மூன்று ரியர் கேமிராக்கள் உடன் விற்பனையில் விவோ U10..!

18W சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 5,000mAh பேட்டரி திறன் கொண்டதாக உள்ளது.

மூன்று ரியர் கேமிராக்கள் உடன் விற்பனையில் விவோ U10..!
விவோ U10
  • News18
  • Last Updated: September 25, 2019, 8:12 PM IST
  • Share this:
விவோ நிறுவனம் தனது பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் வரிசையில் புதிதாக U10 போனை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான U10, இந்தியாவில் 8,990 ரூபாய்க்கு அறிமுகமாகியுள்ளது. 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் 8,990 ரூபாய்க்கும் 3ஜிபி ரேம்+ 32 ஜிபி ஸ்டோரேஜ் உடனான மாடல் 9,990 ரூபாய்க்கும் விற்பனையில் உள்ளது. இதேபோல், 4ஜிபி ரேம்+ 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் 10,990 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

இதுகுறித்து விவோ இந்தியா இயக்குநர் நிபுன் மர்யா கூறுகையில், “ஜென் Z தலைமுறை வாடிக்கையாளர்களைக் கவர இம்முறை U10 வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தலைமுறைக்கு ஏற்ற பட்ஜெட் விலையில் விற்கப்படுவதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம்” என்றார்.


13 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் மற்றும் 2 மெகாபிக்சல் பொக்கே கேமிரா என மூன்று ரியர் கேமிராக்கள் உள்ளன. இதனுடன் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமிராவும் உள்ளது. 18W சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 5,000mAh பேட்டரி திறன் கொண்டதாக உள்ளது.

மேலும் பார்க்க: யூட்யூப் கிரியேட்டர்களைத் தாக்கும் ஹேக்கர்கள்... மாயமாகும் இந்திய சேனல்கள்..!

அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச போட்டிக்கு திருச்சி மாணவி தேர்வு
First published: September 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்