ஆதார் பாதுகாப்பு தொடர்பான சமீபத்திய சர்ச்சையை அடுத்து, ஆதார் மோசடிகளை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தொடர் ஆலோசனைகளை தந்து வருகிறது. கடந்த மாத தொடக்கத்தில், UIDAI-இன் பெங்களூரு பிரிவு, ஆதார் எண்களைப் பகிர வேண்டாம் என்று மக்களை எச்சரித்தது. பின்னர் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிக்கை மற்றும் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் எண்களைப் பகிர்ந்து கொள்வதில் ‘சாதாரண விவேகத்தை’ பயன்படுத்தலாம் என்று தெளிவுபடுத்தியது.
ஆனால், ஆதார் மோசடிகள் இந்தியாவில் மிகவும் பொதுவானதாகிவிட்டதால், ஆதாரைப் பயன்படுத்துவதற்கான பாதுகாப்பைச் சுற்றி ஒரு கலந்துரையாடல் சென்று கொண்டிருக்கிறது. ஆதார் அட்டை மோசடிகளைத் தடுக்க, UIDAI ஆனது ஆதார் அட்டையை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்பது குறித்த வழிகாட்டுதல்களை மே மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக ட்வீட் செய்துள்ளது. அதன்படி 7 வழிமுறைகளை அறிவித்துள்ளது.
முதலாவதாக, உங்களுக்கு வழங்கப்பட்ட ஆதாரைச் சரிபார்க்க வேண்டும் என்று சமீபத்திய ட்வீட்டில் கூறியுள்ளது. அதில் உள்ள 12 இலக்க எண்கள் அனைத்தும் ஆதார் எண்கள் அல்ல என்று கூறியது, மேலும் அடையாள சான்றாக ஏற்றுக்கொள்வதற்கு முன்பு ஆதார் எண்ணை அதன் போர்டல் மூலம் சரிபார்க்கும்படி தெரிவித்துள்ளது.
Also Read : Gpay, Paytm, PhonePe பயன்படுத்துகிறீர்களா.? உங்களை பண மோசடியிலிருந்து தடுக்க உதவும் டிப்ஸ்கள் இதோ!
இரண்டாவதாக, ஆதார் OTP-ஐ பகிர வேண்டாம் என்று கூறியுள்ளது. UIDAI குடிமக்கள் ஆதார் OTP-ஐ தங்களுடனேயே வைத்திருக்க வேண்டும் என்றும், ஆதார் மோசடியைத் தடுக்க யாருடனும் பகிர வேண்டாம் என்றும் பரிந்துரைத்துள்ளது. மூன்றாவதாக, பொதுக் கணினிகளில் ஆதாரைப் பதிவிறக்குவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. UIDAI ஆனது பயனர்கள் பொதுக் கணினிகளில் இ-ஆதாரைப் பதிவிறக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது, மேலும் அதிலுள்ள அனைத்து நகல்களையும் நீக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நான்காவதாக, அதிகாரப்பூர்வ போர்ட்டலில் இருந்து மட்டும் ஆதாரைப் பதிவிறக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதன்படி, 12 இலக்க ஆதார் எண்ணை வழங்கும் UIDAI-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து மட்டுமே ஆதாரை பதிவிறக்கம் செய்ய பயனர்களை பரிந்துரைத்துள்ளது. ஐந்தாவதாக, ஆதார் அங்கீகார வரலாற்றைச் சரிபார்க்க வேண்டும். கடந்த 6 மாதங்களில் 50 அங்கீகாரங்களின் ஆதார் அங்கீகார வரலாற்றை நீங்கள் சரிபார்க்கலாம். அங்கீகாரத்தின் சரியான தேதி மற்றும் நேரம் அதன் முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது திட்டமிடப்படாத அங்கீகார உள்ளீடு உள்ளதா என்பதை நீங்கள் கவனிக்க உதவும் என்று தெரிவித்துள்ளது.
ஆறாவதாக, உங்கள் ஆதாரை லாக் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. அதாவது, UIDAI ஆனது ஆதார் பயனர்களை தங்கள் ஆதார் பயோமெட்ரிக்ஸை mAahdaar செயலியைப் பயன்படுத்தி லாக் செய்தாக வேண்டும் என கூறியுள்ளது. அத்துடன், ஏதேனும் தவறான பயன்பாட்டைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. ஏழாவதாக, மாஸ்க்டு ஆதாரைப் பயன்படுத்த கோரியுள்ளது. UIDAI ஆனது மாஸ்க்டு ஆதார் பயன்பாட்டை ஊக்குவித்துள்ளது, இது செல்லுபடியாகும் என்றும், பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் உள்ளது. அதன்படி, இந்த மாஸ்க்டு ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை மட்டுமே காட்டுகிறது.
UIDAI இணையதளத்தின்படி, “தனிநபரின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் தகவல்களைப் பாதுகாப்பது UID திட்டத்தின் வடிவமைப்பில் முக்கிய அம்சமாகும். எனவே தனிநபரின் தகவல்களை மிகவும் பாதுகாப்பாக வைக்க இந்த வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டு உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.