Vivo குடியரசு தினக் கொண்டாட்டம்: 10 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி!

HDFC கார்டு மூலம் அமேசானிலும் எஸ்பிஐ கார்டு மூலம் ஃப்ளிப்கார்ட்டிலும் கூடுதலாக 10 சதவிகிதம் தள்ளுபடி உள்ளது.

Web Desk | news18
Updated: January 21, 2019, 12:09 PM IST
Vivo குடியரசு தினக் கொண்டாட்டம்: 10 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி!
விவோ நெக்ஸ்
Web Desk | news18
Updated: January 21, 2019, 12:09 PM IST
குடியரசு தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக Vivo ஸ்மார்ட்ஃபோன்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் விற்பனைத் தளங்களில் Vivo ஸ்மார்ட்ஃபோன் நிறுவனம் குடியரசு தின கொண்டாட்ட விலைச் சலுகைகளை அறிவித்துள்ளது. விலைத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், வட்டியில்லா தவணை முறை எனப் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆஃபர் பட்டியல்


அமேசான் தளத்தில் கடந்த ஜனவரி 20-ம் தேதி தொடங்கிய சேல் வருகிற 23-ம் தேதி வரையில் தொடர்கிறது. இதேபோல், ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஜனவரி 22-ம் தேதி வரையில் இந்த விற்பனைத் திருவிழா நடைபெறுகிறது.

இந்த விற்பனைத் திருவிழா உடன் இணைந்து கொண்டாட Vivo தனது வாடிக்கையாளர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளது.

இதுகுறித்து Vivo இந்தியாவின் துணைத் தலைவர் ஜெரோம் கூறுகையில், “இந்தியாவின் 70-வது குடியரசு தின விழாவை சிறப்பிக்க நினைக்கிறது Vivo.

இந்தக் குடியரசு தின விழா சலுகையின் மூலம் Vivo வாடிக்கையாளர்கள் தங்களுக்குப்ப் பிரியமான Vivo ஸ்மார்ட்ஃபோன்களை அதிரடி விலைச் சலுகைகளுடன் பெற முடியும். இதன் மூலம் பல வாடிக்கையாளர்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவோம் என நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Loading...
இந்த விற்பனைக் காலத்தில் HDFC கார்டு மூலம் அமேசானிலும் எஸ்பிஐ கார்டு மூலம் ஃப்ளிப்கார்ட்டிலும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக 10 சதவிகிதம் தள்ளுபடி பெறலாம்.

மேலும் பார்க்க: உலக சாதனை படைத்த விராலிமலை மெகா ஜல்லிக்கட்டு
First published: January 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...