ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கான வாரஇறுதி டேட்டா சலுகையை அறிமுகப்படுத்தும் வோடபோன் ஐடியா

ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கான வாரஇறுதி டேட்டா சலுகையை அறிமுகப்படுத்தும் வோடபோன் ஐடியா

வோடபோன்

வோடபோன் ஐடியா என்னும் Vi தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய வார இறுதி டேட்டா ரோல்ஓவர் சலுகையை அறிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
வோடபோன் ஐடியா என்னும் Vi தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய வாரஇறுதி டேட்டா ரோல்ஓவர் சலுகையை அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ், Vi ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் வார நாட்களில் சேமித்து வைக்கப்பட்ட இன்டர்நெட், வாரத்தின் இறுதியில் முழுமையாக உபயோகித்துக் கொள்ள முடியும். இருப்பினும், வாரஇறுதி டேட்டா ரோல்ஓவர் வரம்பற்ற ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். இதன் விலை ரூ. 249 அல்லது அதற்கு மேற்பட்டது. இன்று முதல் இந்த புதிய சலுகை திட்டத்தை அனுபவிக்க பயனர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

மேலும் இது ஜனவரி 17 ஆம் தேதி, 2021 வரை செல்லுபடியாகும் என அறிவித்துள்ளனர். இப்போது வரை, ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு தங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களுடன் வரையறுக்கப்பட்ட மொபைல் டேட்டாவை பெற்று வந்தனர். மேலும் ஒரு நாளில் பயன்படுத்தப்படாத டேட்டா, புதுப்பிக்கப்படுவதால் அடுத்த நாள் அந்த மீதம் உள்ள டேட்டாவை பயன்படுத்த முடியாது. எனவே கொரோனா வைரஸ் தொற்றுநோய்களுக்கு மத்தியில் இன்டர்நெட் இணைப்பு, வேலைகளுக்கு பிரதானமாக மாறியுள்ள இந்த காலகட்டத்தில், இந்த புதிய டேட்டா ரோல்ஓவர் திட்டத்தின் மூலம் பயனர்கள் பயன்படுத்தப்படாத டேட்டாவையும் அனுபவிக்க முடியும்.

Also read... வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது குறித்து குழப்பமா? தெரிந்து கொள்ளுங்கள்Vi வலைத்தளத்தின்படி, ரூ. 249 மற்றும் ரூ. 2,595 வரை வார இறுதி டேட்டா மாற்றம் செய்வதற்கான வாய்ப்பு மற்றும் டபுள் டேட்டாவையும் கொண்டுள்ளது. இந்த திட்டங்களில் சில ரூ.249, ரூ.399 மற்றும் ரூ.599 ஆகிய விலைகளில், Vi பயன்பாட்டின் மூலம் ரீசார்ஜ் செய்வதன் மூலம் வீகெண்ட் டேட்டாவுடன் கூடுதலாக 5 ஜிபி டேட்டாவையும் பெறமுடியும்.

மேலும், ரூ.595, ரூ.795 மற்றும் ரூ. 2,595 ஆகிய திட்டங்கள், ஜீ 5 பிரீமியம் சந்தாவுடன் தொகுக்கப்பட்டுள்ளன. டேட்டா ரோல்ஓவர் திட்டங்களைக் கொண்ட பயனர்கள் Vi மொபைல் ஆப் பயன்பாட்டில் உள்ள பொதிகள் மற்றும் சேவைகள் பிரிவுக்குச் செல்வதன் மூலம், டேட்டாவையும் சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், அவ்வாறு செய்வதற்கான மற்றொரு வழியாக * 199 # என்ற SSD குறியீட்டை பயன்படுத்தி சரிபார்க்கவும்.
Published by:Vinothini Aandisamy
First published: