Home /News /technology /

உங்கள் பழைய சாட்களை இழக்காமல் வாட்ஸ்அப் எண்ணை மாற்ற வேண்டுமா? இதோ டிப்ஸ்!

உங்கள் பழைய சாட்களை இழக்காமல் வாட்ஸ்அப் எண்ணை மாற்ற வேண்டுமா? இதோ டிப்ஸ்!

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

படிப்படியான செயல்முறை முடிந்ததும், உங்கள் வாட்ஸ்அப்பை ரீஸ்டார்ட் செய்யும்படி யூசர்கள் கேட்கப்படுவார்கள் மற்றும் மற்றும் அதற்கான OTP கேட்கப்படும். OTP ஐ உள்ளிட்டதும், உங்கள் கணக்கு திறக்கப்படும் அதில் உங்கள் பழைய சாட்கள் அப்படியே இருக்கும்.

மேலும் படிக்கவும் ...
ஒரு வாட்ஸ்அப் யூசர் தனது ஸ்மார்ட்ஃபோன் எண்ணை மாற்றும்போது, ​​அவர்கள் சந்திக்க நேரிடும் மிக பொதுவான பிரச்சனை என்னவென்றால், பழைய எண்ணில் இருந்த பழைய சாட் ஹிஸ்டரிகளை அவர்களால் மீட்டெடுக்க முடியாது. இதனால் தனிப்பட்ட அல்லது வணிகம் தொடர்பான வாட்ஸ்அப் சாட்களை இழக்க நேரிடுகிறது.

இருப்பினும், உங்கள் Android மற்றும் iOS சாதனங்களில் இதுபோன்ற பழைய சாட் டேட்டாக்களை மீட்டெடுக்க வழி இருக்கிறது. இந்த செயல்முறைக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) தேவைப்படும் என்பதால், புதிய எண் பயன்பாட்டில் இருக்கும்போது மட்டுமே இந்த அம்சம் செயல்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சரி எப்படி இதனை செய்வது என்பதை பற்றி பின்வருமாறு காண்போம்.

* உங்கள் போனில் உள்ள வாட்ஸ்அப் ஆப்பில் 'செட்டிங்ஸ்' என்பதற்குச் செல்லவும்

* அதில் உங்கள் 'அக்கவுண்ட்டை' திறந்து, 'எண்ணை மாற்று' (Change Number) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், நெக்ஸ்ட் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

* உங்களின் பழைய மற்றும் புதிய மொபைல் எண்களை உள்ளிடவும். பிறகு 'next' பட்டனை பிரஸ் செய்ய வேண்டும்.

* உறுதிப்படுத்தலுக்காக ஒரு புதிய செய்தி இப்போது திரையில் தோன்றும்.

* அதில் நீங்கள் பல விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கலாம். அதாவது அனைத்து தொடர்புகள் (All Contacts), என்னிடம் உள்ள தொடர்புகள் (My Contacts) மற்றும் தனிப்பயன் (custom).

* இதில் ஏதேனும் ஒன்றை கிளிக் செய்தவுடன் உங்கள் தொடர்புத் தகவல் தானாகவே புதுப்பிக்கப்படும்.

* இப்போது, ​​'done' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

Also read... புகைப்படங்களை மொபைலில் இருந்து உங்களின் லேப்டாப்பிற்கு எளிதாக பகிர்ந்து கொள்வதற்கான வழிகள்

படிப்படியான செயல்முறை முடிந்ததும், உங்கள் வாட்ஸ்அப்பை ரீஸ்டார்ட் செய்யும்படி யூசர்கள் கேட்கப்படுவார்கள் மற்றும் மற்றும் அதற்கான OTP கேட்கப்படும். OTP ஐ உள்ளிட்டதும், உங்கள் கணக்கு திறக்கப்படும் அதில் உங்கள் பழைய சாட்கள் அப்படியே இருக்கும். ஆனால் உங்கள் மொபைல் எண் திறம்பட மாற்றப்பட்டிருக்கும்.

Also read... புதிதாக 17.6 லட்சம் மொபைல் யூஸர்களை பெற்ற ஜியோ - பலத்த அடிவாங்கிய ஏர்டெல் மற்றும் விஐ!

குறிப்பிடத்தக்க வகையில், மெட்டாவுக்குச் சொந்தமான செய்தியிடல் பயன்பாடான WhatsApp ஆனது உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் மற்றும் விரும்பப்படும் ஆப்களில் ஒன்றாகும். மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் காண்டாக்டில் இருக்க மட்டுமல்லாமல், தங்கள் வணிகங்களை நடத்தவும் ஆப்பை பயன்படுத்துகின்றனர்.

வாட்ஸ்அப் உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் குறுஞ்செய்தி தளமாகும். இந்தியாவில் கூட இந்த செயலியை மில்லயன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். யூசர்கள் தங்கள் அனுபவத்தை அனுபவிக்கும் வகையில், மெசேஜிங் செயலியில் புதிய அம்சங்களைச் சேர்ப்பதை WhatsApp உறுதிசெய்வதற்கு இதுவே முக்கிய காரணம்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: WhatsApp

அடுத்த செய்தி