ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்திய ரயில்வே ஒரு புதிய நற்செய்தியை தெரிவித்துள்ளது. மும்பை சேர்ந்த ரயிலோஃபை என்ற நிறுவனம் வாட்சப் மூலம் பிஎன்ஆர் நிலை மற்றும் ரயில் தற்போது எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப் போன்ற நேரடி நிலவரங்களை தெரிவிக்கும் வாட்ஸ் அப் சாட்பாட் ஒன்றை தயாரித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் தன்னுடைய பிஎன்ஆர் நம்பரை வாட்ஸ் அப்பில் என்டர் செய்வதன் மூலமாகவே தங்களுக்கு வேண்டிய தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த சேவைகளை நீங்கள் பெறுவதற்கு ரயில்வே விசாரணை எண்ணான 9881193322 ஐ உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் சேவ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வாட்ஸ் அப்பை திறந்து ரயில்வே சாட்பாட் நம்பரை எடுத்து உங்களது பத்து இலக்க பி என் ஆர் நம்பரை டைப் செய்து அனுப்ப வேண்டும். உடனடியாக சாட் பாட்டானது உங்களது பிஎன்ஆர் நிலை, ரயிலின் நேரடி நிலவரம் மற்றும் இதர தகவல்களையும் உங்களுக்கு அளிக்கும்.
இதன் பிறகு அந்த சாட்பாட்டானது தானாகவே ரயிலை பற்றிய அறிவிப்புகளை உங்களுக்கு அனுப்பி கொண்டிருக்கும்.மேலும் 139 என்ற ரயில்வே உதவி மைய எண்ணிற்கு கால் செய்தும் நீங்கள் உங்களுடைய தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கிடையில் கடந்த வியாழக்கிழமை இந்தியா முழுவதும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் சரக்கு ரயில், விரைவு வண்டி, அதிவிரைவு வண்டி மற்றும் பயணிகள் ரயில் உடபட 176 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள ரயில்கள் ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு விதமான காரணங்கள் இருப்பதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இவற்றைத் தவிர 17 ரயில்கள் வேறு பாதைக்கு மாற்றப்பட்டும், 23 ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பயணிகளின் டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்பட்டு விடும் மேலும் டிக்கெட்டுக்கு அவர்கள் செலுத்திய கட்டணம் அவரவர்களின் கணக்குகளுக்கு திருப்பி செலுத்தப்பட்டு விடும். நேரடியாக ரயில் நிலையத்தை அணுகி கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்ற பயணிகள் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுன்டரை அணுகி, டிக்கெட்டுகளை திரும்ப கொடுத்து தங்களது பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கிடையில் பஞ்சாப், டெல்லி, உத்தர பிரதேஷ், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய பகுதிகளுக்கு பயணம் செய்யும் பயணிகள் தங்களது பயணம் செய்யும் ரயிலை பற்றிய விவரங்களை https://enquiry.indianrail.gov.in/mntes என்ற இணையதளத்தின் வாயிலாகவும் அல்லது NTES செயலியின் வாயிலாகவும் கண்டறிந்து அதன் பிறகு தங்களது பயணத்தை திட்டமிடும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian Railways, Train, Train ticket, WhatsApp