ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்டு சேவைகளுக்கான கட்டணத்தை நேற்று உயர்த்திய நிலையில், இன்று வோடஃபோன் இந்தியா நிறுவனமும் ப்ரீபெய்டுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
இந்திய தொலைத் தொடர்பு சந்தையில் தனக்கென கணிசமான வாடிக்கையாளர்களை கொண்டிருந்த ஏர்டெல் நெட்வொர்க், ஜியோவின் வருகைக்குப் பின் வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. இதற்கு மற்ற நெட்வொர்க்குகளை விட ஏர்டெல்லின் கட்டணம் சற்று அதிகமாக இருப்பதும் முக்கிய காரணம்.
இந்நிலையில் வாடிக்கையாளர்கள் எதிர்பாராத விதமாக நேற்றைக்கு ஏர்டெல் ப்ரிபெய்டு கட்டணம் 25 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது.
இந்த கட்டண உயர்வு நவம்பர் 26ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஒரு பயனாளர் மூலம் பெறப்படும் சராசரி வருவாயை (ARPU) இதற்கு காரணமாக அந்நிறுவனம் கூறுகிறது. இந்த கட்டண உயர்வை தொடர்ந்து 28 நாட்களுக்கான திட்டத்தின் கட்டணம் 77 ரூபாயில் இருந்து 99 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பேசிக் ப்ளான் ரூ. 79-ல் இருந்து ரூ. 99 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த ப்ளானான ரூ. 149, நவம்பர் 26-க்குப் பின்னர் ரூ. 179 ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ப்ளானை, டேட்டாவை மிக மிக குறைவாக உபயோகிப்போர் பயன்படுத்தி வருகின்றனர். இதன்கீழ் அன் லிமிட்டெட் கால்களை பேசிக் கொள்ள முடியும்.
நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி, 28 நாட்கள் வேலிடிட்டி தரும் ரூ. 249 ப்ளான், இனி ரூ. 299-ஆக உயரவுள்ளது. இதே ப்ளானில், நாள் ஒன்றுக்கு 2 ஜி.பி. தரும் வெர்ஷன், ரூ. 298-ல் இருந்து, ரூ. 359 ஆக உயர்கிறது.
அன் லிமிட்டெட் காலுடன் டேட்டாவை குறைவாக உபயோகிப்போர், 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ. 379 ப்ளானை அதிகம் பயன்படுத்துகின்றனர். இது இனி, ரூ. 455 ஆக உயர்கிறது.
தினசரி டேட்டா உபயோகிப்பவர்கள் லாப அடிப்படையில் ரூ. 598 ப்ளானை பயன்படுத்துகின்றனர். இதில் 84 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் கால், நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும். இந்த ப்ளான் இனி ரூ. 719 ஆக உயரப்போகிறது. இதே ப்ளானில் நாள் ஒன்று 2 ஜிபி டேட்டா வெர்ஷன், ரூ. 698-ல் இருந்து ரூ. 839 ஆக உயர்கிறது.
இந்த நிலையில் ஏர்டெல்லைத் தொடர்ந்து வோடஃபோன் ஐடியாவும் ப்ரிபெய்டு சேவைக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. வோடஃபோன் ஐடியாவின் புதிய கட்டண விபரம்...
அன் லிமிட்டெட் பிளான்களைப் பொருத்த வரையில், ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியாவின் கட்டண உயர்வு ஏறக்குறைய சமமாக உள்ளன. ஏர்டெல், வோடஃபோன் ஐடியாவைத் தொடர்ந்து மற்ற செல்போன் நிறுவனங்களும் கட்டண உயர்வை அறிவிக்குமா அல்லது பழை கட்டணத்தை நீட்டித்து வாடிக்கையாளர்களை ஈர்க்குமா என்பது ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.