டிஸ்னி+ ஹாட்ஸ்டார் OTT தளத்தை இலவசமாக அணுக வேண்டுமா? இதோ ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்ஸ்!

disney hotstar

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை உள்ளடக்கிய ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்குகளின் முழுமையான பட்டியல்

  • Share this:
ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களுடன் OTT தளங்களுக்கான இலவச சந்தாக்களை வழங்குவது இப்போது அனைத்து நெட்ஒர்க்குகளிலும் வழக்கமாகி விட்டது. நீங்கள் விரும்பும் OTT சந்தாக்களை பெற தனியாக பணம் செலுத்துவதற்கு பதிலாக, நெட்ஒர்க்குகள் வழங்கும் ரீசார்ஜ் திட்டங்கள் மூலம் கிடைக்கும் இலவச சந்தா உண்மையில் உங்கள் செலவை குறைக்கும். மேலும் OTT ஸ்ட்ரீமிங் தளங்களில் ஸ்ட்ரீமிங் திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளுக்கான உள்ளடக்கத்திற்கான அணுகலையும் ரீசார்ஜ் திட்டங்கள் வழங்குகின்றன.

அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ தங்கள் வடிக்கையாளர்களுக்காக ப்ரீபெய்ட் மொபைல் ரீசார்ஜ் பேக்குகளுடன் ரூ.499 மதிப்புள்ள டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ப்ரீபெய்ட் திட்டங்களால் ஏர்டெல் மற்றும் Vi ப்ரீபெய்டு நிறுவனத்திற்கு எதிரான போட்டியை வலுப்படுத்தியுள்ளது. தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை உள்ளடக்கிய ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்குகளின் முழுமையான பட்டியல் குறித்து பின்வருமாறு காண்போம்.

ரூ.499 -க்கு ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்: இந்த பேக்கின் வாலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் இந்த பிளான் ஒரு நாளைக்கு 3 GB டேட்டாவை வழங்குகிறது. கூடுதலாக 6GB போனஸ் 4G டேட்டாவையும் இந்த பேக்குடன் பெறலாம். முக்கியமாக இந்த ரீசார்ஜ் பிளான் 28 நாட்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜியோ டிவி, ஜியோசினிமா, ஜியோ நியூஸ், ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் ஆகியவற்றிக்கான அணுகலை வழங்குகிறது.

Also Read: ரூ.5,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் தரமான போர்ட்டபிள் ஸ்பீக்கர்களின் பட்டியல்.!

ரூ .666 -க்கு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்: இந்த பேக்கின் வாலிடிட்டி 56 நாட்கள் ஆகும். மேலும் ஒரு நாளைக்கு 2 GB டேட்டாவை வழங்குகிறது. இதுதவிர லோக்கல் மற்றும் நேஷனல் அளவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் பெறலாம். முக்கியமாக ஜியோ டிவி, ஜியோசினிமா, ஜியோ நியூஸ், ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் ஆகியவற்றுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கான சந்தா இந்த பேக்குடன் பண்டில் செய்யப்பட்டுள்ளது.

ரூ. 888 -க்கு ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்: இந்தபேக் மொத்தம் 84 நாட்கள் வாலிடிட்டியுடன் வருகிறது. நாள் ஒன்றுக்கு 2 GB டேட்டாவை வழங்குகிறது. கூடுதலாக 5 GB போனஸ் 4G டேட்டாவும் இதனுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பேக்கில் ஜியோ டிவி, ஜியோசினிமா, ஜியோ நியூஸ், ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் ஆகியவற்றுடன் தொகுக்கப்பட்ட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கும்.

Also Read: தாலிபான்களால் தலைமறைவாக வாழும் 200 பெண் நீதிபதிகள்!

ரூ. 2599-க்கு ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்: வாடிக்கையாளர்களுக்கான இந்த அதிகபட்ச ஸ்பெக் திட்டம் ஒரு ஆண்டு வாலிடிட்டியை வழங்குகிறது. அதாவது 365 நாட்கள் ஆகும். மேலும் பேக் செல்லுபடியாகும் காலம் வரை ஒரு நாளைக்கு 2GB டேட்டா கிடைக்கும். இந்த பேக் உடன் 10GB போனஸ் 4G டேட்டாவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பேக்கும் வருடம் முழுவதும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கான இலவச சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த பிளானில் ஜியோ டிவி, ஜியோசினிமா, ஜியோ நியூஸ், ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் ஆகியவை உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published: