vivo U10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆச்சர்யமான விலையில் அறிமுகம்

vivo U10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆச்சர்யமான விலையில் அறிமுகம்
  • Share this:
 

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது முதன்மை சலுகைகளுடன் சந்தையை கைப்பற்ற முயற்சிக்கும் இவ்வுலகில், சிலரால் மட்டுமே பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க முடிகிறது. புதியதாக ஒன்றை கையாள அல்லது அனுபவிக்க விரும்பும் நபர்களுக்காக உருவாக்கப்பட்ட ஸ்மார்ட்போன் தான் vivo U10.

vivo இந்தியாவில் முதல் முறையாக U தொடரை அறிமுகப்படுத்துகிறது. இந்தியாவில் வெளியாகி சில நாட்களாகிவிட்டதால், vivo U10 இப்போது நகரத்தில் ஒரு நல்ல காரணத்திற்கான விவாதத்தில் உள்ளது.


பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவில் கூடுதலாக, vivo U10 ஐ முயற்சிக்க வாய்ப்பு கிடைத்ததன் விளைவாக, அதன் தனித்துவமான அம்சங்களை நாங்கள் இன்று சந்தையில் தெரிவிக்கின்றோம்.vivo U10 அதன் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உள்ளது என நாங்கள் எண்ணுவதற்கான காரணங்கள் கீழே.

டிசைன் மற்றும் டிஸ்பிளே

Vivi U10-யின் சிறப்பம்சங்களாவன, ஹாலோ ஃபுல்வியூ ™, 19.5: 9 என்ற விகிதத்தில்எச்டி + ஐபிஎஸ் 6.35 இன்ச் டச்ஸ்க்ரீன் டிஸ்பிளே, 81.91%, ஸ்கிரீன்-டூ-பாடி ரேஷியோ மற்றும் 720 x 1544 பிக்சல் ரீசொல்யூஷன்.  159.4 மிமீ x 76.7 மிமீ x 8.9 மிமீ அளவில் இந்த ஸ்மார்ட்போன் 190.5 கிராம் எடையைக் கொண்டுள்ளது.டிசைனை பற்றிப் பேசும்போது, மயில் பச்சை நிறத்தில் இருந்து அடர் நீலம் வரையான சாம்பல் நிறமுடன் ஸ்மார்ட்போனின் எலக்ட்ரிக் ப்ளூ பிளாஸ்டிக் பாடி பார்வையை ஈர்க்கக்கூடிய கிரேடியன்ட் ஃபினிஷைக் கொண்டுள்ளது. மேலும்இந்த ஸ்மார்ட்போன் தண்டர் பிளாக் வண்ணத்திலும் கிடைக்கிறது.

மேலும், இது கையில் நன்றாக வைத்துக்கொள்ளக்கூடிய வகையில் இருக்கிறது, இது அழகாகவும் மற்றும் பயன்படுத்தும்போது மிகவும் வசதியாக இருக்கிறது. இதன் தயாரிப்பாளர்கள் இதை மிக எளிமையாகவும் மற்றும் கம்பீரமாகவும் வடிவமைத்துள்ளார்கள், இது கண்களையும் மனதையும் கவர்ந்திழுக்கிறது.

செயல்திறன்

vivo U10 ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 665 processorமூலம் இயக்கப்படுகிறது.இந்த ஸ்மார்ட்போன் Android 9 Pieஅடிப்படையிலான FunTouch OS 9-யில் இயங்குகிறது, இது ஒட்டுமொத்த செயல்திறனை உறுதிப்படுத்துகிறது.இது 3 GB மற்றும் 4 GB RAM மற்றும் 32 GB மற்றும் 64  GB சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. மொபைலில் புதிதாக பதிவிறக்கம் செய்யப்பட்ட பயன்பாடுகளின் வழியாக செல்வது ஒருபோதும் சிறந்ததாக இருந்ததில்லை. இதில் ஒரு பயன்பாட்டிலிருந்து இன்னொரு பயன்பாட்டிற்கான மாற்றம் சுலபமானதாகவும் மற்றும் தடையற்ற செயல்பாட்டைக் கொண்டதாகவும் உள்ளது.

பேட்டரி லைஃப்

இப்போது, அனைவரும் எதிர்பார்க்கக்கூடிய அம்சம் - பேட்டரி லைஃப்.vivo U10 சக்திவாய்ந்த 5000 mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது, இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது.இந்த விலை வரம்பில், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் உள்ள ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாகும்.மேலும், நீங்கள் பயணத்தில் இருந்தால், 10 நிமிட சார்ஜிங்கில் 4.5 நேரம் மொபைலில் பேசுவதற்க்கான வாக்குறுதியை அளிக்கிறது, எனவே நாள் முடிவடையும் வரை நீங்கள் நிச்சயமாக இந்த மொபைலை பயன்படுத்தலாம்.இது பிராண்ட் விற்பனையின் முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

மறுபுறம், அல்ட்ரா கேம் பயன்முறை அற்புதமாக உள்ளது.கேம் கவுண்டவுன், 4D அதிர்வுகள், லோ ப்ளூ ரே கேம் ஐ பாதுகாப்பு போன்ற கேமிங் சார்ந்த அம்சங்களை இது கொண்டுள்ளது.5000 mAh பேட்டரி நீங்கள் விரும்பும் வரை கேமிங்கில் உங்களை வைத்திருக்கும்.மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலல்லாமல், vivo U10 விளையாட்டுக்கு உறுதியளிக்கிறது, இது மிகவும் மென்மையானது மற்றும் தடங்கல் இல்லாதது.

கேமரா விவரக்குறிப்புகள்

ஸ்மார்ட்போன் வாங்கும்போது கேமராவை சரிபார்க்காமல் ஒருபோதும் ஒருவரும் வாங்குவதில்லை.எல்லாவற்றிற்கும் மேலாக, குறிப்பாக ஒரு நாள் முழுவதும் ஒரு செல்ஃபி கூட எடுக்காமல் ஒருவரால் எப்படிப் நாளை கழிக்க முடியும்? கேமராக்களைப் பற்றி பேசுகையில், 13 MP சென்சார் f/2.2 அபர்சர், 8 MP வைட்-ஆங்கிள் லென்ஸ் f/2.2 அபர்சர், 2 MP போட்ரேட் ஷாட்களுடன், அதன் பின் பகுதியில் f/2.4 அபர்சர் உடன், vivo U10 டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.வண்ணங்கள் மற்றும் பின்னணியின் சரியான சமநிலையுடன் பிரம்மாண்டமான அல்ட்ராவைடு புகைப்படங்களை இப்போது நீங்கள் படம்பிடிக்கலாம்.இதில் f/1.8 அபர்சர் கொண்ட 8 MPஃப்ரண்ட் கேமராவும் உள்ளது. ஸ்மார்ட்போன் விலையைப் பொறுத்தவரை, கேமரா செயல்திறன் நிச்சயமாக எதிர்பார்ப்புகளை மீறுகிறது, குறிப்பாக டச் டு ஃபோகஸ், ஆட்டோ ஃப்ளாஷ், டிஜிட்டல் ஜூம் மற்றும் ஃபேஸ் டிடக்க்ஷன் போன்ற உட்புற அம்சங்களை இது கொண்டுள்ளது.உங்கள் வாழ்க்கையை இன்ஸ்டாகிராம் செய்ய நீங்கள் விரும்பினால், இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் பரிசீலிக்க வேண்டும்.

விலை

இந்த சாதனத்தின் விலை நிர்ணயம் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். ரூ .8,990 விலையில் 3GB RAM மற்றும் 32 GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.அதேசமயம், ரூ .9,990 விலையில் 3GB RAM மற்றும் 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.இருப்பினும், 4GB RAM மற்றும் 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஒன்றை நீங்கள் விரும்பினால், நீங்கள் ரூ .10,990 செலவிட வேண்டும்.பட்ஜெட் பிரிவில் உள்ள மற்ற ஸ்மார்ட்போன்களிடமிருந்து கவனத்தைத் ஈர்க்கும் வகையில் இந்த விலை உள்ளது.

 


அம்சங்களைப் பொருத்தவரை, vivo U10 இப்போது தொழில்துறையில் ஒரு போட்டியில் உள்ள ஸ்மார்ட்போன் ஆகும்.இது கற்பனை செய்ய முடியாத அளவிற்கு சில விவரக்குறிப்புகளுடன் லோட் செய்யப்பட்டுள்ளது. இதன் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் சிறந்த செயல்திறன் பிரம்மிப்பானது. இருப்பினும்,  இதைப் பார்த்தால் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் போலத் தெரியாது. அனால், இதுதான் உண்மை.

First published: October 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading