நிலவை நெருங்கும் சந்திரயான் 2... ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது

செப்டம்பர் 7-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தடம் பதிக்கவுள்ளது லேண்டர் விக்ரம்

news18
Updated: September 2, 2019, 2:31 PM IST
நிலவை நெருங்கும் சந்திரயான் 2... ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது
சந்திரயான் 2
news18
Updated: September 2, 2019, 2:31 PM IST
நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக ஏவப்பட்ட சந்திரயான் -2 விண்கலத்தில் இருந்து லேண்டர் விக்ரம் இன்று வெற்றிகரமாக பிரிந்தது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22-ம் தேதி சந்திரயான்- 2 விண்கலத்தை இந்தியா ஏவியது.
பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த சந்திரயான் -2 விண்கலம், ஆகஸ்ட் 14-ம் தேதி பூமியிலுருந்து விலகி, நிலவை நோக்கி பயணத்தைத் தொடங்கியது.


படிப்படியாக தன் சரித்திர பயணத்தைக் கடந்த சந்திரயான்- 2 விண்கலம் கடந்த 20-ம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது. அதன் சுற்றுவட்டப்பாதையையும் உயரத்தையும் இஸ்ரோ தொடர்ந்து மாற்றியமைத்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் நிலவின் வட்டப்பாதையில் 5-வது முறையாக சந்திரயான் -2 விண்கலத்தின் பாதை மாற்றியமைக்கப்பட்டது. இதன் மூலம் சந்திரயான் - 2 நிலவை நெருங்கியுள்ளது.பூமியில் இருந்து 3.8 லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்த நிலையில், சந்திரயான் 2 ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் விக்ரம் இன்று மதியம் 1.15 மணியளவில் தனியாக பிரிந்து நிலவின் தரைப்பகுதியை நோக்கி பயணத்தை தொடங்கியது.

Loading...
வரும் செப்டம்பர் 7-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தடம் பதிக்கவுள்ளது. பின்னர் அதிலிருந்து பிரக்யான ரோவர் உலவு வாகன, கீழிறங்கி நிலவில் ஆய்வு மேற்கொள்ளும்.
First published: September 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...