முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ஆபாசப் படம் பார்ப்பவரா நீங்க? - உஷார்.. இந்த லேட்டஸ்ட் மோசடியில் நீங்களும் சிக்கலாம்!!

ஆபாசப் படம் பார்ப்பவரா நீங்க? - உஷார்.. இந்த லேட்டஸ்ட் மோசடியில் நீங்களும் சிக்கலாம்!!

Latest Online Fraud |  இந்தியாவில் ஆபாச இணையதளங்கள் தடை செய்யப்பட்டாலும், அரசு ஒவ்வொருவரின் கணினியையும், தனிப்பட்ட முறையில் கண்காணிப்பது இல்லை.

Latest Online Fraud | இந்தியாவில் ஆபாச இணையதளங்கள் தடை செய்யப்பட்டாலும், அரசு ஒவ்வொருவரின் கணினியையும், தனிப்பட்ட முறையில் கண்காணிப்பது இல்லை.

Latest Online Fraud | இந்தியாவில் ஆபாச இணையதளங்கள் தடை செய்யப்பட்டாலும், அரசு ஒவ்வொருவரின் கணினியையும், தனிப்பட்ட முறையில் கண்காணிப்பது இல்லை.

  • Last Updated :

நாளுக்கு நாள் இணைய பயன்பாடு அதிகரித்து வரும் அதேநேரத்தில், ஆன்லைன் மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. அந்த வகையில், தற்போது ஆன்லைனில் பழைய மோசடி முறை ஒன்று மீண்டும் தலைதுக்கியுள்ளது.

இதுதொடர்பாக சமீபத்தில் வந்த தகவல்களின்படி, ஆபாச இணையதளங்களை பார்த்துக்கொண்டிருப்பவர்களின் திரையில் திடீரென போலியான பாப்-அப் ஒன்று தோன்றும் அதில், பார்த்துக்கொண்டிருப்பவர்களின் பிரவுசர் ஆனது லாக் ஆகிவிட்டதாக எச்சரிக்கை கொடுக்கும். இதுபோல, கூகுள் க்ரோம் பிரவுசரில் தோன்றும் அந்த சந்தேகத்திற்குரிய URL மூலம் நடக்கும் மோசடி தொடர்பாக ஸ்க்ரீன் ஷாட் ஆதாரங்களைகளை வெளியிட்டு இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ராஜசேகர் ராஜாரியா தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, ஆன்லைனில் ஆபாசப் படங்களை பார்த்ததால், உங்களது பிரவுசர் லாக் ஆகவிட்டதாக கூறி முழு திரையை மறைத்தது போல ஒரு பாப்-அப் தோன்றும். தொடர்ந்து, அந்த பாப்-அப் பிரவுசர் லாக்கை எடுப்பதற்கு பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறும். மேலும், அந்த பாப்-அப், பார்ப்பதற்கு சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் போன்றே தோற்றமளிக்கும் வகையில் இருக்கும். அதில், 173 - 279 ஆணையின் கீழ் பயனரின் கணினி முடக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கும். அதேபோல், இந்திய சட்டத்தால் தடைசெய்யப்பட்ட இணையதளத்தை பார்த்ததால், தங்களது பிரவுசர் முடக்கப்பட்டுள்ளதாக பயனரை எச்சரிக்கும்.

Also read:    வக்கிர புத்தி படைத்த தந்தையால் மைனர் சிறுமிக்கு சேர்ந்த அவலம்!!

மேற்கொண்ட தகவல்களை பார்த்து படபடத்து போயிருக்கும் பயனர்கள் செய்வதறியாது, சிறிது நேரம் நிச்சியம் திகைத்து நிற்பார்கள். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் அந்த மோசடி கும்பல், அந்த பாப்-அப் மூலம், முடக்கப்பட்ட கணினியை ஆன்லாக் செய்வதற்கு ரூ.29.000 அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கும். இதற்கும் அசராத பயனர்களை தங்களது வழிக்கு கொண்டு வரும் வகையில், அபராதம் செலுத்தத் தவறினால், அந்த கணினி பயன்படுத்துபவர்கள் குறித்த விவரங்கள் குற்றவியல் நடவடிக்கைகளுக்காக அமைச்சகத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கும். இந்த கட்டணத்தை செலுத்துவதற்கு பயனர்களுக்கு 6 மணி நேரம் வரை அவகாசம் வழங்கப்படுவதாகவும் அந்த பாப்-அப் தெரிவிக்கும்.

தொடர்ந்து, அதில் கட்டணம் செலுத்துவதற்கான விவரங்களும் தோன்றும், பயனர்கள் விசா அல்லது மாஸ்டர் கார்டுகளை பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம் என்ற தகவலையும் தெரிவிக்கும். பயனர்களின் பதட்டத்தை சாதகமாக பயன்படுத்தி, அசந்தவர்களின் தலையில் எளிதாக மிளகாய் அறைத்து, பெரும் தொகையை பதம் பார்த்துவிடும்.

இந்தியாவில் ஆபாச இணையதளங்கள் தடை செய்யப்பட்டாலும், அரசு ஒவ்வொருவரின் கணினியையும், தனிப்பட்ட முறையில் கண்காணித்து தடைசெய்யப்பட்ட இணையதளங்களை பயன்படுத்துவோரை பின்தொடர்ந்து, பார்ப்பது இல்லை. சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி மக்களை ஏமாற்றி இதுபோன்ற மோசடி நடந்து வருகிறது.

இதுபோன்ற மோசடியில் நீங்கள் சிக்காமல் இருப்பதற்கு, ஆபாசப்படங்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அதையும், மீறி அதனை பார்க்கும்பட்சத்தில், உங்கள் கணினியின் திரையில் தோன்றும் இதுபோன்ற பாப்-அப்களை, க்ளோஸ் செய்து விட்டால், இந்த மோசடியில் இருந்து எளிதாக தப்பிவிடலாம். ஒருவேளை அந்த பாப்-அப் பிரவுசரை க்ளோஸ் செய்ய முடியவில்லை என்றால், உங்கள் கணினியின் டாஸ்க் மேனேஜருக்கு சென்று (ctrl+alt+delete) அந்த பிரவுசரின் செயல்பாட்டை நிறுத்திவிடலாம். இந்த முறைகள் எதுவும் உங்களுக்கு உதவவில்லை என்றாலும், கணினியை ஷட் டவுன் செய்துவிட்டால், இந்த மோசடியில் இருந்து தப்பிவிடலாம் என்று ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ‘முட்டாள், சன் ஆஃப் எ பிட்ச்’- நிருபர் மீது பாய்ந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

First published:

Tags: Online Frauds, Porn websites, Scam