மாஸ்க் அணிந்திடுங்கள், உயிரை காத்திடுங்கள்... கூகுள் டூடுல் கொரோனா விழிப்புணர்வு

மாஸ்க் அணிந்திடுங்கள், உயிரை காத்திடுங்கள்... கூகுள் டூடுல் கொரோனா விழிப்புணர்வு
  • News18 Tamil
  • Last Updated: September 17, 2020, 8:05 AM IST
  • Share this:
மாஸ்க் அணிந்திடுங்கள், உயிரை காத்திடுங்கள் என கூகுள் டூடுல் மூலமாக கொரோனா விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு குறைந்து வருகிறது. பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் வெளியே வருவது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கமால் இருப்பது போன்றவை அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மக்களிடையே கொரோனா விழப்புணர்வை ஏற்படுத்த அரசும் பல்வேறுகட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே கூகுள் நிறுவனம் கொரோனா விழிப்புணர்வை தனது டூடுலில் பதிவு செய்துள்ளது. கொரோனா வைரஸை அகற்ற, மாஸ்க் அணிந்திடுங்கள் என்று கூகுள் டூடுலில் அறிவுறத்தப்பட்டுள்ளது.


மேலும் உண்மைகளை அறிந்து, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் உங்களையும் உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களையும் பாதுகாக்கவும். உங்கள் உள்ளூர் சுகாதார ஆணையம் வழங்கிய ஆலோசனையைப் பின்பற்றுங்கள் என்றும் அறிவுறத்தப்பட்டுள்ளது.கொரோனா பரவுவதைத் தடுக்க உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். சோப்புகளை பயன்படுத்தவும்.உடல் ரீதியான தூரம் சாத்தியமில்லாத போது முகமூடியை அணியுங்கள். உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் வீட்டிலேயே இருங்கள் என்ற அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது.
First published: September 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading