பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் விவோவின் புதிய U சீரிஸ் போன்..!

ரியல்மி C2 மற்றும் ரெட்மி 7A ஆகிய போன்களுக்குப் போட்டியாகவே விவோ U10 இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Web Desk | news18
Updated: September 13, 2019, 6:02 PM IST
பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் விவோவின் புதிய U சீரிஸ் போன்..!
விவோ u10
Web Desk | news18
Updated: September 13, 2019, 6:02 PM IST
இந்தியாவில் புதிதாக U சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வரிசையாக வெளியிட விவோ திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் சமீபத்தில்தான் விவோ நிறுவனம் Z மற்றும் S சீரிஸ் போன்களை அறிமுகம் செய்தது. Z சீரிஸ் வரிசையில் விவோ Z1 ப்ரோ மற்றும் விவோ Z1X மற்றும் S சீரிஸின் கீழ் விவோ S1 ஆகிய போன்கள் வெளியாகி உள்ளன. இந்த வரிசையில் புதிய U சீரிஸின் கீழ் விவோ U10 வருகிற செப்டம்பர் 24-ம் தேதி வெளியாக உள்ளது.

விவோ அமேசான் உடன் இம்முறை கூட்டணி அமைத்துள்ளதால் வெளியீட்டுக்குப் பின்னர் முதலாவதாக அமேசான் தளத்தில் விவோ U10 விற்பனைக்கு வரும். இதுகுறித்து விவோ இந்தியா இயக்குநர் நிபுன் மர்யா கூறுகையில், “ஜென் Z தலைமுறை வாடிக்கையாளர்களைக் கவர இம்முறை U10 வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தலைமுறைக்கு ஏற்ற பட்ஜெட் விலையில் விற்கப்பட உள்ளதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம்” என்றார்.


இந்தியாவில் விவோ U10 வெளியானால் 12 ஆயிரம் ரூபாய்க்கு உள்ளாகவே விலை இருக்கும் எனக் கூறப்படுகிறது. விவோவின் ஆன்லைன் விற்பனையை அதிகரிக்கவே விவோ முயற்சித்து வருகிறது. தற்போது சந்தையில் நல்ல வரவேற்புப் பெற்றுள்ள ரியல்மி C2 மற்றும் ரெட்மி 7A ஆகிய போன்களுக்குப் போட்டியாகவே விவோ U10 இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 90% வரையில் தள்ளுபடி- ஃப்ளிப்கார்ட் ‘பிக் பில்லியன் டேஸ்’..!

சமூக வலைத்தளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

Loading...

First published: September 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...