WFHல் பணிபுரிபவர்களுக்கு வசதியாக 40Mbps, 50Mbps மற்றும் 100Mbps வேகம் கொண்ட சிறந்த பிராட்பேண்ட் திட்டங்கள்!

சிறந்த பிராட்பேண்ட் திட்டங்கள்

WFH நடைமுறையில் தவிர்க்க முடியாத கூடுதல் செலவாக வீட்டிற்கு ஒயர் பிராட்பாண்ட் லைனை பெறுவது காட்டாயமாக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வீட்டில் இருந்தே பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் வீட்டு பிராட்பேண்ட் லைன் அவசிய தேவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து வேலை என்ற நீடிக்கப்பட்ட சகாப்தத்தில் இந்தியா இருந்தாலும் ஒவ்வொரு நாளும் கணிசமான எண்ணிக்கையில் கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக WFH நடைமுறையில் தவிர்க்க முடியாத கூடுதல் செலவாக வீட்டிற்கு ஒயர் பிராட்பாண்ட் லைனை பெறுவது காட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தொலைதூர வேலைகளை செய்ய, உங்கள் குழந்தையின் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் வேலை நேரத்திற்கு பின்பு பொழுதுபோக்கிற்கு தேவைப்படும் நெட்ஃபிக்ஸ் ஸ்ட்ரீமிங் போன்ற பல விஷயங்களுக்கு ஒருவரின் 3ஜி மற்றும் 4ஜி மொபைல் நெட்வொர்க்குகள் வசதியாக இருக்காது. ஒரு பெரிய புள்ளிவிவரங்களின் படி WFHல் இருக்கும் தனித்துவமான சூழ்நிலை காரணமாக, குடியிருப்பு பகுதிகளில் மொபைல் நெட்வொர்க்குகளில் அதிக சுமை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் வீட்டில் பிராட்பாண்ட் வசதியை எடுக்க பெரும்பாலானோர் முன்வருவதில்லை. இது பெரும்பாலும் தவிர்க்க முடியாத கேள்விக்கு வழிவகுக்கிறது.

அதாவது வீட்டிற்கு வாங்கக்கூடிய மலிவான பிராட்பேண்ட் இணைப்பு என்ன? என்பது தான். இந்த சிக்கலை குறைக்க பிரபலமான பிராட்பேண்ட் சேவை வழங்குநர்கள் அல்லது இணைய சேவை வழங்குநர்கள் சுவாரஸ்யமான நுழைவு விவரக்குறிப்பு திட்டங்களைக் கொண்டுவந்துள்ளனர். அவை உங்கள் பட்ஜெட்டை உண்மையில் பாதிக்காது. ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிராட்பேண்ட், ACT பிராட்பேண்ட், பிஎஸ்என்எல், டாடா ஸ்கை பிராட்பேண்ட், எக்ஸிடெல் மற்றும் பிற அனைத்தும் ரூ.500 விலை மதிப்பை சுற்றியுள்ள திட்டங்களை உள்ளடக்கியுள்ளன.

Also read... மொபைல் App-ல் கொரோனா தடுப்பூசி மையங்களை அடையாளம் காண ஃபேஸ்புக் நடவடிக்கை!

வழங்குநர்களின் திட்டங்களை பொறுத்து 30Mbps முதல் 50Mbps வரை இணைய வேகம் இருக்கும். எக்ஸிடெல் திட்டங்களை பொறுத்தவரை, நீங்கள் நீண்ட கால ரீசார்ஜ் திட்டங்களை தேர்வு செய்தீர்கள் என்றால் உங்களுக்கு 100Mbps வேகம் கிடைக்கும். மேற்கண்ட அனைத்து பிராட்பேண்ட் திட்டங்களை குறித்தும் விரிவாக காண்போம். கடந்த ஆண்டு புதிய ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களுடன் பிராட்பேண்டை மிகவும் மலிவு விலையில் அறிமுகப்படுத்தியதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ உண்மையில் போட்டியை வலுப்படுத்தியது. அதன்படி JioFiber-ன் ரூ. 399 பிராட்பேண்ட் திட்டம் உங்களுக்கு 30Mbps சமச்சீர் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்க வேகத்தை வழங்குகிறது.

அதனுடன் இந்தியா முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை வழங்கும் வீட்டு தொலைபேசியையும் பெறுவீர்கள். இந்தத் திட்டத்துடன் தொகுக்கப்பட்ட டேட்டா பயன்பாடு வரம்பற்றது. அதாவது மாதந்தோறும் 3300 ஜிபி என்ற நியாயமான பயன்பாட்டுக் கொள்கை (FUP) கேப்பை நீங்கள் பெறுவீர்கள். அதன் பிறகு மீதமுள்ள பில்லிங் சுழற்சிக்கான வேகம் குறையும். கடந்த ஆண்டு ஜியோ ஃபைபர் திட்ட மறுசீரமைப்பிற்கு பதலிடி கொடுக்கும் விதத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஒரு புதிய ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் அன்லிமிடெட் பிராட்பேண்ட் திட்டத்தைப் அறிமுகப்படுத்தியது. இது மாதத்திற்கு ரூ .499 விலை மற்றும் 40 எம்.பி.பி.எஸ் வேகத்தை வழங்குகிறது.

மேலும் இதன் டேட்டா பயன்பாடு வரம்பற்றது. மாதத்திற்கு 3333 ஜி.பி. டேட்டா மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை, விங்க் மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவைக்கான அன்லிமிடெட் லோக்கல் மற்றும் நேஷனல் வாய்ஸ் கால்ஸ் மற்றும் சந்தாக்களுடன் நீங்கள் ஒரு லேண்ட்லைன் தொலைபேசியைப் பெறுவீர்கள். ரிலையன்ஸ் ஜியோ ஹோம் பிராட்பேண்டிற்கான மிகவும் மலிவு விலை 100Mbps திட்டத்தில் ஜியோ ஃபைபர் திட்டமும் ஒன்றாகும். இதன் விலை மாதத்திற்கு ரூ .699 ஆகும். மேலும் இந்தியா எங்கும் அன்லிமிடெட் வாய்ஸ் குரல் கால் வசதிகளை கொண்ட வீட்டு தொலைபேசியுடன் வருகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் சமச்சீர் வேகத்தைப் பெறுவீர்கள். அதாவது 100Mbps பதிவிறக்கம் மற்றும் 100Mbps பதிவேற்றம் மற்றும் வரம்பற்ற தரவு பயன்பாடு ஆகியவை ஆகும்.

இருப்பினும், இந்த திட்டத்துடன் ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளுக்கு தொகுக்கப்பட்ட சந்தாக்கள் எதுவும் இல்லை. இதனை பெற, நீங்கள் மாதத்திற்கு ரூ.999 செலவாகும் 150Mbps திட்டத்திற்கு மேம்படுத்த வேண்டும். அடுத்ததாக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிராட்பேண்ட் சேவைக்கான ஏர்டெல்லின் 100Mbps திட்டம் சற்று விலை திகமாக இருக்கும். இந்த திட்டத்தை பெற மாதத்திற்கு ரூ.799 செலவாகும். ரிலையன்ஸ் போலவே ஏர்டெலிலும், 100Mbps பதிவேற்றம் மற்றும் பதிவிறக்க வேகம், வரம்பற்ற தரவு பயன்பாடு மற்றும் தொகுக்கப்பட்ட வீட்டு தொலைபேசியைப் பெறுவீர்கள். இது இந்தியா முழுவதும் வரம்பற்ற வாய்ஸ் கால்களை அனுமதிக்கிறது.

மேலும் ஏர்டெல் தேங்க்ஸ் பண்டிலுடன் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் விங்க் மியூசிக் ஸ்ட்ரீமிங் பயன்பாட்டிற்கான சந்தா அடங்கும். அதேபோல அரசு பங்கு பி.எஸ்.என்.எல் வழங்குநர், தனியார் ஐ.எஸ்.பி-க்களை போல சந்தைப் பங்கு மற்றும் கவர்ச்சிகரமான மலிவு பிராட்பேண்ட் திட்டங்களை அறிவிக்கவில்லை. பெரும்பாலான வட்டங்களில், பிஎஸ்என்எல் ஃபைபர் பேசிக் பிராட்பேண்ட் திட்டத்தையே வழங்குகிறது. இது மாதம் ரூ .449 விலை மற்றும் 30Mbps வேகத்தை வழங்குகிறது. இது ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தை விட சற்றே விலை அதிகம்.

இதில் நீங்கள் மாதத்திற்கு 3300 ஜிபி FUP மற்றும் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் நேஷனல் கால்களை அனுமதிக்கும் லேண்ட்லைன் தொலைபேசியைப் பெறுவீர்கள். மேலும் பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் சேவையும் ஃபைபர் வேல்யூ என்ற திட்டத்தை வழங்குகிறது. இது மாதத்திற்கு ரூ.799 விலையுடன் அன்லிமிடெட் டேட்டாவுக்கு 100 எம்.பி.பி.எஸ் சமச்சீர் வேகத்தை வழங்குகிறது. இதற்கடுத்ததாக டெல்லி மற்றும் மும்பையில் பிராட்பேண்ட் சேவைகளை வழங்கும் எம்டிஎன்எல், அதன் ஃபைபர் பிராட்பேண்ட் சேவைக்கான என்ட்ரி ஸ்பெக் திட்டத்தை எஃப்.டி.எச் -777 திட்டமாக பட்டியலிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு மாதம் ரூ.777 செலவாகும். மேலும் 100 எம்.பி.பி.எஸ் வேகத்தை மாதத்திற்கு 800 ஜிபி டேட்டாவுடன் அதிக வேகத்தில் வழங்குகிறது. பில்லிங் சுழற்சியின் முடிந்த பிறகு 1Mbps வேகத்தில் டேட்டா கிடைக்கும். அடுத்தபடியாக டாடா ஸ்கை பிராட்பேண்ட் 50Mbps வேகத்தை வழங்கும் பிராட்பேண்ட் திட்டத்தைக் கொண்டுள்ளது. இது 3 மாதங்கள், 6 மாதங்கள் அல்லது 12 மாதங்களுக்கு முன்கூட்டியே பணம் செலுத்தி நீங்கள் தேர்வு செய்வதன் மூலம் கிடைக்கும். அதன்படி, நீங்கள் 3 மாதங்களுக்கு ரூ .1797, 6 மாதங்களுக்கு ரூ .3300 மற்றும் 12 மாதங்களுக்கு ரூ .6000 செலுத்தவேண்டி வரும்.

இதன் மூலம் 3 மாத திட்டம் மாதத்திற்கு சுமார் ரூ.599- என்ற விலையிலும், 6 மாத திட்டம் மாதத்திற்கு ரூ.550 விலையிலும், 12 மாத திட்டம் மாதத்திற்கு ரூ.500-க்கும் கிடைக்கும். இது வரம்பற்ற டேட்டா பயன்பாட்டுத் திட்டமாக இருந்தாலும், இந்த நேரத்தில் தொகுக்கப்பட்ட ஸ்ட்ரீமிங் பயன்பாட்டு சந்தாக்கள் எதுவும் இல்லை. டெல்லி என்.சி.ஆர் உட்பட இந்தியாவின் பல நகரங்களில் கிடைக்கும் பிராட்பேண்ட் சேவையான எக்ஸிடெல், ப்ரீபெய்ட் அவதாரத்தில் ஃபைபர் ஃபர்ஸ்ட் 100 எம்.பி.பி.எஸ் வரம்பற்ற தரவுத் திட்டத்தைக் கொண்டுள்ளது. உதாரணமாக, இந்த திட்டத்திற்கு மாதாந்திர பில்லிங்கில் மாதத்திற்கு ரூ.699 செலவாகும்.

ஆனால், நீங்கள் மூன்று மாதங்களுக்கு முன்கூட்டியே செலுத்தினால் மாதத்திற்கு ரூ.565 செலவாகும். 4 மாதங்களுக்கு முன்கூட்டியே செலுத்தினால் மாதத்திற்கு ரூ.508 மற்றும் ஒரு வருடத்திற்கு முன்கூட்டியே செலுத்தினால் ரூ.939 செலவாகும். எக்ஸிடெல் 100Mbps வேகத்தை ஒரே மாதிரியான மாதாந்திர செலவினங்களுக்காக வழங்குகிறது. ஏனெனில் மற்ற ISP கள் நிறைய 40Mbps அல்லது 50Mbps க்கு கட்டணம் வசூலிக்கின்றன. ACT பிராட்பேண்ட் பொறுத்தவரை சில நகரங்களில் ACT ஸ்விஃப்ட் பிராட்பேண்ட் திட்டத்தை பட்டியலிட்டுள்ளது. இது மாதத்திற்கு 3300 ஜிபி டேட்டாவின் FUP கொண்ட அன்லிமிடெட் டேட்டாவைக் 50Mbps வேகத்தில் வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தை பெற மாதத்திற்கு ரூ.710 செலவாகும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: