முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / தடை செய்யப்பட்டது VLC மீடியா பிளேயர் - உலக சினிமா விரும்பிகளின் ஆஸ்தான பிளேயர்!

தடை செய்யப்பட்டது VLC மீடியா பிளேயர் - உலக சினிமா விரும்பிகளின் ஆஸ்தான பிளேயர்!

தடைசெய்யப்பட்டது விஎல்சி மீடியா பிளேயர்.

தடைசெய்யப்பட்டது விஎல்சி மீடியா பிளேயர்.

மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் - 2000 விதிகளின்படி

  • Last Updated :

ஸ்மார்ட்ஃபோன்களும், பல ஆப்-களும் பயன்பாட்டிற்கு வருவதற்கு வெகு காலத்திற்கு முன்பாகவே கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் நாம் பயன்படுத்தி வந்த மிக பிரபலாமன சாஃப்ட்வேர்களில் விஎல்சி பிளேயரும் ஒன்று. கம்ப்யூட்டர் திரையில் படம் பார்க்கவும், இசையை கேட்டு ரசிக்கவும் மிக உதவிகரமாக இருந்த விஎல்சி மீடியா பிளேயர், பின்னாளில் தன்னை மேம்படுத்திக் கொண்டு ஸ்மார்ட்ஃபோன்களிலும் இடம்பெற்றது.

வீடியோ லேன் பிராஜக்ட் என்ற நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட இந்த விஎல்சி மீடியா பிளேயர் இப்போது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பாகவே இந்த தடை விதிக்கப்பட்டது என்று மீடியாநாம என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதே சமயம், உங்கள் டிவைஸில் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்ட விஎல்சி பிளேயர் இருக்குமாயின், அது தொடர்ந்து வேலை செய்யும். அதே சமயம், இந்த தடை குறித்து இந்திய அரசு அல்லது தொடர்புடைய நிறுவனம் சார்பில் எந்தவித விளக்கமும் கொடுக்கப்படவில்லை.

சைபர் தாக்குதல் நிகழ்வதே காரணம்?

தடை குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வரவில்லை என்றாலும் கூட, சீனாவில் இருந்து செயல்படும் சிகாடா (Cicada) என்ற சைபர் தாக்குதல் குழுவினரால் விஎல்சி பிளேயர் முடக்கப்பட்டதே இதற்கு காரணம் என்று சில செய்திகள் தெரிவிக்கின்றன.

நீண்ட கால சைபர் தாக்குதலின் ஒரு பகுதியாக, விஎல்சி பிளேயர் உள்ளே அபாயம் நிறைந்த மால்வேர் ஒன்றை சிகாடா நிறுவனம் ஊடுருவச் செய்ததாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் அண்மையில் குறிப்பிட்டிருந்தனர்.

புகார் தெரிவிக்கும் பயனாளர்கள்

இந்த தடை என்பது சற்று மென்மையான நடவடிக்கை என்பதால் இதுகுறித்து நிறுவனம் சார்பில் அல்லது இந்திய அரசு சார்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆனால், விஎல்சி பிளேயரை பயன்படுத்த முடியவில்லை என்ற புகார்களை நெட்டிசன்கள் சிலர் டிவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் - 2000 விதிகளின்படி விஎல்சி பிளேயர் தடை செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி விஎல்சி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றதொரு ஸ்கிரீன்ஷாட் பதிவை நெட்டிசன் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

எதிலும் டவுன்லோடு செய்ய முடியாது

விஎல்சி பிளேயரை டவுன்லோடு செய்வதற்கான லிங்க் மற்றும் அந்த பிளேயரின் இணையதளம் ஆகிய அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. சுருக்கமாக சொல்வதென்றால் நாட்டில் உள்ள எவரும் அதை டவுன்லோடு செய்ய முடியாது. ஜியோ, வோடஃபோன் - ஐடியா உள்பட அனைத்து முன்னணி நிறுவனங்களில் ஐபிஎஸ் முகவரியில் விஎல்சி மீடியா பிளேயர் தடை செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தடை செய்யப்பட்ட ஆப்-கள்

top videos

    முன்னதாக, பப்ஜி மொபைல், டிக்டாக், கேம்ஸ்கேனர் உள்பட பல்வேறு சீன ஆப்களை இந்திய அரசு கடந்த 2020ஆம் ஆண்டில் தடை செய்தது குறிப்பிடத்தக்கது. விஎல்சி பிளேயர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வீடியோ லேன் நிறுவனத்தின் சாஃப்ட்வேர் ஆகும்.

    First published:

    Tags: Ban, China Apps