டெலிகாம் துறையை அழித்துக் கொண்டிருக்கிறோம்... ஏர்டெல் சுனில் மிட்டல் வேதனை!

’உலகத்திலேயே அதிகப்படியான சேவைகளை வழங்கிவிட்டு இவ்வளவு குறைவான கட்டணம் இந்தியாவில் மட்டுமே உள்ளது’.

டெலிகாம் துறையை அழித்துக் கொண்டிருக்கிறோம்... ஏர்டெல் சுனில் மிட்டல் வேதனை!
சுனில் மிட்டல்
  • News18
  • Last Updated: December 20, 2019, 5:53 PM IST
  • Share this:
சந்தா கட்டணங்களை அடிமட்டத்துக்குக் குறைத்து டெலிகாம் துறையையே நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம் என பாரதி ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் மிட்டல் வேதனை தெரிவித்துள்ளார்.

முன் பட்ஜெட் நிகழ்வில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் முக்கிய கார்ப்பரேட் தலைவர்கள் உடனான கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுனில் மிட்டல், ”அதிகப் பயன்பாடு ஆனால் குறைவான சந்தா கட்டணம் என டெலிகாம் துறையை அழித்துக் கொண்டிருக்கிறோம். ட்ராய் இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு முதலீடுகள் மற்றும் நுகர்வோருக்கு இடையேயான ஏற்றத்தாழ்வை சமன் செய்ய வேண்டும்” என்று  தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “சாதரணமாக பயனாளர் ஒருவருக்கு 200- 300 ரூபாய் வரையில் லாபம் கிடைக்கும். அதிகப்படியாக 450- 500 ரூபாய் வரையில் லாபம் இருக்கும். ஆக சராசரியாக என்னுடைய லாபம் பயனாளர் ஒருவருக்கு 300 ரூபாய். அமெரிக்க டாலர் மதிப்பில் மாதம் 4 டாலர் வருமானம்.  உலகத்திலேயே அதிகப்படியான சேவைகளை வழங்கிவிட்டு இவ்வளவு குறைவான கட்டணம் இந்தியாவில் மட்டுமே உள்ளது. தேவையில்லாமல் இத்துறையே அழித்து வருகிறோம். அதனால்தான் இவ்விவகாரத்தில் ட்ராய் உடனடியாகத் தலையிட வேண்டும் என்கிறேன்” என்றுள்ளார்.


மேலும் பார்க்க: மஹிந்திரா குழுமத் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ஆனந்த் மஹிந்திரா..!

 
First published: December 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்