Home /News /technology /

உங்களுடைய பர்சனலான வாட்ஸ்அப் சாட்-களை மறைக்க வேண்டுமா? டிப்ஸ் இதோ

உங்களுடைய பர்சனலான வாட்ஸ்அப் சாட்-களை மறைக்க வேண்டுமா? டிப்ஸ் இதோ

WhatsApp

WhatsApp

WhatsApp Update | நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்களுக்கென்று சில பிரைவசி சாட்கள் இருக்கும். அவற்றை வேறு யாரும் பார்க்க கூடாது ஆனால் அதே சமயம் அதை உங்கள் மொபைலில் இருந்து டெலிட் செய்யவும் கூடாது என்று நினைப்பீர்கள். அதற்கான டிப்ஸ் தான் இந்த பதிவு

மேலும் படிக்கவும் ...
    பல ஆப்ஸ்களை போலவே இலவச மெசேஜிங் சர்விஸான வாட்ஸ்அப் மிகவும் பயனுள்ள சாட்டிங் டூல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. நம்முடைய நம்பர்கள், உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் மெசேஜ்கள், இமேஜ்கள், சுவாரஸ்யமான ஸ்டிக்கர்கள், ஆடியோக்கள், வீடியோக்கள் போன்றவற்றின் மூலம் சாட் செய்ய உதவுகிறது.

    நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்களுக்கென்று சில பிரைவசி சாட்கள் இருக்கும். அவற்றை வேறு யாரும் பார்க்க கூடாது ஆனால் அதே சமயம் அதை உங்கள் மொபைலில் இருந்து டெலிட் செய்யவும் கூடாது என்று நினைப்பீர்கள். நீங்கள் உங்கள் வாட்ஸ்அப் சாட்டை ஒழுங்கமைக்க விரும்புகிறீர்களா..? தனிப்பட்ட சில சாட்களை எப்படி மறைப்பது என்பது பற்றிய வழிகளை தேடுகிறீர்களா?

    உண்மையில், வாட்ஸ்அப்பில் அரட்டையை மறைப்பது எளிது. உங்கள் ஃபோன் ஆண்ட்ராய்டாக இருந்தாலும் ஐபோனாக இருந்தாலும் வாட்ஸ்அப் அரட்டை உரையாடல்களை (WhatsApp chat conversations) மறைப்பது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். WhatsApp உங்களை போன்ற யூஸர்களுக்காக archive chat என்ற அம்சத்தை வழங்குகிறது. இது சாட்களை சிறப்பாக ஒழுங்கமைக்க மற்றும் யூஸர்கள் தங்கள் சாட் லிஸ்ட்டில் இருந்து தனிப்பட்ட அல்லது குரூப் சாட்டை மறைக்க அனுமதிக்கிறது.

    Also Read : டிவியை ரிமோட்டில் மட்டும் ஆஃப் செய்தால் கரண்ட் பில் ஏகிறும் | அதிர்ச்சித் தகவல்


    Archive chat எப்படி செயல்படுகிறது.!

    பிறரின் பார்வையில் இருந்து நீங்கள் மறைக்க விரும்பும் chat-ஐ Archive செய்வது என்பது குறிப்பிட்ட அந்த chat-ஐ டெலிட் செய்யாது அல்லது உங்கள் SD கார்டு அல்லது iCloud -ல் பேக்கப் எடுக்காது. Archived செய்யப்பட்ட chat-கள், குறிப்பிட்ட தனிநபர் அல்லது குரூப் சாட்டிலிருந்து புதிய மெசேஜை பெறும் போது கூட Archive என்பதனுள் தான் இருக்கும்.



    ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப் சாட்களை மறைப்பது எப்படி.?

    நீங்கள் மறைக்க விரும்பும் தனிநபர் அல்லது குரூப் சாட்டை Archive செய்ய நீங்கள் மறைக்க விரும்பும் chat-ஐ சில வினாடிகள் அழுத்தி பிடிக்கவும். பின் குறிப்பிட்ட chat-ஐ லிஸ்ட்டில் இருந்து மறைக்க ஸ்கிரீனின் மேற்புறத்தில் உள்ள காட்டப்படும் ஆப்ஷன்களில் Archive ஆப்ஷனை செலக்ட் செய்யவும். நீங்கள் அனைத்து chat-களையும் Archive செய்ய விரும்பினால் Settings சென்று Chats மற்றும் Chat history செல்ல வேண்டும். பின் Archive all chats என்பதை செலக்ட் செய்ய வேண்டும். Archived செய்யப்பட்ட தனிநபர் அல்லது குரூப் சாட்களை பார்க்க, CHATS ஸ்கிரீனின் மேலே ஸ்க்ரோல் செய்யவும். பின் Archived என்பதை டேப் செய்யவும். Archived-க்கு அடுத்துள்ள எண், எத்தனை Archived செய்யப்பட்ட தனிநபர் அல்லது குரூப் சாட்களில் நீங்கள் படிக்காத மெசேஜ்கள் உள்ளன என்பதைக் குறிக்கிறது.



    ஐபோனில் WhatsApp சாட்களை மறைப்பது எப்படி.?

    தனிப்பட்ட சாட் அல்லது குரூப்பை Archive செய்ய Chats tab-ல், நீங்கள் Archive செய்ய விரும்புவதன் இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும். பின் ஸ்கிரீனில் தெரியும் Archive-வை tap செய்யவும். நீங்கள் அனைத்து சாட்களையும் ஒரே நேரத்தில் Archive செய்ய WhatsApp Settings சென்று பின் Chat பிறகு Archive All Chats செலக்ட் செய்ய வேண்டும். Archived செய்யப்பட்ட சாட்கள் அல்லது குரூப்களை பார்க்க, Chats tab-ன் மேலே ஸ்க்ரால் செய்து Archived Chats என்பதை Tap செய்ய வேண்டும்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Technology, WhatsApp

    அடுத்த செய்தி