ஜூன் மாதத்தில் 40 லட்சத்திற்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களை இழந்த Vi நிறுவனம்: TRAI அறிக்கை வெளியீடு!

மாதிரிப் படம்

வயர்லைன் சந்தாதாரர்களின் தரவுகளை பார்க்கும் போது சந்தைப் பங்கு சில மாறுபாட்டைக் காட்டியது.

  • Share this:
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) கடந்த ஜூன் மாதத்தில் ஒவ்வொரு நெட்ஒர்க்கிற்கும் கிடைத்துள்ள சந்தாதாரர்களின் எண்ணிக்கை தொடர்பான தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூன் 2021-ல் வோடபோன் ஐடியா கிட்டத்தட்ட 43 லட்சம் சந்தாதாரர்களை இழந்துவிட்டதாக தரவில் கூறப்பட்டுள்ளது. இதுதவிர ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நெட்ஒர்க்குகள் அதிக சந்தாதாரர்களை ஈர்த்துள்ளது. அதன்படி தற்போதுவரை இந்த நெட்ஒர்க்குகள் முறையே 38,12,530 மற்றும் 54,66,556 பயனாளிகளை கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனம் தனது டெல்கோவிற்கு தனித்துவமான புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் ARPU-ஐ அதிகரிக்க தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதுதவிர மொத்த வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை கடந்த மே மாதம் 1,176.84 மில்லியனில் இருந்து ஜூன் இறுதியில் 1,180.83 மில்லியனாக அதிகரித்துள்ளது. மேலும் இதன் மாதாந்திர வளர்ச்சி விகிதம் 0.34% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. பிராட்பேண்ட் துறையில் லீடிங்கில் இருக்கும் முதல் ஐந்து சேவை வழங்குநர்கள் ஜூன் மாத இறுதியில் பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கையில் 98.77 சதவிகித சந்தைப் பங்கைக் கொண்டிருந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதாவது, மொத்த சந்தாதார் எண்ணிக்கையில், ரிலையன்ஸ் ஜியோ 439.91 மில்லியன் சந்தாதாரர்கள், ஏர்டெல் 197.10 மில்லியன் சந்தாதாரர்கள், வோடபோன் ஐடியா 121.42 மில்லியன் சந்தாதாரர்கள், பிஎஸ்என்எல் 22.69 மில்லியன் சந்தாதாரராகள் மற்றும் ஏட்ரியா கன்வெர்ஜென்ஸ் 1.91 மில்லியன் சந்தாதாரர்களை பெற்று முதல் 5 இடத்தில் உள்ளது. அதேபோல லீடிங்கில் உள்ள முதல் ஐந்து வையர்டு பிராட்பேண்ட் சேவை வழங்குநர்களில் பிஎஸ்என்எல் 6.03 மில்லியன் சந்தாதாரர்களையும், ஏர்டெல் 3.37 மில்லியன் சந்தாதாரர்களையும், ரிலையன்ஸ் ஜியோ 3.22 மில்லியன் சந்தாதாரர்களையும், ஏட்ரியா கன்வெர்ஜென்ஸ் டெக்னாலஜிஸ் 1.91 மில்லியன் சந்தாதாரர்களையும், ஹாத்வே கேபிள் மற்றும் டேட்டாகாம் 1.06 மில்லியன் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளன.

இதுதவிர முதல் ஐந்து வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவை வழங்குநர்களில் ரிலையன்ஸ் ஜியோ 436.69 மில்லியனுடனும், ஏர்டெல் 193.74 மில்லியன் சந்தாதாரர்களுடனும், வோடபோன் ஐடியா 121.41 மில்லியன் சந்தாதாரர்களுடனும், பிஎஸ்என்எல் 16.67 மில்லியனுடனும், டிகோனா இன்ஃபினைட் 0.31 மில்லியன் சந்தாதாரர்களுடனும் முன்னிலையில் உள்ளன.கடந்த ஜூன் மாதத்தில் ஏர்டெல் அதன் செயலில் உள்ள வயர்லெஸ் சந்தாதாரர்களின் அதிகபட்ச விகிதத்தை (97.62 சதவிகிதம்) காட்டியது. எம்டிஎன்எல் குறைந்த எண்ணிக்கையிலான செயலற்ற வயர்லெஸ் சந்தாதாரர்ககளின் எண்ணிக்கையை காட்டியது.

Also read... அமிதாப் Voice -ல் அமேசான் அலெக்ஸா - அட்டகாசமான சிறப்பம்சங்கள் இதோ!

அதாவது 17.78 சதவிகிதம் ஆகும். 2021, ஜூன்30ம் தேதி நிலவரப்படி, மொத்த வயர்லெஸ் சந்தாதாரர்களின் 89.95 சதவிகித சந்தைப் பங்கை தனியார் சேவை வழங்குநர்கள் கொண்டிருந்தனர். அதேசமயம் அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் - ன் சந்தைப் பங்கு 10.05 சதவிகிதமாக மட்டுமே இருந்தது.வயர்லெஸ் பிரிவில் ரிலையன்ஸ் ஜியோ 36.98 சதவீதமும், ஏர்டெல்லில் 29.82 சதவீதமும், வோடபோனில் 23.15 சதவீதமும் சந்தை பங்கை கொண்டிருந்தன.

 

வயர்லைன் சந்தாதாரர்களின் தரவுகளை பார்க்கும் போது சந்தைப் பங்கு சில மாறுபாட்டைக் காட்டியது. அதன்படி BSNL மற்றும் MTNL ஆகிய இரண்டு பொதுத்துறை நிறுவன அணுகல் சேவை வழங்குநர்களும், 2021 ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி 47.60 சதவிகித வயர்லைன் சந்தை பங்கைக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் ஏர்டெல் மற்றும் ஜியோ சந்தை பங்கில் முறையே 22.2 சதவிகிதம் மற்றும் 17.92 சதவிகிதத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
Published by:Vinothini Aandisamy
First published: