• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • எக்ஸ்டெண்டட் ரேம் & 5000mAh பேட்டரியுடன் அறிமுகமான புதிய Vivo Y20T - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

எக்ஸ்டெண்டட் ரேம் & 5000mAh பேட்டரியுடன் அறிமுகமான புதிய Vivo Y20T - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

விவோ ஒய் 20 டி (Vivo Y20T)

விவோ ஒய் 20 டி (Vivo Y20T)

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் ஃபோன் மேம்பட்ட அனுபவத்தை அளிக்க அல்ட்ரா கேம் மோட், எஸ்போர்ட்ஸ் மோட், 4 டி கேம் வைப்ரேஷன், கேம் பிக்சர்-இன்-பிக்சர் அம்சங்களுடன் வருகிறது.

  • Share this:
சீன நிறுவனமான விவோ இந்தியாவில் Vivo Y20T மாடலை அறிமுகப்படுத்தி உள்ளதன் மூலம் தன் Y சீரிஸை விரிவுபடுத்தி உள்ளது. விவோவின் இந்த புதிய ஸ்மார்ட் ஃபோன் ரூ.15,490 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய மொபைல் எக்ஸ்டென்டட் ரேம் 2.0 டெக்னலாஜியுடன் (Extended RAM 2.0 technology) வந்துள்ளது. இந்த தொழில்நுட்பம் யூஸர்கள் தீவிர உபயோகத்திற்கு கூடுதல் விரிச்சுவல் மெமரியை பெற அனுமதிக்கிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள இந்த டிவைஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்புடன் வருகிறது.

சிறப்பம்சங்கள்:

Vivo Y20T ஸ்மார்ட் ஃபோன் 6 ஜிபி ரேம் மற்றும் 720x1,600 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் கொண்ட 6.51 இன்ச் ஹாலோ ஃபுல்வியூ கொண்ட டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது வீடியோக்கள் மற்றும் கேம்களுக்காக HD+ ரெசல்யூஷன் LCD டிஸ்ப்ளே ஆகும். ஆண்ட்ராய்டு 11-ல் இயங்கும் இந்த ஃபோன், 5,000mAh பேட்டரி திறனை கொண்டுள்ளது. இந்த மொபைல் சைட் ஃபிங்கர் பிரின்ட் சென்சார், 18W ஃபாஸ்ட் சார்ஜ் சப்போர்ட்டை பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் ஃபோனில் ஒரு AI பவர் சேவிங் டெக்னலாஜி இருப்பதாக விவோ கூறுகிறது.

இந்த டெக்னலாஜி மூலம் ஒரு முறை முழு சார்ஜ் செய்வதால் சுமார் 20 மணிநேரம் ஆன்லைன் HD திரைப்பட ஸ்ட்ரீமிங் மற்றும் 8 மணிநேரம் வரை கேம்களை விளையாடி மகிழ முடியும் என்று கூறப்படுகிறது.

கேமராக்களை பொறுத்த வரை இந்த டிவைஸின் பின்புறம் 13MP பிரைமரி சென்சார், 2MP போக் கேமரா (bokeh Camera) மற்றும் சூப்பர் மேக்ரோ கேமரா ஆகியவை உள்ளன. இதன் முன்பக்கத்தில் டியூட்ராப் நாட்ச் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அவுரா ஸ்கிரீன் லைட், போர்ட்ரேட் மோட் சாஃப்ட்வேர் அம்சங்களுடன் கூடிய 8 எம்பி செல்ஃபி ஷூட்டர் உள்ளது.

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் ஃபோன் மேம்பட்ட அனுபவத்தை அளிக்க அல்ட்ரா கேம் மோட், எஸ்போர்ட்ஸ் மோட், 4 டி கேம் வைப்ரேஷன், கேம் பிக்சர்-இன்-பிக்சர் அம்சங்களுடன் வருகிறது. மேலும் இதன் முன் கேமரா ஆட்டோ ஃபோகஸ் ஆப்ஷனையும் கொண்டுள்ளது. இந்த Vivo Y20T டுயல் சிம் (ஜிஎஸ்எம் மற்றும் ஜிஎஸ்எம்) மொபைல் ஆகும். இதன் 2 ஸ்லாட்களும் நானோ சிம்களை சப்போர்ட் செய்கிறது. இது 164.41 x 76.32 x 8.41 மிமீ (உயரம் x அகலம் x தடிமன்) மற்றும் 192.00 கிராம் எடை கொண்டது.

Also read... கூலிங்க் வசதியுடன் வரும் ‘ஒன்பிளஸ் 9 ஆர்டி’ ஸ்மார்போன் - அதிகாரப்பூர்வ வெளியீடு தேதி அறிவிப்பு!

இது அப்சிடியன் பிளாக்(Obsidian Black) மற்றும் ப்யூரிஸ்ட் ப்ளூ (Purist Blue) உள்ளிட்ட கலர்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத் v5.00, யூஎஸ்பி ஓடிஜி, மைக்ரோ யூஎஸ்பி, 3G மற்றும் 4G ஆகியவை அடங்கும். இந்த புதிய ஸ்மார்ட் ஃபோனில் கொடுக்கப்பட்டு இருக்கும் சென்சார்களில் ஆக்ஸிலரோமீட்டர், ஆம்பியன்ட் லைட் சென்சார், காம்பஸ் / மேக்னடோமீட்டர், ஜைரோஸ்கோப் மற்றும் ஃபிங்கர் சென்சார் ஆகியவை அடங்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: