Home /News /technology /

அடிதூள்! இனி விருப்பமானவர்களுடன் பாக்கலாம்... இன்ஸ்டாகிராமில் அறிமுகமான 'வாட்ச் டுகெதர்' அம்சம்...

அடிதூள்! இனி விருப்பமானவர்களுடன் பாக்கலாம்... இன்ஸ்டாகிராமில் அறிமுகமான 'வாட்ச் டுகெதர்' அம்சம்...

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

Instagram Work Together Option | நீங்கள் எந்த கன்டென்ட்-ஐ கிளிக் செய்தாலும், அது வீடியோ காலில் பங்கேற்பவர்களுடன் பகிரப்படும், அவ்வளவு தான், ரொம்பவே சிம்பிள்!

    பிரபல போட்டோ ஷேரிங் பிளாட்ஃபார்ம் ஆன இன்ஸ்டாகிராம் அதன் தளத்தில் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதனொரு பகுதியாக, தன் யூசர்களுக்கு புதிய மெசேஜிங் அனுபவத்தை வழங்கும் நோக்கத்தின் கீழ் பேஸ்புக்கிற்கு சொந்தமான இந்த இயங்குதளம் 'வாட்ச் டுகெதர்' என்கிற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

    பெயர் குறிப்பிடுவது போலவே, இந்த அம்சம் உங்கள் நண்பர்களுடன் வீடியோ கால் வழியாக ஐஜிடிவி வீடியோக்கள், ரீல்ஸ் மற்றும் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க அனுமதிக்கிறது. அதாவது நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பேசும் அதே நேரத்தில் வீடியோக்களையும் பார்க்கலாம். இந்த அம்சம் க்ரூப் கால்களிலும் செயல்படுகிறது. இன்ஸ்டாகிராமில் அணுக கிடைக்கும் 'வாட்ச் டுகெதர்' அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்:

    1. உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் ஸ்மார்ட்போனில் உள்ள இன்ஸ்டாகிராம் ஆப்பை திறக்கவும்.

    2. பின்னர், ஸ்க்ரீனில் மேல் வலது மூலையில் உள்ள மெசெஞ்சர் ஐகானை க்ளிக் செய்யவும்.

    3. இப்போது கால்ஸ் செக்ஷனுக்கு சென்று, நீங்கள் வீடியோக்களைப் பார்க்க விரும்பும் உங்கள் நண்பர்களுடனான வீடியோ கால்-ஐ தொடங்கவும்.

    4 .வீடியோ கால் தொடங்கியவுடன், ஸ்க்ரீனின் அடிப்பகுதியில் உள்ள மீடியா பட்டனை கிளிக் செய்யவும்.

    5. நீங்கள் ஒன்றாக பார்க்க விரும்பும் கன்டென்ட்-ஐ கிளிக் செய்யவும். நீங்கள் விரும்பிய போஸ்ட், நீங்கள் சேவ் செய்த போஸ்ட், பேஸ்புக் வாட்ச், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் பிறவற்றில் இருந்து கன்டென்ட்-ஐய தேர்வு செய்யலாம்.

    6. நீங்கள் எந்த கன்டென்ட்-ஐ கிளிக் செய்தாலும், அது வீடியோ காலில் பங்கேற்பவர்களுடன் பகிரப்படும், அவ்வளவு தான், ரொம்பவே சிம்பிள்!

    சமீபத்தில், இன்ஸ்டாகிராம் அதன் தளத்தில் ஒரு புதிய "வாட்ஸ்அப் போன்ற" ஒரு அம்சத்தையும் சேர்த்தது, அதன் கீழ் யூசர்கள் இன்பாக்ஸுக்கு செல்லாமல் அல்லது அவர்கள் பார்க்கும் ஃபீடில் இருந்து வெளியேறாமல் ஒரு மெசேஜிற்கு ரிப்ளை செய்ய முடியும். இந்த அம்சத்தின் அறிமுகத்திற்கு முன்னதாக, ஒரு யூசர் தான் இருக்கும் ஃபீடில் இருந்து அல்லது தான் பார்க்கும் போஸ்டில் இருந்து வெளியேற வேண்டும், பிறகு இன்பாக்ஸிற்கு சென்று மெசேஜிற்கு பதிலளிக்க வேண்டும், ஆனால் இனி அதற்கு அவசியம் இருக்காது. இந்த அம்சத்தின் மூலம், நோட்டிபிஃகேஷன் வழியாகவே நீங்கள் இன்ஸ்டாகிராம் டிஎம்-க்கு ரிப்ளை செய்ய முடியும்.

    மேலும் யூசர்கள் இப்போது எந்த நோட்டிபிஃகேஷனும் இல்லாமல் மற்ற யூசர்களுக்கு ஒரு சைலன்ட் மெஸேஜையும் அனுப்பலாம். பெறுநருக்கு தேவையற்ற நோட்டிபிஃகேஷன்களை அனுப்பாமல் மெசேஜ் செய்ய விரும்பும் யூசர்களுக்கு இந்த அம்சம் மிகவும் உதவியாக இருக்கும். ஒரு சைலன்ட் மெசேஜை அனுப்புவது மிகவும் எளிது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நீங்கள் அனுப்ப விரும்பும் மெசேஜிற்கு முன் @silent என்று டைப் செய்ய வேண்டும், அவ்வளவு தான்!
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Instagram, Technology

    அடுத்த செய்தி