• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ஜிமெயிலில் குவியும் ப்ரமோஷ்னல், ஜங்க் மற்றும் சோஷியல் இ-மெயில்களை ஒரே நேரத்தில் எப்படி டெலிட் செய்வது!

ஜிமெயிலில் குவியும் ப்ரமோஷ்னல், ஜங்க் மற்றும் சோஷியல் இ-மெயில்களை ஒரே நேரத்தில் எப்படி டெலிட் செய்வது!

ஜிமெயில்

ஜிமெயில்

முதலில் இன்பாக்ஸ் பை கூகுள்(Inbox by Google) எனப்படும் இமெயில் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

  • Share this:
நமது ஸ்மார்ட் ஃபோன்களில் பெரும்பாலும் இருக்கும் ஜிமெயில் முதல் கூகுள் டிரைவ் வரை, 15 ஜிபி ஃப்ரீ ஸ்பேஸை (free space) கூகுள் நிறுவனம் நமக்கு வழங்குகிறது. 15 ஜிபி-க்கும் மேல் உங்கள் டேட்டாக்களை நீங்கள் சேமித்து வைக்க விரும்பினால் குறிப்பிட்ட அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதால் நம்மில் பெரும்பாலானோர் இந்த 15 ஜிபி லிமிட்டை கிராஸ் செய்வது இல்லை. எனவே கூடுதல் ஸ்பேஸிற்கு கூகுளுக்கு நீங்கள் பணம் கட்ட விரும்பாவிட்டால் இருக்கும் ஃப்ரீ ஸ்பேஸை திறம்பட நிர்வகிப்பது எப்படி என்பதை அறிந்து கொள்வது முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

ஒவ்வொரு கூகுள் அக்கவுண்ட்டும் 15 ஜிபி ஃப்ரீ ஸ்டோரேஜுடன் தான் துவக்கப்படுகிறது. கூகுள் ஃபோட்டோஸ், கூகுள் டிரைவ், ஜி மெயில் உள்ளிட்டவற்றுக்கு இந்த ஃப்ரீ ஸ்டோரேஜ் ஷேர் செய்யப்படுகிறது. ஜி மெயில் அக்கவுண்ட்டை துவக்கும் போது 15 ஜிபி ஃப்ரீ ஸ்டோரேஜ் பலருக்கும் போதுமானதாக தோன்றும். ஆனால் தற்போது டாக்குமெண்ட்ஸ், ஃபைல்ஸ் மற்றும் பிக்ச்சர்களின் சைஸ்ஒரு சில மெகாபைட்டுகளில் உள்ளன. எனவே பெரும்பாலான யூஸர்களுக்கு இந்த ஃப்ரீ ஸ்டோரேஜ் போதுமானதாக இருப்பதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கூகுள் அதன் ஸ்டோரேஜ் பிளான்களை கூகுள் ஒன் சந்தா சப்ஸ்கிரிப்ஷன் கீழ் கொடுக்கிறது. இந்திய யூஸர்களுக்கு, கூகுள் ஆப்ஸ் மற்றும் சர்வீஸ்களில் பகிரப்படும் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் (cloud storage) மாதத்திற்கு ரூ.130 மற்றும் ஆண்டுக்கு ரூ.1,300 என்ற விலையில் துவங்குகிறது. ஒரு வருடத்திற்கான சப்ஸ்கிரிப்ஷன் கட்டணமாக ரூ.1,300 செலுத்திய பிறகு, கூகுள் ஃபோட்டோஸ், கூகுள் டிரைவ், ஜி மெயில் உள்ளிட்டவற்றில் பகிரப்படும் Google டிரைவில் யூஸர்கள் 100GB ஸ்டோரேஜை பெறலாம். ஒருவேளை இந்த ஸ்டோரேஜ் அளவும் போதவில்லை என்றால் யூஸர்கள், வருடத்திற்கு ரூ.2,100 அல்லது மாதத்திற்கு ரூ.210 செலுத்தி 100GB ஸ்டோரேஜை இருமடங்காக்கி கொள்வதன் மூலம் 200GB ஸ்டோரேஜை பெறலாம்.

அட இந்த ஸ்டோரேஜேல்லாம் எந்த மூலைக்கு என்று நினைக்கும் சில முக்கிய நிறுவனங்கள் அல்லது தனி நபர்களுக்கென பெரிய ஸ்டோரேஜ் பிளான் ஒன்றையும் கூகுள் கொடுத்து உள்ளது. ஆண்டுக்கு ரூ.6,500 அல்லது மாதத்திற்கு ரூ.650 செலுத்துவதன் மூலம் 2TB ஸ்டோரேஜ் பிளானை யூஸர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். பெரும்பாலான யூஸர்கள் ஸ்டோரேஜிற்காக கூடுதல் செலவை விரும்பாததால், ஸ்பேஸை எவ்வாறு மேனேஜ் செய்வது என்பதை அறிந்திருக்க வேண்டும்.

15 ஜிபி ஃப்ரீ ஸ்டோரேஜ் அல்லது காசு கொடுத்து எக்ஸ்ட்ரா ஸ்டோரேஜ் வாங்கி இருந்தாலும் கூட, தேவையில்லாமல் ஸ்டோரேஜை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் அனைத்து ப்ரமோஷ்னல், ஜங்க் மற்றும் சோஷியல் இ-மெயில்களை, தங்களது ஜிமெயிலில் இருந்து டெலிட் செய்வது முக்கியமான ஒன்று.

Also read... உங்க ஆதாரில் வேறொருவர் சிம் கார்டு வாங்கியிருக்கிறாரா? கண்டுபிடிப்பது எப்படி?

* முதலில் இன்பாக்ஸ் பை கூகுள்(Inbox by Google) எனப்படும் இமெயில் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

* அந்த app-ஐ ஓபன் செய்து பீரியாரிட்டி இன்பாக்ஸை ( priority inbox ) செலக்ட் செய்ய வேண்டும். இங்கே உங்கள் அனைத்து இன்பாக்ஸ் மெயில்களும் அன்ரீட், பீரியாரிட்டி, அப்டேட்ஸ், ஃபோரம்ஸ் , பர்ச்சேஸ் மற்றும் ப்ரமோஷன் உள்ளிட்ட பல வகைகளாக வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.

* இதன் மூலம் உங்கள் எல்லா இமெயில்களும் ஆட்டோமெட்டிக்காக மேலே குறிப்பிட்ட வகைகளில் மார்க் செய்யப்பட்டிருக்கும்.

* இப்போது நீங்கள் ஒவ்வொரு மெயிலாக செலக்ட் செய்யாமல் ஒரு குறிப்பிட்ட பிரிவில் இருக்கும் உங்கள் எல்லா மெயில்களையும் ஒரே நேரத்தில் டெலிட் அல்லது ஆர்ச்சிவ் செய்யலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: