விவோ Z1 ப்ரோ விற்பனை தொடங்கியது... ஃப்ளிப்கார்டில் வாங்கினால் கேஷ்பேக் ஆஃபர்..!

2+8+2 மெகாபிக்சல் கொண்ட மூன்று கேமிராக்கள் பின்புறமும் 32 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமிரா உள்ளது.

விவோ Z1 ப்ரோ விற்பனை தொடங்கியது... ஃப்ளிப்கார்டில் வாங்கினால் கேஷ்பேக் ஆஃபர்..!
விவோ Z1 ப்ரோ
  • News18
  • Last Updated: July 26, 2019, 4:26 PM IST
  • Share this:
விவோ Z1 ப்ரோ விற்பனை இன்று நண்பகல் 12 மணி முதல் தொடங்கியுள்ளது.

விவோ ஆன்லைன் ஸ்டோர் அல்லது ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் விற்பனைத் தளம் மூலம் வாடிக்கையாளர்கள் புதிய ஃபோனை வாங்கலாம். இந்த விவோ Z1 ப்ரோ ஸ்மார்ட்ஃபோன் ஆன்லைன் மூலமாக மட்டுமே விற்பனை செய்யப்படும். ஸ்டோர்களில் விற்பனைக்கு வராது எனக் கூறப்பட்டுள்ளது.

712 SoC ஸ்னாப்ட்ராகன் உடன் 5,000 mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது விவோ Z1 ப்ரோ. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் 14,990 ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளது. 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் 16,990 ரூபாய்க்கும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் 17,990 ரூபாய்க்கும் விற்பனைக்கு உள்ளது.


ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஆக்சிஸ் அல்லது HDFC டெபிட் அல்லது க்ரெடிட் கார்டு மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 சதவிகித கேஷ்ஃபேக் ஆஃபர் வழங்கப்படும். கூடுதலாக ஃப்ளிப்கார்ட் தளத்தில் வட்டியில்லா தவணை முறையும் உள்ளது.

12+8+2 மெகாபிக்சல் கொண்ட மூன்று கேமிராக்கள் பின்புறமும் 32 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமிரா முன்பக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது பெரும் சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது.

மேலும் பார்க்க: ₹4 ஆயிரத்திலிருந்து டேப்லெட்- ஃப்ளிப்கார்ட் வழங்கும் ’கேட்ஜெட்ஸ் சேல்’!
First published: July 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்