முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / வோடபோன் ஐடியா நிறுவனத்தின் சிம் மோசடியால் ₹68 லட்சத்தை இழந்த வாடிக்கையாளர்!

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் சிம் மோசடியால் ₹68 லட்சத்தை இழந்த வாடிக்கையாளர்!

vodafone idea

vodafone idea

வாடிக்கையாளருக்கு சேவையில் கவனக்குறைவாக செயல்பட்டதால் வோடவோன் ஐடியா நிறுவனத்துக்கு 27.5 லட்சம் அபராதம்

  • Last Updated :

வோடபோன் ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சிம் மோசடி காரணமாக வாடிக்கையாளர் ஒருவர் 68 லட்ச ரூபாயை இழந்திருக்கிறார். அவருக்கு 27.5 லட்ச ரூபாயை அந்நிறுவனம் தர வேண்டும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை உத்தரவிட்டுள்ளது.

வாடிக்கையாளர் ஒருவரின் டூப்ளிகேட் சிம் கார்டு, வேறு ஒரு நபருக்கு அளிக்கப்பட்ட நிலையில் அந்த சிம் கார்டை பயன்படுத்தி குறிப்பிட்ட வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்த 68 லட்ச ரூபாயை அபேஸ் செய்திருக்கிறார் டூப்ளிகேட் சிம் கார்டை பெற்றவர். இந்த சம்பவத்தில் சேவையில் அலட்சியம் காட்டிய வோடபோன் ஐடியா நிறுவனத்துக்கு 27.50 லட்ச ரூபாயை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும் என ஐடி துறை உத்தரவிட்டிருக்கிறது.

நடந்தது என்ன?

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணா லால் நைன், கடந்த 2017 மே 25ம் தேதி இவருடைய சிம் கார்டு திடீரென இயங்காமல் முடங்கியது. இதனால் ஜெய்ப்பூரின் ஹனுமன்கர்க் பகுதியில் உள்ள வோடபோன் ஐடியா நிறுவன ஸ்டோருக்கு சென்ற கிருஷ்ணா லால், இது குறித்து புகார் அளித்திருக்கிறார். அவருக்கு புதிய சிம் வழங்கப்பட்டிருக்கிறது, ஆனாலும் அது ஆக்டிவேட் செய்யப்படவில்லை. இது குறித்து அவர் சில முறை நிறுவனத்தினரிடம் முறையிட்டிருக்கிறார்.

இதையடுத்து மீண்டும் ஜெய்ப்பூரில் உள்ள வேறு ஒரு வோடபோன் ஐடியா ஸ்டோருக்கு சென்ற கிருஷ்ணா லால், சிம் ஆக்டிவேஷனுக்காக புகார் கொடுத்தார். இதன் பின்னர் மறுநாள் அவருடைய சிம் ஆக்டிவேட் ஆகியிருக்கிறது. புதிய சிம் கிடைத்த 5 நாட்களுக்கு பின்னர் தான் அவருக்கு நம்பர் ஆக்டிவேட் ஆகியிருந்தது. இதன் பின்னர் கிருஷ்ணா லாலின் ஐடிபிஐ வங்கிக் கணக்கிலிருந்து 68.50 லட்ச ரூபாய் வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதற்காக மெசேஜ்கள் வந்திருக்கிறது. இதனை பார்த்த கிருஷ்ணா லால் அதிர்ந்து போனார்.

Also Read:   10 வயது மகனை கொலை செய்த தந்தை: சடலத்தை அப்புறப்படுத்த உதவிய மனைவி – காதலி!

பின்னர் இது குறித்து ஐடி சட்டப்பிரிவின் கீழ் கிருஷ்ணா லால் புகார் அளித்தார். இதனையடுத்து காவல்நிலையத்துக்கும் புகார் சென்றது.

கிருஷ்ணா லாலின் மொபைல் எண்ணை எந்தவித அடையாள சரிபார்ப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் வோடபோன் ஐடியா நிறுவனம் பானு பிரதாப் என்ற வேறு ஒரு நபருக்கு அளித்திருக்கிறது. அந்த சிம் கார்டில் இணைக்கப்பட்டுள்ள ஐடிபிஐ வங்கிக் கணக்கில் அதிகளவில் பணம் இருந்ததாலும், அதனை தன்னால் வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்ற முடிந்ததாலும் பானு பிரதாப் தனது வங்கிக்கணக்கிற்கு அந்த முழு பணத்தையும் மாற்றியிருக்கிறார்.

Also Read:  லாக் அப்பில் நிர்வாணம்: பெண் போலீசை ஈவ் டீசிங் செய்த கைதி!

இதனையடுத்து அவரிடம் இருந்து 44 லட்ச ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்து கிருஷ்ணா லாலிடம் வழங்கினர். எஞ்சிய பணம் கைக்கு வராததால் ஐடி துறையினரிடம் கிருஷ்ணா லால் முறையிட்டார். இந்த வழக்கை விசாரித்த ராஜஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை சிம் மோசடியில் ஈடுபட்ட வோடபோன் ஐடியா நிறுவனம் இதற்கு பொறுப்பேற்று கிருஷ்ணா லாலுக்கு, 27.50 லட்ச ரூபாயை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் எனவும் தவறினால் வருடத்துக்கு 10% என்ற வட்டியுடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.

எனினும் தொலைத்தொடர்புத்துறையின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றங்களிலும், தீர்பாயங்களிலும் வோடபோன் ஐடியா நிறுவனத்தால் மேல்முறையீடு செய்ய முடியும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Idea, Vi, Vodafone