ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

எந்தவொரு இந்திய நிறுவனமும் சந்திக்காத வரலாறு காணாத நஷ்டத்தைச் சந்தித்த வோடபோன்

எந்தவொரு இந்திய நிறுவனமும் சந்திக்காத வரலாறு காணாத நஷ்டத்தைச் சந்தித்த வோடபோன்

வோடபோன்

வோடபோன்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  செல்போன் சேவை வழங்கும் வோடபோன் ஐடியா நிறுவனம் வரலாறு காணாத நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

  வோடபோன் ஐடியா, ஏர்டெல் உள்ளிட்ட செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் வருவாயைக் குறைத்துக் காட்டியது தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு 92 ஆயிரம் கோடி ரூபாயை வழங்க உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 24-ம் தேதி உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா கடும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. நடப்பு ஆண்டிற்கான இரண்டாவது காலாண்டில் வோடபோன் ஐடியா நிறுவனம் 50 ஆயிரத்து 922 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக கூறியுள்ளது. அண்மைக்காலத்தில் எந்தவொரு இந்திய நிறுவனமும் இவ்வளவு நஷ்டம் அடைந்ததில்லை. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் 4 ஆயிரத்து 874 கோடி ரூபாய் மட்டுமே நஷ்டம் காட்டியிருந்தது.

  இதேபோன்று ஏர்டெல் நிறுவனமும் இதுவரை இல்லாத அளவாக இரண்டாம் காலாண்டில் 23 ஆயிரத்து 44 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து கடும் நிதி நெருக்கடியில் இருப்பதே இதற்கு காரணம் என ஏர்டெல் நிறுவனமும் கூறியுள்ளது. தொகையை செலுத்த உச்சநீதிமன்றம் 3 மாதங்கள் அவகாசம் கொடுத்துள்ள நிலையில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக வோடபோன் ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு சலுகை வழங்க வேண்டும் என்றும் அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

  Published by:Prabhu Venkat
  First published:

  Tags: Vodafone