இந்தியாவில், விவோ நிறுவனம் அதன் டி-சீரீஸின் கீழ் 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. அது விவோ டி1 ப்ரோ (Vivo T1 Pro) மற்றும் விவோ டி1 (Vivo T1) மாடல்கள் ஆகும். இந்த 2 ஸ்மார்ட்போன்களும் வருகிற மே 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதன் பின்னர் இவைகள், விவோ சேனல்கள் மற்றும் பிளிப்கார்ட் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்த புதிய விவோ மாடல்களுக்காக பிளிப்கார்ட் தளம் ஒரு பிரத்யேக பக்கத்தை உருவாக்கி உளள்து. அதன் வழியாக விவோ டி1 ப்ரோ மாடல் ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 778 ஜி சிப்செட்டைக் கொண்டிருக்கும் என்பதை அறிய முடிகிறது. நினைவூட்டும் வண்ணம், இதே சிப்செட் தான் சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி மற்றும் ஐக்யூ இசட்6 ப்ரோ 5ஜி போன்ற ஸ்மார்ட்போன்களிலும் உள்ளது.
மேலும், விவோ டி1 ப்ரோ மாடல் ஆனது 66W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் பேக் செய்யப்படும். நிறுவனத்தின் கூற்றுப்படி, இது 18 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்யும். இது பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஒரு ஸ்டாண்டர்ட் அம்சமாக கருதப்படும் யூஎஸ்பி-சி போர்ட்டுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப் மற்றும் டிஸ்பிளே குறித்த விவரங்கள் வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்பதையும் பிளிப்கார்ட்டின் பிரத்யேக பக்கம் சிறப்பித்துக் காட்டுகிறது.
விவோ டி1 ப்ரோவின் இரண்டு வண்ண விருப்பங்களை பெறும் என்பதை உறுதி செய்துள்ள பிளிப்கார்ட், ப்ரோ மாடலின் கேமரா அமைப்பு எப்படி இருக்கும் என்கிற யோசனையையும் நமக்கு வழங்கி உள்ளது. அதன் படி, ஒரு பெரிய சென்சார் மற்றும் இரண்டு சிறிய சென்சார்கள் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை ஒரு வட்ட வடிவிலான கேமரா அமைப்பிற்க்குள் காண முடிகிறது.
சுவாரஸ்யமாக, விவோ டி1 ப்ரோ ஆனது ஐக்யூ இசட்6 போ 5ஜி-ஐ போலவே தோற்றமளிக்கிறது, நினைவூட்டும் வண்ணம், இது ஏற்கனவே இந்தியாவில் ரூ.23,999 முதல் வாங்க கிடைக்கிறது. விவோ நிறுவனத்தின் துணை பிராண்டான ஐக்யூ, மேற்குறிப்பிட்ட ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 778 ஜி சிப்செட் மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களை உள்ளடக்கியுள்ளது .
ALSO READ | OnePlus 10R 5G: இந்தியாவில் அறிமுகமானது! என்ன விலை? எப்போது முதல் விற்பனை?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Smartphone, VIVO