அட்டகாசமான ஆஃபர் உடன் இன்று முதல் விற்பனையில் Vivo S1!

4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Vivo S1 ஃபோனின் விலை 17,990 ரூபாய் ஆகும்.

அட்டகாசமான ஆஃபர் உடன் இன்று முதல் விற்பனையில் Vivo S1!
vivo S1
  • News18
  • Last Updated: August 14, 2019, 7:08 PM IST
  • Share this:
சமீபத்தில் ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo S1 ஸ்மார்ட்ஃபோன் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது.

ஸ்டோர்களில் மட்டுமல்லாது ஆன்லைன் மூலமாகவும் Vivo S1 விற்பனைக்கு உள்ளது. முதற்கட்டமாக 4ஜிபி ரேம் உடனான ஃபோன் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. 6ஜிபி ரேம் உடனான Vivo S1 சற்று தாமதமாக வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AMOLED பேனல், விரல்நுனி சென்சார், மூன்று ரியர் கேமிரா, 4,500mAh பேட்டரி ஆகியவை Vivo S1 ஸ்மார்ட்ஃபோனி சிறப்பு அம்சங்கள் ஆகும். நீலம் மற்றும் கறுப்பு என இரண்டு நிறங்களில் 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Vivo S1 ஃபோனின் விலை 17,990 ரூபாய் ஆகும்.


விவோ இந்தியா மட்டுமல்லாது ஃப்ளிப்கார்ட், அமேசான் ஆகிய ஆன்லைன் விற்பனைத் தளங்களில் சிறப்பு சலுகைகள் உடனான விற்பனையில் உள்ளது. ஆன்லைன் விற்பனைத் தளங்களில் ஹெச்டிஎஃப்சி க்ரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி வாங்கினால் 7.5 சதவிகித கேஷ்பேக் ஆஃபரும் வழங்கப்படுகிறது.

சில தளங்களில் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 10ஆயிரம் ரூபாய் வரையில் ஆஃபரும் உள்ளது. விரைவில் வெளிவர உள்ள 6ஜிபி ரேம்+ 64ஜிபி ஸ்டோரேஜ் ரக Vivo S1 ஸ்மார்ட்ஃபோனின் விலை 18,990 ரூபாயும் 6 ஜிபி ரேம்+ 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஃபோன் 19,990 ரூபாயாகவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: இனி உங்கள் விரல் ரேகைதான் பாஸ்வேர்டு... ஆண்ட்ராய்டு-க்கு கூகுளின் மாற்றம்!
First published: August 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்