஒப்பிடும்போது, இது அதிக நுண்ணறிவை உட்செலுத்தும், ஒட்டுமொத்த செயல்திறனை அதிகரிக்கும், சுற்றுச்சூழலை மனதில் கொண்டு அனைத்தையும் செயல்படுத்தும் என்கிறார்கள் வல்லுனர்கள். மேலும் அவர்கள் 5ஜி அட்வான்ஸ்டு என்றால் என்ன? இது தற்போதுள்ள 5ஜி நெட்வொர்க்கில் எவ்வாறு மேம்படுகிறது மற்றும் என்னென்ன புதிய அம்சங்களை எதிர்பார்க்கலாம்? என்கிற கேள்விகளுக்கான பதில்களையும் வழங்குகின்றனர்.

5G அட்வான்ஸ்டு என்றால் என்ன?

தொழில்துறை தரநிலைகளின்படி, 5ஜி அட்வான்ஸ்டு ஆனது தற்போதுள்ள 5ஜி நெட்வொர்க் கனெக்டிவிட்டியின் அப்கிரேட்டட் வெர்ஷனை போன்றது. இதன் வழியாக டெலிகாம் நிறுவனங்களின் நெட்வொர்க் கவரேஜ் கணிசமாக மேம்படும், இது உங்களுக்கு நிலையான மற்றும் சற்றே வேகமான இண்டர்நெட் ஸ்பீடை வழங்கும். ஆனால் 5ஜி அட்வான்ஸ்டு வெறுமனே கனெக்டிவிட்டி செயல்திறனோடு நின்றுவிடப்போவதில்லை. ஏனெனில் இதன் திறன்கள் 5ஜி நெட்வொர்க் வழங்கும் தற்போதைய அம்சங்களை மிஞ்சும் வகையில் உள்ளது.also read : இந்தியாவின் எதிர்கால டிஜிட்டல் உலகம் இதை சார்ந்து தான் உள்ளது!

5ஜி அட்வான்ஸ்டு எப்போது சந்தைக்கு வரும்?

5ஜி அட்வான்ஸ்டின் பர்ஸ்ட் ரிலீஸ், 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. எனவே 2025 ஆம் ஆண்டுக்கு முன் அதிகாரப்பூர்வ வெளியீடு ஏதேனும் நடக்கும் என்று நாம் எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை.

5ஜி அட்வான்ஸ்டில் இருந்து என்னென்ன எதிர்பார்க்காலம்?

புதிய லைஃப்-லைக் விர்ச்சுவல் சிமுலேஷன்களை அனுபவிக்கலாம்: ஆம்! 5ஜி அட்வான்ஸ்டு ஆனது மெட்டாவேர்ஸ் கருத்தை வெற்றியடையச் செய்ய தேவையான அனைத்து டூல்களையும் கொண்டுள்ளதுதானியங்கி வாகனங்களின் உண்மையான வளர்ச்சி, இனிமேல் தான் ஆரம்பிக்கும்: ஆம்! இந்த தலைப்பின் கீழ் தற்போதைய 5ஜி நெட்வொர்க் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பதாக இருக்கலாம். ஆனால் 5ஜி அட்வான்ஸ்டு தான் ஆட்டோநமஸ் வெஹிக்கல்களின் (Autonomous Vehicles) வளர்ச்சிக்கான உண்மையான சொல்யூஷன் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.also read : இனி WhatsApp சாட்களை விண்டோஸ் ஆப்-பில் அர்சிவ் செய்யலாம்.!

முன்னெப்போதை விடவும் இடைவெளிகளை குறைக்கும்: தற்போதைய 5ஜி நெட்வொர்க் மேம்பட்டது தான், ஆனால் எந்த வகையான இணைப்பும் சென்றடைய கடினமாக இருக்கும் சில மூலைகளும் இங்குண்டு. ஆனால் 5ஜி அட்வான்ஸ்டு, குறிப்பிட்ட இடைவெளிகளை குறைக்கவும், அதற்கு சரியான தீர்வுகளுடன் டெய்லி ஆப்ரேஷன்களை இயக்கவும் கைகொடுக்கும் என்பதில் சந்தகமே வேண்டாம்.

6ஜி-யின் அடித்தளமாக மாறும்: எல்லாவற்றிற்கும் மேலாக, அடுத்த தசாப்தத்தில் தொலைத்தொடர்பு துறையின் கலங்கரை விளக்கமாக இருக்க போகும் 6ஜி நெட்வொர்க்கின் வளர்ச்சிக்கு அடித்தளமாக 5ஜி அட்வான்ஸ்டு மாறும்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: 5G technology

அடுத்த செய்தி