விரைவில் இந்தியாவில் வெளிவருகிறது VIVO S1..!

கடந்த வாரம் இந்தோனேஷியாவில் 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட S1 ஸ்மார்ட்ஃபோன் 17,800 ரூபாய்க்கு அறிமுகமானது.

Web Desk | news18
Updated: July 19, 2019, 7:56 PM IST
விரைவில் இந்தியாவில் வெளிவருகிறது VIVO S1..!
விவோ S1
Web Desk | news18
Updated: July 19, 2019, 7:56 PM IST
விவோ-வின் புதிய S-சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்கள் குறித்து டீசர் வீடியோ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

S-சீரிஸ் சிறப்பு அம்சங்கள், விலைப்பட்டியல், வெளியீட்டுத்தேதி என எந்தவொரு அறிவிப்புகளும் டீசர் வீடியோவில் குறிப்பிடப்படவில்லை. விரைவில் இந்தியாவில் S சீரிஸ் என்ற ஒற்றை அறிவிப்பு மட்டுமே கிடைத்துள்ளது.

சர்வதேச அளவில் விவோ S1 ஸ்மார்ட்ஃபோன் சீனாவில் கடந்த மார்ச் மாதமே அறிமுகம் செய்யப்பட்டது. S சீரிஸின் விவோ S1 ப்ரோ ஸ்மார்ட்ஃபோனும் அதேநாளிலேயே சீனாவில் வெளியானது. சீனாவைத் தொடர்ந்து சமீபத்தில் இந்தோனேஷியாவிலும் காஸ்மிக் க்ரீன் மற்றும் ஸ்கைலைன் ப்ளூ ஆகிய இரண்டு நிறங்களில் S சீரிஸ் அறிமுகமானது.


இந்தியாவிலும் S சீரிஸ் விரைவில் விற்பனைக்கு வரும் என்ற அறிவிப்பு வந்தபோதிலும் இந்தியாவுக்கென்ற பிரத்யேக வடிவமைப்பு மற்றும் சிறப்பு அம்சங்களுடனே விவோ S1 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சமீபத்தில்தான் விவோ Z1 ப்ரோ 7,490 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் இந்தோனேஷியாவில் 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட S1 ஸ்மார்ட்ஃபோன் 17,800 ரூபாய்க்கு அறிமுகமானது.

மேலும் பார்க்க: இன்ஸ்டாகிராமில் ‘ஹேக்கிங் பக்’... கண்டறிந்த தமிழருக்கு 20 லட்சம் ரூபாய் பரிசு!
First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...