ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

டூயல் செல்ஃபி கேமராக்களுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo-வின் V23 சீரிஸ்..

டூயல் செல்ஃபி கேமராக்களுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo-வின் V23 சீரிஸ்..

Vivo

Vivo

Vivo V23 மற்றும் Vivo V23 Pro ஆகிய இரண்டு 5G ஸ்மார்ட் ஃபோன்களை Vivo நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ (vivo) நிறுவனம் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்டV23 சீரிஸ் ஸ்மார்ட் ஃபோன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

விவோ-வின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இன்று (ஜனவரி 5) மதியம் 12 மணிக்கு வெளியீடு நடைபெற்றது. இன்று நடைபெற்ற நேரடி மெய்நிகர் நிகழ்வின் போது Vivo V23 மற்றும் Vivo V23 Pro ஆகிய இரண்டு 5G ஸ்மார்ட் ஃபோன்களை நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. Vivo V23 சீரிஸின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று, இது வண்ணத்தை மாற்றும் பின் பேனலை வழங்குகிறது.இந்த 2 ஸ்மார்ட் ஃபோன்களும் ஃப்ளூரைட் AG கிளாஸ் (fluorite AG glass) பின்புறத்தை கொண்டுள்ளது. இது சூரிய ஒளியில் செல்லும் வேளையில் UV கதிர்கள் தாக்கும் போது நிறங்களை மாற்றுவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த அம்சத்துடன் வெளிவரும் பெற்ற முதல் ஸ்மார்ட் போன் சீரிஸ் vivo V23. இந்த 2 Vivo ஸ்மார்ட் ஃபோன்களும் 5G கனெக்டிவிட்டி, ஃபுல்-HD+ AMOLED டிஸ்ப்ளேக்கள் மற்றும் 50 மெகாபிக்சல் ப்ப்ரைமரி சென்சார் கொண்ட டூயல் செல்ஃபி கேமராக்களையும் கொண்டுள்ளன.

Also read:  11 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட முதியவர் - எப்படி சாத்தியம்?

Vivo V23 மற்றும் Vivo V23 Pro விலை..

Vivo V23 ஸ்மார்ட் ஃபோனின் விலை 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.29,990. இதன் 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ. 34,990 ஆகும். Vivo V23 Pro-வின் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.38,990 மற்றும் 12GB + 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.43,990 ஆகும். இந்த வ் Vivo ஸ்மார்ட் ஃபோன்களும் ஸ்டார்டஸ்ட் பிளாக் மற்றும் சன்ஷைன் கோல்ட் ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. இவை Vivo-வின் அதிகாரப்பூர்வ வெப்சைட், ஃபிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்கள் மூலம் வாங்குவதற்கு கிடைக்கும். Vivo V23 ஜனவரி 19-லிருந்தும், Vivo V23 Pro ஜனவரி 13-லிருந்தும் வாங்க கிடைக்கும்.

Also read:  இவர்களையெல்லாம் வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் - அரசுக்கு பரிந்துரை

Vivo V23 மற்றும் Vivo V23 Pro ஸ்பெசிஃபிகேஷன்கள்..

* டூயல் சிம்மை (நானோ) கொண்ட Vivo V23 ஆண்ட்ராய்டு 12-ஐ பெற்றுள்ளது. இது 6.44-இன்ச் ஃபுல் -HD+ மற்றும் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. MediaTek Dimensity 920 SoC ப்ராசஸர் மூலம் 12GB வரை ரேம் மற்றும் 256GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது f/1.89 ஹோல் லென்ஸுடன் 64-மெகாபிக்சல் பிரைமரி சென்சார், f/2.2 ஹோல் லென்ஸுடன் 8-மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் f/2.4 அபெர்ச்சர் லென்ஸுடன் 2-மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவற்றைப் பெறுகிறது. முன்பக்கம் 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் உடன் f/2.0 அபெர்ச்சர் லென்ஸ் மற்றும் 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் சென்சார் உடன் f/2.28 அபெர்ச்சர் லென்ஸுடன் டூயல் கேமரா செட்டப்பை பெறுகிறது.

Also read:  பிச்சை எடுத்து ஆதரவற்றவர்களின் பசியாற்றிய பிரபல சமூக சேவகி காலமானார்!

* Vivo V23 Pro மொபைல் 6.56-இன்ச் ஃபுல்-HD+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது MediaTek Dimensity 1200 SoC ப்ராசஸருடன் 12GB வரை ரேம் மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் பின்பக்கம் f/1.88 ஹோல் லென்ஸுடன் 108 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

Vivo V23 மற்றும் Vivo V23 Pro ஆகியவற்றில் உள்ள கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் 5G, 4G LTE, டூயல்-பேண்ட் Wi-Fi, USB Type-C, USB OTG மற்றும் ப்ளூடூத் v5.2 ஆகியவை அடங்கும். ஆன்போர்டு சென்சார்களில் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரின்ட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், இ-காம்பஸ், கைரோஸ்கோப், GPS, Beidou, GLONASS, Galileo, QZSS மற்றும் NavIC ஆகியவை அடங்கும். Vivo V23 4,200mAh பேட்டரியையும், Vivo V23 Pro 4,300mAh பேட்டரியையும் கொண்டுள்ளன.

First published:

Tags: Mobile phone, Technology, VIVO