முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / வோடபோன்-ஐடியாவின் ரூ.1,197க்கான ப்ரீபெய்ட் பிளான் - அட்டகாசமான அறிவிப்பு!

வோடபோன்-ஐடியாவின் ரூ.1,197க்கான ப்ரீபெய்ட் பிளான் - அட்டகாசமான அறிவிப்பு!

Vodafone

Vodafone

வோடபோன்-ஐடியா (Vi) இந்தியாவில் உள்ள அனைத்து வட்டங்களிலும் ரூ. 1,197 ப்ரீபெய்ட் பிளானை விரிவுப்படுத்துகிறது.

  • Last Updated :

இந்தியாவில் Jio நிறுவனத்தின் அறிமுகத்துக்கு பிறகு அதன் பல்வேறு போட்டி நிறுவனங்கள் கடுமையான சரிவைச் சந்தித்தன. இதை சாமர்த்தியமாக கையாண்ட Airtel நிறுவனம் ஓரளவுக்கு சமாளித்துக்கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களை இழக்காமல் உள்ளது. ஆனால் Idea, Vodafone ஆகிய நிறுவனங்கள் கடுமையான சரிவைச் சந்தித்து தங்கள் நிறுவனத்தையே மூடும் அளவுக்கு சென்றன. அந்த நேரத்தில் இந்த 2 தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து இப்போது பல்வேறு சலுகைகளையும், மொபைல் பிளான்களையும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகின்றனர்.  

வோடபோன்-ஐடியா (Vi) இந்தியாவில் உள்ள அனைத்து வட்டங்களிலும் ரூ. 1,197 ப்ரீபெய்ட் பிளானை விரிவுப்படுத்துகிறது. My Vi இணையதளத்தில் கிடைக்கும் தகவல்களின்படி, ப்ரீபெய்ட் பிளான் 180 நாட்கள் (6 மாதங்கள்) செல்லுபடியாகும். இதில் வரம்பற்ற காலிங் நேரம்,1.5 GB மொபைல் டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் பல நன்மைகள் இதில் உள்ளன.

இப்போது வரை, ரூ. 1,197 க்கு Vi ப்ரீபெய்ட் பிளான் ஹோம் கிரெடிட் மூலம் ஸ்மார்ட்போன் (smartphone bundle) வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைத்தது. 

2019ம் ஆண்டில் டெல்கோ ஹோம் கிரெடிட் இந்தியாவுடன் கூட்டு சேர்ந்து ரூ.15,000 க்கு கீழ் 4G ஸ்மார்ட்போனையும் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சலுகை வழங்கியது. இந்த சலுகையின் ஒரு பகுதியாக, Vi பயனர்கள் பலவிதமான நன்மைகளை உள்ளடக்கிய பிரத்யேக ப்ரீபெய்ட் பிளான்களையும் தேர்வு செய்யலாம்.

ரூ. 1,197 ப்ரீபெய்ட் பிளானில் நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்ட 'வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர்' வசதியும் அடங்கும். டேட்டா ரோல்ஓவர் திட்டத்தின் கீழ், Vi ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் வார நாட்களில் சேமிக்கப்பட்ட வார இறுதியில் இணைய டேட்டாக்களின் கூடுதல் பகுதியை அனுபவிக்க முடியும். 

ப்ரீபெய்ட் பிளான் அம்சங்களின் மற்றொரு நன்மை, Vi மூவிகள் மற்றும் டிவிக்கு இலவச அணுகல் ஆகும். ஏர்டெல்லின் எக்ஸ்ஸ்ட்ரீம் சேவையைப் போலவே, Vi பயனர்களும் Android மற்றும் iOS க்கான Vi மொபைல் ஆப்ஸ் அல்லது பிரத்யேக Vi மூவிகள் மற்றும் டிவி வலைத்தளம் வழியாக பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் நாம் அணுகலாம்.

Also read... Twitter Fleets | Voice Tweet | உலகளவில் பயன்பாட்டிற்கு வருகிறது ட்விட்டர் ஃபிளீட்ஸ்.. விரைவில் அறிமுகமாகும் வாய்ஸ் ட்வீட்..

இந்த நேரத்தில், Viன் ரூ.1,197 ப்ரீபெய்ட் பிளான் 180 நாட்கள் செல்லுபடியாகும் இணையதளத்தில் கிடைக்கும் ஒரே பிளானாகும்.

ரூ. 2,595 பிளான் மற்றும் ரூ. 2,399 பிளான்கள் போன்ற பிற "வரம்பற்ற" ப்ரீபெய்ட் விருப்பங்கள் 180 நாட்களுக்கு மேல் செல்லுபடியாகும் மற்ற பிளான்கள் மட்டுமே, அதாவது 365 நாட்கள் (ஒரு முழு ஆண்டு). ரூ. 2,399 ப்ரீபெய்ட் பிளான்களுடன் சேர்க்கப்பட்டுள்ள நன்மைகள் ரூ. 1,197 ப்ரீபெய்ட் பிளான்களைப் போலவே இருக்கின்றன, ஆனால் ஒரே வித்தியாசம் செல்லுபடியாகும் காலம் தான். அதேசமயம், ரூ. 2,595 ப்ரீபெய்ட் பிளான் ஒரு நாளைக்கு 2GB டேட்டாவையும், ஒரு வருடம் இலவச சந்தாவுடன் ZEE5 இயங்குதளத்தையும் வழங்குகிறது. 

எதிர்பார்த்தபடி, Vi ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் Vi வலைத்தளம், ஆப்ஸ் அல்லது அமேசான் பே போன்ற மூன்றாம் தரப்பு தளங்கள் வழியாக ரூ. 1,197 பிளானை அணுகலாம். இந்த சமீபத்திய செய்தியை முதலில் Only Tech குறிப்பிட்டது. 

First published:

Tags: Recharge Plan, Vi