சுமார் 6.5 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்த ஃவோடஃபோன் ஐடியா!

மொத்தமாக தனியார் டெலிகாம் நிறுவனங்களில் ஐடியாவையும் தன்னுடன் இணைத்துக் கொண்ட ஃவோடஃபோன் நிறுவனம்  421.08 மில்லியன் வாடிக்கையாளர்கள் உடன்  முதலிடத்தில் உள்ளது.

Web Desk | news18
Updated: January 5, 2019, 1:05 PM IST
சுமார் 6.5 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்த ஃவோடஃபோன் ஐடியா!
ஃவோடஃபோன்
Web Desk | news18
Updated: January 5, 2019, 1:05 PM IST
தொடர்ந்து மூன்றாம் மாதமாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது ஃவோடஃபோன் ஐடியா நிறுவனம்.

கடந்த 2018 நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 6.5 மில்லியன் வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் இழந்துள்ளது. இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை COAI வெளியிட்டுள்ளது.

ஆனால், இதே காலகட்டத்தில் புதிதாக 1 லட்சம் வாடிக்கையாளர்களை ஏர்டெல் இணைத்துள்ளது. மொத்தம் இந்தியாவில் மொபைல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களாக நவம்பர் மாத கணக்கின் அடிப்படையில் 1.02 பில்லியன் பேர் உள்ளனர் என்கிறது இந்த ஆய்வு.

இதேகாலகட்டத்தில் BSNL, MTNL, RCom மற்றும் டாடா நிறுவன வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறித்து எதுவும் கூறப்படவில்லை.

மொத்தமாக தனியார் டெலிகாம் நிறுவனங்களில் ஐடியாவையும் தன்னுடன் இணைத்துக் கொண்ட ஃவோடஃபோன் நிறுவனம்  421.08 மில்லியன் வாடிக்கையாளர்கள் உடன்  முதலிடத்தில் உள்ளது.

இரண்டாம் இடத்தில் 314.76 மில்லியன் வாடிக்கையாளர்கள் உடன் ஏர்டெல் உள்ளது. 262.75 மில்லியன் வாடிக்கையாளர்கள் உடன் ஜியோ மூன்றாம் இடத்தில் உள்ளது.

மேலும் பார்க்க: அஜித் ரசிகர்கள் கைதும்... அமமுக பிரமுகர் மகனின் மிரட்டலும்..! என்ன நடந்தது தேனியில்?
Loading...
First published: January 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...