Home /News /technology /

One Plus Nord -க்கு குவியும் முன்பதிவுகள் - எளிதாக பெறுவதற்கான வழிமுறைகள் என்ன?

One Plus Nord -க்கு குவியும் முன்பதிவுகள் - எளிதாக பெறுவதற்கான வழிமுறைகள் என்ன?

One Plus Nord

One Plus Nord

அதிநவீன, சிறந்த அம்சங்கள் கொண்ட, சிறந்த நடுத்தர பொருளாதார திறன்பேசி One Plus Nord.

    புதிய Nord திறன்பேசி, OnePlus - இன் மிகவும் விரைவான வளர்ச்சி கொண்ட திறன்பேசி என்பது மறுக்க இயலாதது என்றே கூறலாம். பயனாளிகள் இந்த திறன்பேசி மிகவும் விலை உயர்ந்தது என்று எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில், உலக திறன்பேசி உற்பத்தியாளர்கள் OnePlus Nord - ஐ கண்டு வியக்கிறார்கள். ஏனென்றால், இது அதிநவீன, சிறந்த அம்சங்கள் கொண்ட, சிறந்த நடுத்தர பொருளாதார திறன்பேசி. இன்று, பதிலளிக்க வேண்டிய ஒரே கேள்வி என்னெவென்றால், எப்போது இந்த திறன்பேசியை கைகளில் பெற முடியும் என்பதே?

    இந்த சாதனத்தின் தேவையை, சந்தையில் இதற்கு உள்ள போட்டியை, அமேசான்- இந்தியாவில் இன்று வரை அதிகமாக முன்பதிவு செய்யப்பட்ட திறன்பேசியாக OnePlus Nord இருப்பதைக் கண்டு உணரலாம். OnePlus Nord - இன் சிறப்பு அம்சங்கள் , பல சிறந்த மாதிரிகளை தோற்கடிக்கும் வண்ணம் உள்ளதால், பயனாளிகள் இந்த சாதனத்தை முழு பணம் செலுத்தி முன்பதிவு செய்துள்ளனர். OnePlus கொண்டுள்ள ஆன்லைன் ஸ்டோர்களில், தங்களுடைய அவதாரங்களை உருவாக்கி, அதனை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி, திறன்பேசியை முன்பதிவு செய்ய தகுதியானவர் ஆகலாம்.

    OnePlus ஆனது உலகிலேயே முதல் AR வெளியீட்டில், Nord திறன்பேசியையும் வெளியிட்டுள்ளது. OnePlus Nord ரசிகர்களின் உற்சாகத்தைத் தூண்டியுள்ளது என்றேக் கூறலாம்.

    OnePlus Nord விவரக் குறிப்புக்கள்

    OnePlus Nord - ஐ பற்றி இன்னும் புரியவில்லை என்றால், அதன் விவரக் குறிப்புகள் பற்றி புரிந்து கொள்ள இயலாதவர்களும் விரைவாகப் புரிந்து கொள்ளும் வகையில் இங்கு கூறப்பட்டுள்ளன. இந்த திறன்பேசி 5G-லும் இயக்கும் Qualcomm Snapdragon 765G பிரோசசோர், 90Hz அலைவரிசையில் 6.44 இன்ச் திரவ AMOLED காட்சி, OnePlus 8 உடன் போட்டியிடும் விதத்தில், இரு முன் செல்பி புகைப்படக் கருவிகளுடனான quad-cam அமைப்பு, ஒரு நாள் முழுவதும் தாங்கும் அளவிற்கு 4115 mAh பேட்டரி உடனான Warp 30T சார்ஜிங் தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

    இவை அனைத்தும் பல்வேறு மெமரி மற்றும் ஸ்டோரேஜ் வசதியுடன் இந்தியாவில் 6GB+64GB சேர்க்கை திறன்பேசி வெறும் ருபாய் 24,999 - ல் செப்டம்பர் மாதம் சந்தைக்கு வருகிறது. இதுவே மிகவும் மலிவான முதன்மை திறன் கொண்ட திறன்பேசி. இந்த சிறந்த OnePlus Nord சாதனத்தைப் பெற நீண்ட நாள் காத்திருக்க வேண்டியதில்லை. 8GB+128GB OnePlus Nord ஆனது இந்திய ரூபாயில் 27,999 - கும் மற்றும் உயர்ந்த நிலை 12GB+256GB ஆனது 29,999 ரூபாய்க்கும் இந்த வாரத்தில் வெளிவர உள்ளது.



    ஆகஸ்ட் 6 அன்று சில்லரை வியாபாரம்

    OnePlus Nord ஆனது Amazon India மற்றும் OnePlus - இன் ஆன்லைன் ஸ்டோரில் ஆகஸ்ட் 6 அன்று கிடைக்கப்பெற உள்ளது. நேரடியாக OnePlus அனுபவ ஸ்டோரில் மற்றும் OnePlus அனுமதி பெற்ற ஸ்டோர்களில் பெற்றுக்கொள்ளலாம். முன்பதிவை தவற விட்டிருந்தாலும் வருந்தம் கொள்ளத் தேவையில்லை. ஆன்லைனில் மற்றும் நேரடியாக ஆகஸ்ட் 6 முதல் திறன்பேசியை வாங்கி, அதனை முதல் நபராக பயன்படுத்தி மகிழலாம்.

    ஆகஸ்ட் 7 முதல் Reliance Digital மற்றும் Myjio

    இந்நாட்களில் நீங்கள் Jio -வை தவற விட கூடாது. ஆகஸ்ட் 7 முதல் 12 வரை OnePlus Nord, Reliance Digital ஸ்டோர்கள் மற்றும் Myjio ஆகியவற்றில் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். மற்ற ஸ்டோர்களில் வாங்க இயலாதோர், இக்கடைகளில் வாங்க நினைப்பது சிறந்த யோசனையாக இருக்கும்.

    இந்த மலிவான விலை திறன்பேசியை நீங்கள் வாங்க போதுமான ஸ்டோர்கள் உள்ளது என்பதை OnePlus உறுதி செய்துள்ளது. இறுதியாக OnePlus Nord திறன்பேசிகள் ஆகஸ்ட் 12 முதல் அனைத்து அங்கிகாரம் பெற்ற வாடிக்கையாளர் விற்பனை மையங்களில் கிடைக்கும். இப்பொழுது நீங்கள் OnePlus Nord விற்பனை தொடங்குவதற்கு முன்பே நீங்கள் பெற, முக்கியமான தேதிகளை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
    Published by:Rizwan
    First published:

    Tags: One plus, Reliance Digital

    அடுத்த செய்தி