Home /News /technology /

ட்விட்டர் சி.இ.ஓவாக நியமிக்கப்பட்டுள்ள பராக் அகர்வாலுக்கு எவ்வளவு ஊதியம் தெரியுமா?

ட்விட்டர் சி.இ.ஓவாக நியமிக்கப்பட்டுள்ள பராக் அகர்வாலுக்கு எவ்வளவு ஊதியம் தெரியுமா?

 பராக் அகர்வால்

பராக் அகர்வால்

ட்விட்டர் சி.இ.ஓவாக நியமிக்கப்பட்டுள்ள பராக் அகர்வாலின் ஆண்டு ஊதியம் எவ்வளவு என்று நெட்டிசன்கள் தேடிவருகின்றனர்.

    சமூக ஊடக வலைதளத்தில் ட்விட்டர் முக்கிய தளமாக இருந்துவருகிறது. செய்திகள் உள்ளிட்ட கருத்துகளை மிகவிரைவாக பகிர்ந்துகொள்வதற்கும் உலக அளவில் அரசியல் தலைவர்கள், சினிமா உள்ளிட்ட பல்துறை பிரபலங்கள் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்துகொள்வதற்கு முக்கிய தளமாக ட்விட்டர் இருந்துவருகிறது.

    இந்த ட்விட்டர் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்த ஜாக் டோர்சி திடீரென அவரின் பதவியில் இருந்து விலகியதையடுத்து தற்போது அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) இருந்து வரும் இந்தியரான பராக் அக்ரவால் ட்விட்டரின் புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

    பராக் அக்ரவால் 2011ஆம் ஆண்டு அக்டோபரில் ட்விட்டர் நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலையில் இணைந்தார். அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப தலைவர் ஆக இருந்த ஆடம் மெசிஞ்சர் அப்பதவியில் இருந்து விலகியதை அடுத்து பராக் அக்ரவால் மார்ச் 8, 2018ல் ட்விட்டரின் CTO பொறுப்புக்கு வந்தார்.

    சுந்தர் பிச்சை மற்றும் சத்யா நாதெல்லாவுக்கு பிறகு, இந்திய வம்சாவளியை சேர்ந்த மற்றொருவர் முன்னணி பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளது இந்தியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், பராக் அகர்வாலின் ஆண்டு ஊதியம் என்ன என்று பல தரப்பினரும் தேடிவருகின்றனர்.

    ட்விட்டர் நிறுவனம் அவருக்கு வழங்கிய பணி ஆணையில், அவருக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு ஆண்டு ஊதியமாக ஒரு மில்லியன் அமெரிக்கா டாலர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் இந்திய மதிப்பு 7.5 கோடி ரூபாய் ஆகும். அது தவிர ஆண்டு போனஸாக ஆண்டின் அடிப்படை ஊதியத்தில் 150 சதவீதம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படும். அதைத் தவிர, 12.5 மில்லியன் அமெரிக்கா டாலர் மதிப்புள்ள நிறுவனத்தின் ஸ்டாக் வேல்யூ பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் இந்திய மதிப்பு 93.9 கோடி ரூபாய் ஆகும்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Twitter

    அடுத்த செய்தி