• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • நிறுவனத்தை இழுத்து மூட வேண்டியதுதான் - விரக்தியில் வோடபோன் தலைவர்

நிறுவனத்தை இழுத்து மூட வேண்டியதுதான் - விரக்தியில் வோடபோன் தலைவர்

வோடபோன்

வோடபோன்

இந்திய டெலிகாம் துறையின் வருங்காலத்தைக் காப்பாற்ற அரசு நிவாரணம் அளிக்க வேண்டும் என இந்நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
    அரசு நிவாரண உதவி தரவில்லை என்றால் வோடபோன் ஐடியா நிறுவனத்தை இழுத்து மூட வேண்டியதுதான் என அந்நிறுவனத் தலைவர் குமாரமங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார்.

    டெலிகாம் நிறுவனங்கள் தங்களது வருவாயின் ஒரு பகுதியை அரசுக்கு செலுத்த வேண்டும் என்பது தொலைத்தொடர்பு கொள்கை விதி ஆகும். ஆனால், தொகை செலுத்தாமல் இருக்க வருமானத்தைக் குறைத்துக் காண்பித்து சிக்கலில் சிக்கிக்கொண்டுள்ளது வோடபோன் ஐடியா நிறுவனம். இந்த வழக்கில் மத்திய அரசுக்கு டெலிகாம் நிறுவனங்கள் 1 லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    ஜியோவின் வருகையால் வீழ்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்த வோடபோன், ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் குற்ற வழக்கில் சிக்கி மேலும் நஷ்டமடைந்தன. இந்திய டெலிகாம் துறையின் வருங்காலத்தைக் காப்பாற்ற அரசு நிவாரணம் அளிக்க வேண்டும் என இந்நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன.

    இத்தகைய சூழலில்தான் மத்திய அரசின் நிவாரணம் வரவில்லை என்றால் நிறுவனத்தை இழுத்து மூடுவதைத் தவிர வேறு வழி இல்லை என வோடபோன் ஐடியா தலைவர் குமாரமங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார்.

    மேலும் பார்க்க: காலாவதி ஆகும் வாட்ஸ்அப் கணக்குகள்... இன்டெர்நெட் முடக்கத்தால் காஷ்மீர் அவதி!

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rahini M
    First published: