ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

உங்கள் ஃபோனில் 5ஜி சேவையை பயன்படுத்த விரும்புகிறீர்களா.? - எப்படி வேலை செய்யும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.!

உங்கள் ஃபோனில் 5ஜி சேவையை பயன்படுத்த விரும்புகிறீர்களா.? - எப்படி வேலை செய்யும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.!

5ஜி சேவை

5ஜி சேவை

5G Network | 5ஜி இணையச் சேவையானது 4ஜியை விட 10 மடங்கு கூடுதல் வேகம் கொண்டதாகும். அதே சமயம், 4ஜி சேவைகளுக்கு நீங்கள் செலுத்தும் கட்டணத்தைக் காட்டிலும் இது கொஞ்சம் கூடுதலாக இருக்கலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

இந்தியாவில் 5ஜி இணைய சேவைகள் கடந்த சனிக்கிழமை தொடங்கப்பட்டன. ஏர்டெல் நிறுவனம் சார்பில் நாட்டின் 8 முன்னணி மாநகரங்களில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் மற்ற நிறுவனங்களும் 5ஜி சேவையை தொடங்க உள்ளன.

ஏற்கனவே பல லட்சக்கணக்கான மக்களிடம் 5ஜி ஃபோன்கள் உள்ள நிலையில், தற்போது புதிதாக ஸ்மார்ட்ஃபோன் வாங்கும் அனைவருமே 5ஜி ஃபோன் வாங்கி வருகின்றனர். 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள 8 முன்னணி மாநகரங்களில் ஏதேனும் ஒரு பகுதியைச் சார்ந்தவராக நீங்கள் இருந்தால், 5ஜி சேவையை உபயோகிக்க வேண்டும் என்ற ஆவல் உங்களிடமும் இருக்கும்.

5ஜி ஃபோன் வைத்திருந்தாலே அந்தச் சேவையை உபயோகப்படுத்திவிட முடியும் என்று அர்த்தம் கிடையாது. உங்கள் நெட்வொர்க்கானது ஜியோ அல்லது ஏர்டெல் அல்லது வோடஃபோன் ஐடியா என எதுவாக இருந்தாலும், உங்கள் 5ஜி ஃபோனில் அச்சேவையை பெற சில நடவடிக்கைகளை பின்பற்றியாக வேண்டும்.

உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் 5ஜி சேவையைப் பயன்படுத்துவது எப்படி

 • முதலில் உங்கள் பகுதியில், உங்கள் நெட்வொர்க் சார்பில் 5ஜி சேவை வழங்கப்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்களின் ஏர்டெல், ஜியோ அல்லது வோடஃபோன் ஐடியா வாடிக்கையாளர் சேவை மையங்களை தொடர்பு கொள்வதன் மூலமாகவும் இதனை தெரிந்து கொள்ளலாம்.
 • உங்கள் பகுதியில் 5ஜி சேவை வழங்கப்படுவது உறுதியானால், ஜியோ, ஏர்டெல் அல்லது வோடஃபோன் ஐடியா நிறுவனம் வழங்கும் 5ஜி அலைவரிசை உங்கள் ஃபோனில் வேலை செய்யுமா என்பதை தெரிந்து கொள்ளவும். அப்படி வேலை செய்யவில்லை என்றால், அதே அலைவரிசையை சப்போர்ட் செய்யும் ஃபோனை வாங்கிக் கொள்ளவும்.
 • இப்போது உங்கள் 5ஜி ஃபோனின் செட்டிங்க்ஸ் பகுதிக்கு செல்லவும். அங்கு மொபைல் நெட்வொர்க் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
 • இப்போது உங்களுக்கான 5ஜி நெட்வொர்க் எது என்பதை தேர்வு செய்யவும்.
 • இந்த சேவையை சிம் 1 அல்லது சிம் 2 என எதில் பெற விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்யவும்.
 • தேர்வு செய்த ஆப்சன்களை ஓகே கொடுத்து செட் செய்து கொள்ளவும்.
 • Also Read : சிம் கார்டு பெற போலி ஆவணம் சமர்பித்தால் ஓராண்டு சிறை - வரைவு மசோதாவில் அதிரடி!

  5ஜி / 4ஜி / 3ஜி/ 2ஜி (ஆடோ ஆப்சன்)

  • இந்த ஆப்சனை தேர்வு செய்வதன் மூலமாக, ஒவ்வொரு சமயத்திலும் உங்கள் பகுதியில் என்ன சிக்னல் கிடைக்கிறதோ, அதை ஃபோன் தாமாகவே தேர்வு செய்து கொள்ளும்.
  • 5ஜி சேவைகள் தொடர்பாக உங்கள் ஃபோனில் ஏதேனும் அப்டேட் இருக்கிறதா என்பதை சரிபார்த்து அப்டேட் செய்து கொள்ளவும்.
  • இப்போது உங்கள் டிவைசை ரீஸ்டார்ட் செய்யவும். இனி 5ஜி சேவை கிடைக்கும் இடங்களில் அது உங்கள் ஃபோனில் வேலை செய்ய தொடங்கும்.
  • Also Read : PC-க்களுக்கான உலகின் முதல் Slidable Display-வை வெளிப்படுத்திய சாம்சங்.!

   எவ்வளவு வேகம் கிடைக்கும்

   5ஜி இணையச் சேவையானது 4ஜியை விட 10 மடங்கு கூடுதல் வேகம் கொண்டதாகும். அதே சமயம், 4ஜி சேவைகளுக்கு நீங்கள் செலுத்தும் கட்டணத்தைக் காட்டிலும் இது கொஞ்சம் கூடுதலாக இருக்கலாம். 5ஜி சேவைகளுக்கான கட்டணங்களை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இன்னும் அறிவிக்கவில்லை.

Published by:Selvi M
First published:

Tags: 5G technology, India, Technology