முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / காலநிலை மாற்றத்தில் மனிதர்களை காக்க கார்பன் மடுவாகும் திமிங்கலங்கள் -ஆய்வில் தகவல்

காலநிலை மாற்றத்தில் மனிதர்களை காக்க கார்பன் மடுவாகும் திமிங்கலங்கள் -ஆய்வில் தகவல்

கார்பன் மடுவாகிய திமிங்கலங்கள்

கார்பன் மடுவாகிய திமிங்கலங்கள்

திமிங்கலங்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் உடல் எடையில் 4% வரை அளவிலான கிரில் வகை மீன்கள் மற்றும் பிளாங்க்டான்களை உட்கொள்கின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

காலநிலை மாற்றம் என்பது கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. அதை சமாளிக்கவும், அதில் வரும் அழிவுகளை குறைப்பதற்கும் பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இயற்கையான முறையிலோ செயற்கை தொழில்நுட்பங்கள் மூலமோ அதை சரி செய்ய போராடி வருகின்றனர்.

காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணமான கார்பன் அளவை சுற்றுசூழலில் இருந்து குறைக்க மரங்களை நடுதல், ஈரநிலங்களை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தி வரும் நிலையில் டிசம்பர் 15 அன்று சூழலியல் மற்றும் பரிணாம வளர்ச்சி ஆராய்ச்சியாளர்கள், கிரகத்தின் மிகப்பெரிய விலங்கான திமிங்கலம் கார்பனை பெரிதளவில் உட்கொள்ளும் சக்தி படைத்தது என்று தெரிவித்துள்ளனர்.

கார்பன் சுழற்சியில் திமிங்கலங்களின் பங்கைப் புரிந்துகொள்வது வளர்ந்து வரும் முக்கிய துறையாகும். இது கடல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்ற உத்திகள் இரண்டிற்கும் பயனளிக்கும் என்று அலாஸ்கா தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உயிரியலாளர் ஹெய்டி பியர்சன் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது.

திமிங்கலங்கள் சராசரியாக 150 டன்கள் வரை எடை கொண்டது. 100 ஆண்டுகளுக்கு மேல் வாழும். எல்லா உயிரினங்களையும் போலவே, அவற்றின் மிகப்பெரிய உயிரியலும் கார்பனால் ஆனது. இது பூமியின் மொத்த கார்பனில் 22% சேமிக்கும் ஆள்கடல் அமைப்பின் ஒரு பகுதியாகும்.

இதையும் படிங்க : கண்தொற்று நோய்களை விரைவாகக் கண்டறிய ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ்!

சிறிய மீன்கள் குறைவாக சாப்பிட்டு அதிக கார்பன் கழிவுகளை வெளியில் விடும். ஆனால் திமிங்கலங்கள் அதன் உடலுக்கு தேவையான அதிகப்படியான உணவை உட்கொள்வதோடு குறைவான கார்பனை கடலிலும் காற்றிலும் வெளியிடுகிறது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் கார்பன் சுழற்சி என்பது சரிவர பராமரிக்கப்படுகிறது. அதோடு ஊட்டச்சத்து இயக்கவியல் சுழற்சியில் பெரும் பங்கு வகிக்கிறது.

திமிங்கலங்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் உடல் எடையில் 4% வரை அளவிலான கிரில் வகை மீன்கள் மற்றும் பிளாங்க்டான்களை உட்கொள்கின்றன. நீல திமிங்கலத்தைப் பொறுத்தவரை, இது கிட்டத்தட்ட 8,000 பவுண்டு அளவு உணவை எடுத்துக்கொள்கிறது. அவை செரித்து வெளிவரும் மலத்தில் கிரில் மற்றும் பிளாங்க்டன் செழிக்க உதவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இதனால் கடலில் ஒரு ஊட்டச்சத்து மற்றும் உயிரின சுழற்சியையும் பாதுகாக்கிறது.

ஆனால் சமீப காலமாக வணிக திமிங்கல வேட்டையால், திமிங்கலங்களின் எண்ணிக்கை 81% குறைந்துள்ளது. இதனால் கடலில் திமிங்கலங்கள் சாப்பிடும் உயிரினங்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்பட்டதுடன் கார்பன் சுழற்சி என்பதும் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் , ஈரநிலங்கள் எந்த அளவுக்கு நிலத்தில் இருந்து கார்பனை உறுஞ்சுகிறதோ அதற்கு ஈடாக கடலில் இருக்கும் திமிங்கலங்கள் கடல்பகுதி கார்பனை உட்கொண்டு சமநிலை படுத்துகிறது.

பூமியை காலநிலை மாற்றத்தில் இருந்து காக்கும் பெரிய கார்பன் சிங்க்- கார்பன் மடுவாக விளங்கும் திமிங்கலங்களின் முக்கியத்துவம் உணர்ந்து அதைப் பாதுகாக்கும் வேலையை உலக அமைப்புகள் உடனடியாக  முன்னெடுக்க வேண்டும் என்று  ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது. மரங்கள் வளர்ப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு திமிங்கலங்களை முக்கியம்.

First published:

Tags: Global warming, Whale shark