• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • சிக்னல் ஆப்பில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன? எந்த நாட்டிற்கு சொந்தமானது?

சிக்னல் ஆப்பில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன? எந்த நாட்டிற்கு சொந்தமானது?

சிக்னல் ஆப்

சிக்னல் ஆப்

வாட்ஸ்அப் அறிவித்த சமீபத்திய தனியுரிமைக் கொள்கை காரணமாக ஏராளமான மக்கள் சிக்னல் ஆப்பிற்கு மாறியுள்ளனர். சிக்னல் ஆப்பின் சிறப்பம்சங்கள் என்ன என்பதை இதில் காண்போம்..

  • Share this:
கடந்த சில நாட்களாகவே வாட்ஸ்அப்  அதன் பயன்பாட்டு விதிமுறைகளையும், தனியுரிமை கொள்கையையும் புதுப்பித்து வருகிறது. மேலும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் யூசர்கள் இந்த அப்டேட்டை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தொடர்ந்து சேவையை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. நிறுவனம் இந்த செய்தியை வெளியிடத்தில் இருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 

இது பலருக்கும் கவலையாகத் தெரிவதால், வாட்ஸ்அப்பிற்கு பதிலாக வேறு ஆப்களை உபயோகிக்க யோசனை செய்து வருகிறார்கள். அதன்படி மக்களுக்கு கிடைக்கக்கூடிய மிகவும் பாதுகாப்பான விருப்பங்களில் ஒன்று "சிக்னல்" ஆப். வாட்ஸ்அப் என்பது மிகவும் பிரபலமான மெசேஜிங் ஆப் ஆகும். இந்தியாவில் மட்டும் சுமார் 400 மில்லியன் மக்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றன. 

மேலும் இந்த ஆப் எண்டு-டு-எண்டு என்க்ரிப்ஷன்,  வீடியோ அண்ட் வாய்ஸ் கால் சப்போர்ட், ஒரே கிளிக்கில் எளிமைப்படுத்தப்பட்ட ஃபைல் பரிமாற்றம் மற்றும் பல அம்சங்களை யூசர்களுக்கு வழங்குகிறது. இருப்பினும், இதுபோன்ற அம்சங்களை டெலிகிராம் , லைன் , ஐமேசேஜ் போன்ற ப ல மெசேஜிங் ஆப்களும் வழங்கி வருகின்றன. இருப்பினும் வாட்ஸ்அப் சேவைக்கு ஒத்ததாக இருக்கும் ஒரு மெசேஜிங் தளம் அதுவும் பாதுகாப்பான மாற்று செயலியாக சிக்னல் இருக்கும். ஏன் என்ற விவரங்களை பின்பருமாறு காணலாம்.

சிக்னல் என்றால் என்ன?

சிக்னல் என்பது பிரைவசியில் அதிக கவனம் செலுத்தும் ஒரு மெசேஜிங் ஆப் ஆகும். இதன் டேக்லைனே  'தனியுரிமைக்கு வணக்கம் சொல்லுங்கள்'  என்பது தான். இந்த ஆப் வாட்ஸ்அப்பைப் போலவே ஒரு எண்டு-டு-எண்டு என்க்ரிப்ஷன் சேவையை வழங்குகிறது. மேலும் இது Android, iOS மற்றும் Chrome, ஐபோன், ஐபாட், விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் கிடைக்கிறது. பிற மெசஞ்சர் ஆப்களை போலவே சிக்னல் ஆப்பையும் கட்டணமில்லாமல் உபயோகித்து கொள்ளலாம். 

இந்த ஆப் சில காலமாகவே பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு செயலியாக இது இயங்கவில்லை. அந்த நேரத்தில் தான் வாட்ஸ்அப் அறிவித்த சமீபத்திய தனியுரிமைக் கொள்கை காரணமாக ஏராளமான மக்கள் சிக்னல் ஆப்பிற்கு மாறியுள்ளனர். இது உலகெங்கிலும் உள்ள மக்களிடம் இருந்து அதிகபடியான புதிய பதிவுகளை பெற்றதால் திடீரென கிராஷ் ஆனது. அந்த குறைபாடு தற்போது சரிசெய்யப்பட்டு சிக்னல் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் இது புதிய யூசர்களின் பதிவுகளை ஏற்றுக்கொள்கிறது.

சிக்னல் ஆப்பின் உரிமையாளர் யார்?

சிக்னல் ஆப்பை சிக்னல் அறக்கட்டளை மற்றும் சிக்னல் மெசஞ்சர் எல்.எல்.சி நிறுவனம் உருவாகியுள்ளது. இது ஒரு இலாப நோக்கற்ற நிறுவனம் ஆகும். சிக்னல் ஆப்பை அமெரிக்க கிரிப்டோகிராஃபரும், சிக்னல் மெசஞ்சரின் தலைமை நிர்வாக அதிகாரியுமான மோக்ஸி மார்லின்ஸ்பைக் மற்றும் வாட்ஸ்அப் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

சிக்னல் ஆப் எந்த நாட்டிற்கு சொந்தமானது?

சிக்னல் நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தது. சமீபகாலமாக இது ஒரு சீன நிறுவனம் என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்ட நிலையில் அவர்களின் குழப்பத்தை நிறுவனம் தீர்த்து வைத்தது. குறிப்பிடத்தக்க வகையில், நிறுவனம் வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை என்று அழைக்கப்படுகிறது.

சிக்னல் பாதுகாப்பானதா? இது என்ன தரவு சேகரிக்கிறது?

வாட்ஸ்அப், பேஸ்புக் மெசஞ்சர் போன்ற செயலிகள், அதனை பயன்படுத்தும் யூசரின் பெர்பாமென்ஸ் டேட்டா, டிவைஸ் ஐடி, விளம்பர டேட்டா, ப்ராடக்ட் காண்டாக்ட், கட்டணத் தகவல், இருப்பிடத் தரவு, சர்ச் ஹிஸ்டரி போன்ற பல தகவலைகளை சேகரிக்கிறது. ஆனால் சிக்னல் ஒரு பாதுகாப்பான ஆப் என்று கூறப்படுகிறது . மேலும் இது யூசரின் எந்தவிதமான தரவையும் சேகரிப்பதில்லை என்று தெரிவித்துள்ளது. சிக்னல் செயலியில் நீங்கள் பதிவு செய்ய, அது உங்கள் மொபைல் எண்ணை மட்டுமே கேட்கும் என்று கூறப்படுகிறது. இது தவிர, உங்கள் எண்ணை உங்கள் யூசர் கணக்கில் இணைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் தரவுகளை சேகரிக்காத எந்த ஒரு ஆப்பும் பாதுகாப்பானது தானே.

சிக்னலில் வணிக கணக்குகளை பதிவு செய்யலாமா?

சிக்னல் என்பது மக்களிடையே நேரடி தகவல்தொடர்புக்கானது. சிறு, நடுத்தர நிறுவனங்கள் அல்லது வாட்ஸ்அப் போன்ற பெரிய நிறுவனங்களுக்கான பிரத்யேக வணிகக் கணக்குகள் இதில் இல்லை. ஆனால் ஒரு வணிகமானது யூசர்களை தொடர்புகொள்வதற்கான வழக்கமான கணக்காக சிக்னலில் சேரலாம். இருப்பினும் எந்தவொரு தொடர்பையும் ப்ளாக் செய்யும் விருப்பம் யூசர்களுக்கு எப்போதும் இருக்கும்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: