“144 அப்டினா என்ன...? ஸ்கூல் லீவு இருக்கா...?” அயோத்தி தீர்ப்பை ஒட்டி கூகுளில் இந்தியர்கள் தேடியது என்னென்ன...?

news18
Updated: November 9, 2019, 12:59 PM IST
“144 அப்டினா என்ன...? ஸ்கூல் லீவு இருக்கா...?” அயோத்தி தீர்ப்பை ஒட்டி கூகுளில் இந்தியர்கள் தேடியது என்னென்ன...?
News18
news18
Updated: November 9, 2019, 12:59 PM IST
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கிய நிலையில், கூகுளில் பலரும் 144 சட்டப்பிரிவு மற்றும் பள்ளி விடுமுறை குறித்து தேடியுள்ளனர்.

அயோத்தியில் ராமர் பிறந்ததாக கருதப்படும் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், நிலம் இந்து அமைப்புக்கே சொந்தம் என்றும், இஸ்லாமியர்களுக்கு வேறு இடத்தில் நிலம் ஒதுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று இரவில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதுமே நாட்டின் அனைத்து இடங்களும் உஷார் நிலைக்கு கொண்டு வரப்பட்டது. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் பல இடங்களில் செல்போன் சேவை முடக்கப்பட்டன.


தமிழகத்திலும் பல இடங்களில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். பல இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதால், அது பற்றி இந்தியர்கள் அதிகளவில் கூகுளில் தேடியுள்ளனர். நாடு முழுவதும் பல இடங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், அது பற்றியும் பலர் தேடியுள்ளனர்.தீர்ப்பு வழங்கும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோயாய் யார்..? எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் பலர் தேடியுள்ளனர்.

Loading...Also See...
First published: November 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...