Home /News /technology /

பட்ஜெட் விலையில் Vivo Y15S ஸ்மார்ட்ஃபோன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் - விலை மற்றும் இதர விவரங்கள்

பட்ஜெட் விலையில் Vivo Y15S ஸ்மார்ட்ஃபோன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் - விலை மற்றும் இதர விவரங்கள்

 விவோ

விவோ

Vivo Y15s Smartphone : புதிய விவோ ஸ்மார்ட்ஃபோன்கள் அனைத்தும் ஆண்டிராய்ட் 11 (கோ எடிசன்) அப்ளிகேஷன் கொண்டு செயல்படுகிறது.

பட்ஜெட் விலையிலான  Y ஸ்மார்ட்ஃபோன் சீரீஸ் வகை ஃபோன்களை வெளியிட்டு வரும் விவோ நிறுவனம் தற்போது Vivo Y15S என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. தொடக்க நிலையில் உள்ள ஸ்மார்ட்ஃபோன் பயனாளர்களுக்கு ஏற்ற வகையில் இந்த மாடல் அமைந்துள்ளது. இது Realme Narzo 50A, MOTO E 40 மற்றும் Redmi 10 Prime ஆகிய மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்துவதாக அமையும் என்று கருதப்படுகிறது.

புதிய விவோ ஸ்மார்ட்ஃபோன்கள் அனைத்தும் ஆண்ட்ராய்ட் 11 (கோ எடிசன்) அப்ளிகேஷன் கொண்டு செயல்படுகிறது. இதன் டாப் மீது ஃபன்டன் ஓஎஸ் இருக்கிறது. பொதுவாக, பட்ஜெட் விலை ஸ்மார்ட்ஃபோன்களில் இலகுவான பயன்பாட்டை உறுதி செய்யும் வகையில் இந்த கோ எடிசன் ஆண்டிராய்டு சாஃப்டுவேர் பயன்படுத்தப்படுகிறது. இந்த Y15S மாடலில் உள்ள மற்றொரு சிறப்பம்சம் என்ன என்றால், இதன் பின்பகுதியில் டூயல் கேமரா அமைக்கப்பட்டுள்ளது என்பதே ஆகும்.

விவோ Y15S சிறப்பம்சங்கள்



இந்த விவோ Y15S இரண்டு கலர்களில் வருகின்றன. வேவ் க்ரீன் மற்றும் மைஸ்டிக் ப்ளூ ஆகிய வேரியண்ட்களில் கிடைக்கின்றன. இதில் 6.51 இன்ச் கொண்ட ஸ்க்ரீன் மற்றும் ஹெடி+ ரிசொல்யூஷன், வாட்டர் டிராப் ஸ்டைல் நோட்ச் மற்றும் ஸ்லிம் பெசல்ஸ் டிசைன் ஆகியவை இடம்பெற்றுள்ளன. சந்தைகளில் கிடைக்கும் ஸ்லிம் மாடல் மொபைல்களை போல இது இல்லை. இது 8.28 மி.மீ திக்னஸ் மற்றும் 179 கிராம் எடை ஆகியவற்றை கொண்டது ஆகும்.

இதையும் படியுங்கள் : ட்விட்டரின் டிப்ஸ் அம்சத்துடன் இணைந்த பேடிஎம்: என்ன பயன்? யாருக்கு எல்லாம் லாபம்?

விவோ Y15S ஸ்மார்ட்ஃபோனில் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்சட் மற்றும் 3ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் வசதிகள் உள்ளன. ஃபோனின் பின் பகுதியில் 13 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் 2 மெகா பிக்ஸல் வைட்-ஆங்கிள் ஸ்நாப்பர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. முன்பகுதியில் செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் வசதிகளுக்காக 12 மெகா பிக்ஸல் கேமரா உள்ளது. ஃபோனில் இன்-பில்ட் ஆக இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள கேமரா ஆப் மூலமாக பேனோ, ஃபேஸ் ப்யூட்டி, போட்டோ, வீடியோ, லைவ் போட்டோ, டைம் லேப்ஸ், டாகுமெண்ட்ஸ் ஆகிய வகைகளில் போட்டோ எடுத்துக் கொள்ளும் வசதி இருக்கிறது.

இதையும் படியுங்கள் : மொபைல் பைத்தியமா நீங்கள்? உடனே தூக்கிப்போடுங்க - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் வி5, மைக்ரோ யூஎஸ்பி போர்ட் - ஓடிஜி சப்போர்டிங் உடன் உள்ளது. டூயல் சிம்கார்ட் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி உள்ளது. பாக்ஸ் உள்ளே ஃபோனுடன், யூஎஸ்பி கேபிள், சார்ஜர், சிம் எஜக்டர், ஃபோன் கேஸ் ஆகியவை கிடைக்கும்.

விவோ Y15S விலை

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ Y15S ஃபோன் இந்தியாவில் தொடக்க விலையாக ரூ.10,990 க்கு விற்பனை ஆகிறது. இதன் எம்ஆர்பி விலை ரூ.13,990 ஆகும். எந்த கலர் என்றாலும் இதே விலை தான். விவோ இ ஸ்டோர் மற்றும் பார்டனர் ஆன்லைன் நிறுவனங்கள் மூலமாக இதை வாங்கிக் கொள்ளலாம்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Smartphone, VIVO

அடுத்த செய்தி