Home /News /technology /

டிரிபிள் கேமரா செட்டப்புடன் இந்தியாவில் அறிமுகமான Vivo Y75.! விலை மற்றும் சிறப்பம்சங்கள்

டிரிபிள் கேமரா செட்டப்புடன் இந்தியாவில் அறிமுகமான Vivo Y75.! விலை மற்றும் சிறப்பம்சங்கள்

vivo y75

vivo y75

Vivo Y75 specifications | டூயல் நானோ சிம் ஸ்லாட்களை கொண்ட Vivo Y75 5G மொபைலானது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான Funtouch OS 12-ல் இயங்குகிறது. இந்த புதிய ஸ்மார்ட் ஃபோன் 6.58-இன்ச் (1,080x2,408 பிக்சல்கள்) ஃபுல்-எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
சமீபத்திய Y-சீரிஸ் போனாக Vivo Y75 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. விவோ நிறுவனம் சமீபத்தில் Vivo Y33T மற்றும் Vivo Y21A போன்களை அறிமுகப்படுத்திய பிறகு தற்போது இந்த புதிய Vivo Y75 ஸ்மார்ட் ஃபோனை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த புதிய Vivo Y75 மொபைல் செல்ஃபி ஸ்னாப்பருக்கான வாட்டர் டிராப் நாட்ச், டிரிபிள் கேமரா சென்சார்களை வைக்க ஒரு ரெக்ட்டாங்குளர் லேஅவுட், சைட் மவுண்ட்டட் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் 18W சார்ஜிங் சப்போர்ட் உள்ளிட்ட பல அம்சங்களுடன் வருகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட் ஃபோன் MediaTek Dimensity 700 SoC ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. Vivo Y75 5G ஆனது எக்ஸ்டென்டட் ரேம் அம்சத்தையும் கொண்டுள்ளது. இது யூஸர்கள் பயன்படுத்தப்படாத இன்பில்ட் ஸ்டோரேஜை பயன்படுத்தி கிடைக்கும் நினைவகத்தை எக்ஸ்டென்டட் செய்ய அனுமதிக்கிறது என்று விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் Vivo Y75 5G மொபைலின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை:

இந்தியாவில் Vivo Y75 5G மொபைலின் விலை ரூ. 21,990 என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட் ஃபோன் 8GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் (8GB RAM + 128GB storage) மாடலில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட் ஃபோன் க்ளோவிங் கேலக்ஸி ( Glowing Galaxy) மற்றும் ஸ்டார்லைட் பிளாக் (Starlight Black) ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மேலும் இப்போது Vivo India E-store மற்றும் பார்ட்னர் ரீடெய்ல் ஸ்டோர்களில் இந்த புதிய Vivo Y75 5G மொபைல் வாங்குவதற்கு கிடைக்கிறது என்று விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது.



Vivo Y75 5G ஸ்பெசிஃபிகேஷன்கள்..

டூயல் நானோ சிம் ஸ்லாட்களை கொண்ட Vivo Y75 5G மொபைலானது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான Funtouch OS 12-ல் இயங்குகிறது. இந்த புதிய ஸ்மார்ட் ஃபோன் 6.58-இன்ச் (1,080x2,408 பிக்சல்கள்) ஃபுல்-எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. நாம் ஏற்கனவே மேலே பார்த்தபடி Vivo Y75 5G மொபைலானது ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 SoC ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. விவோவின் கூற்றுப்படி, யூஸர்கள் எக்ஸ்டெண்டட் ரேம் அம்சம் மூலம் பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜிலிருந்து 4GB வரை மெமரியை சேர்க்கலாம். பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி இன்டர்னல் ஸ்டோரேஜை 1TB வரை விரிவாக்கி கொள்ள முடியும். பின்புறத்தில் மூன்று கேமராக்கள் அதாவது Vivo Y75 5G ஆனது டிரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இந்த செட்டப்பில் f/1.8 துளை கொண்ட 50-மெகாபிக்சல் பிரைமரி கேமரா, f/2.0 துளை கொண்ட 2-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் பொக்கே கேமரா ஆகியவை அடங்கும்.



இந்த மொபைலின் முன்பக்கத்தில், f/2.0 துளை கொண்ட 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. இது Vivo இன் எக்ஸ்ட்ரீம் நைட் AI-அடிப்படையிலான அல்காரிதத்திற்கான சப்போர்ட்டை வழங்குகிறது, இது யூஸர்களுக்கு சிறந்த குறைந்த ஒளி புகைப்படங்களை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் 5G, 4G LTE, ப்ளூடூத் 5.1, Wi-Fi, GPS மற்றும் FM ரேடியோ சப்போர்ட் ஆகியவை அடங்கும். USB Type-C மூலம் 18W ஃபாஸ்ட் சார்ஜ் செய்வதை ஆதரிக்கிறது. Vivo Y75 5G மொபைல்188 கிராம் எடை கொண்டது என்று விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Technology, VIVO

அடுத்த செய்தி