Home /News /technology /

WhatsApp-ஐ விட்டு வெளியேற வேண்டுமா? உங்கள் அக்கவுண்ட்டை நிரந்தரமாக டெலிட் செய்ய இதைப்படிங்க..

WhatsApp-ஐ விட்டு வெளியேற வேண்டுமா? உங்கள் அக்கவுண்ட்டை நிரந்தரமாக டெலிட் செய்ய இதைப்படிங்க..

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

WhatsApp | உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை முழுமையாக நீக்க 90 நாட்கள் ஆகலாம் என் வாட்ஸ்அப் அதன் FAQல் குறிப்பிட்டு உள்ளது. மேலும் இந்த 90 நாட்களில் உங்களால் உங்கள் டேட்டாவை அணுக முடியாது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சர்வதேச அளவில் உள்ள மெசேஜிங் ஆப்ஸ்களில் மிக பிரபலமாக இருப்பது வாட்ஸ்அப். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்ப உதவுவதோடு மட்டுமல்லாமல் ஆடியோ, வீடியோ, டாக்குமென்ட்ஸ் உள்ளிட்ட பலவற்றை ஷேர் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

    எனினும் பலர் வாட்ஸ்அப்-பே கதி என்று கிடந்து தங்கள் முக்கியமான வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறார்கள். இப்போதெல்லாம் பள்ளி மாணவர்கள் கூட தனி மொபைல் வைத்துள்ளதால் அவர்களும் படிப்பில் கவனம் செலுத்தாமல், வாட்ஸ்அப்பில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள். காரணம் எதுவாக இருந்தாலும் சில நேரங்களில் இந்த பிரபலமான மெசேஜிங் பிளாட்ஃபார்மிலிருந்து முழுவதுமாக நீங்கள் வெளியேற நினைக்கலாம்.

    உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை டெலிட் செய்ய விரும்பினால் அதற்காக நீங்கள் சில எளிய வழிமுறைகளை பின்பற்றலாம். ஆனால் வாட்ஸ்அப்பின் கூற்றுப்படி உங்கள் அக்கவுண்ட்டை தற்செயலாக ஒருமுறை டெலிட் செய்துவிட்டாலும் கூட, அதை திரும்ப பெற முடியாது. ஆம், உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை டெலிட் செய்து விட்டால். அதன்பின் உங்கள் அக்கவுண்டிற்கான அக்சஸை உங்களால் மீண்டும் பெற முடியாது. எனவே அக்கவுண்ட்டை நிரந்தரமாக டெலிட் செய்யும் முன், உங்கள் WhatsApp டேட்டாவை பேக்கப் எடுத்து கொள்ளுங்கள்.

    Read More : இனி வாட்ஸ்அப் பயன்படுத்துவதற்கும் தனியாகக் கட்டணம் - மகிழ்ச்சியில் டெலிகாம் நிறுவனங்கள்.. ஆனால் யூசர்கள்?


    மேலும் உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை முழுமையாக நீக்க 90 நாட்கள் ஆகலாம் என் வாட்ஸ்அப் அதன் FAQல் குறிப்பிட்டு உள்ளது. மேலும் இந்த 90 நாட்களில் உங்களால் உங்கள் டேட்டாவை அணுக முடியாது. மேலும் மற்ற Facebook நிறுவனங்களுடன் ஷேர் செய்து கொள்ளப்பட்ட எந்த தனிப்பட்ட தகவலும் நீக்கப்படும்.



    ஆண்ட்ராய்டு ஃபோனில் உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை டெலிட் செய்வது எப்படி?

    • முதலில் உங்கள் வாட்ஸ்அப்-ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள்

    • More options என்பதற்கு சென்று Settings-ற்குள் செல்லவும்

    • பின் Account-ற்குள் சென்று இறுதியாக DELETE MY ACCOUNT-ஐ டேப் செய்யவும்

    • இதன் பின் உங்கள் மொபைல் நம்பரை முழு சர்வதேச வடிவத்தில் என்டர் செய்து, DELETE MY ACCOUNT என்பதை டேப் செய்யவும்

    • பின் உங்களுக்கு காண்பிக்கப்படும் லிஸ்ட்டில் இருந்து உங்கள் அக்கவுண்ட்டை ஏன் டெலிட் செய்கிறீர்கள் என்பதற்கான காரணத்தை தேர்ந்தெடுக்கவும்


    இறுதியாக மீண்டும் DELETE MY ACCOUNT-ஐ டேப் செய்யவும். உங்கள் அக்கவுண்ட்டை டெலிட் செய்வது WhatsApp-ல் இருந்து உங்கள் அக்கவுண்டை நீக்குவதோடு, உங்கள் மெசேஜ் ஹிஸ்டிரியை அழிக்கும். நீங்கள் இடம்பெற்றிருக்கும் எல்லா WhatsApp குரூப்களில் இருந்தும் உங்களை நீக்கும்.



    ஐ ஃபோனில் உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை டெலிட் செய்வது எப்படி?

    • முதலில் உங்கள் வாட்ஸ்அப்-ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள்

    • Settings சென்று Account-ற்குள் இருக்கும் DELETE MY ACCOUNT-ஐ டேப் செய்யவும்

    • உங்கள் மொபைல் நம்பரை முழு சர்வதேச வடிவத்தில் என்டர் செய்து, DELETE MY ACCOUNT என்பதை டேப் செய்யவும்

    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Technology, WhatsApp

    அடுத்த செய்தி