HOME»NEWS»TECHNOLOGY»way of facebook profile lock via mobile and desktop srs ghta
உங்கள் பேஸ்புக் ப்ரொஃபைலை லாக்செய்வது எப்படி?
பேஸ்புக் நிறுவனம் உங்கள் ப்ரொஃபைலை லாக் செய்வதற்கான தனியுரிமை விருப்பங்களை வழங்குகிறது. யூசர்களின் ப்ரொஃபைலை லாக் செய்வதன் மூலம், பேஸ்புக்கில் நண்பர்கள் பட்டியலில் இல்லாத நபர்களுக்கு ப்ரொஃபைல் விபரங்களை காட்டுவது இல்லை.
பேஸ்புக் நிறுவனம் உங்கள் ப்ரொஃபைலை லாக் செய்வதற்கான தனியுரிமை விருப்பங்களை வழங்குகிறது. யூசர்களின் ப்ரொஃபைலை லாக் செய்வதன் மூலம், பேஸ்புக்கில் நண்பர்கள் பட்டியலில் இல்லாத நபர்களுக்கு ப்ரொஃபைல் விபரங்களை காட்டுவது இல்லை. லாக் செய்யப்பட்ட ப்ரொஃபைல் டைம்லைன், ப்ரொஃபைல் படம் மற்றும் கவர் போட்டோ, ஸ்டோரீஸ் மற்றும் நியூ போஸ்ட் புகைப்படங்கள் நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே காண்பிக்கும். மேலும், உங்களின் கணக்கில் உள்ள 'பப்ளிக்' பதிவுகள் இனி பொதுவில் இருக்காது மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே தெரியும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உங்கள் பேஸ்புக் ப்ரொஃபைலை லாக் செய்ய விரும்பினால், நீங்கள் அதை மொபைல் பயன்பாட்டிலிருந்து அல்லது உங்கள் டெஸ்க்டாப் மூலமாக செய்யலாம். இருப்பினும் Android யூசர்களுக்கு மட்டுமே இந்த விருப்பம் நடைமுறையில் உள்ளது. உங்கள் பேஸ்புக் ப்ரொஃபைலை மொபைல் ஆப் மற்றும் டெஸ்க்டாப் வழியாக எப்படி லாக் செய்வது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,
மொபைல் ஆப் மூலம் உங்கள் ப்ரொஃபைலை லாக் செய்யும் முறைகள் :
* முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் பேஸ்புக் ஆப்பை திறந்து உங்கள் ப்ரொஃபைலை கிளிக் செய்யவும்.
* அதில் 'Add to Story' என்பதற்கு அடுத்தபடியாக மூன்று புள்ளிகள் கொண்ட மெனு ஐகான் இருக்கும்.
* அதை கிளிக் செய்தால் Lock Profile என காண்பிக்கப்படும். அதனை கிளிக் செய்யுங்கள், இப்போது ஒரு புதிய பக்கத்தில் உங்கள் ப்ரொபைல் லாக் செய்யப்பட்டால் எவ்வாறு இயங்குகிறது என்பதை பற்றிய தகவல் வரும்.
* பின்னர் ‘You Locked Your Profile' என்று ஒரு பக்கம் காட்டும், அதில் OK .என்பதை கிளிக் செய்தால் போதும், ப்ரொபைலை லாக் ஆகிவிடும்.
டெஸ்க்டாப் மூலம் உங்கள் ப்ரொபைலை லாக் செய்யும் முறைகள் :
* இப்போது உங்கள் டேப்பில் ‘www' -க்கு பதிலாக ‘m' என டைப் செய்யுங்கள், இப்போது URL ‘m.facebook.com/yourprofilename' என இருக்கும்.
* இப்பொது திறக்கும் பக்கத்தில் உள்ள Lock Your Profile விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.
* அதில் உள்ள மூன்று புள்ளிகளை க்ளிக் செய்தால், Lock Profile என காண்பிக்கப்படும். அதனை கிளிக் செய்யுங்கள்.
* பின்னர் 'You Locked Your Profile' என்று பாப்-அப் மெசேஜ் ஒன்றை நீங்கள் காண முடியும், இப்போது OK என்பதை கிளிக் செய்யவும். அவ்வளவு தான் உங்களின் ப்ரொபைல் லாக் செய்யப்பட்டது.