ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இனி ஒருமுறை மட்டும்தான் மெசேஜை பார்க்க முடியும்? - வருகிறது வாட்ஸ்அப்பின் அசத்தல் அப்டேட்!

இனி ஒருமுறை மட்டும்தான் மெசேஜை பார்க்க முடியும்? - வருகிறது வாட்ஸ்அப்பின் அசத்தல் அப்டேட்!

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

ஒருமுறை மட்டுமே பார்த்துக் கொள்ள முடிகிற வசதி, தற்போது புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றுக்கு மட்டுமே உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாட்ஸ் அப்பில் எழுத்து வடிவத் தகவல்களை (Text message) ஒருமுறை மட்டுமே படிக்கக் கூடிய வசதி கொண்டு வரப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் தவிர்க்க முடியாத தகவல் தொடர்பு செயலியாகிவிட்டது வாட்ஸ்அப். உலகம் முழுவதும் சுமார் 200 கோடி பயனர்களை கொண்டுள்ளது வாட்ஸ் அப். தனது பயனர்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள மெட்டா நிறுவனம் அடிக்கடி மேம்பட்ட, புதிய, நவீன தொழில்நுட்ப அம்சங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இதற்கான தனி R&D குழுவே செயல்படுகிறது. அந்த வகையில் வாட்ஸ் மற்றுமொரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்பைப் பொறுத்தவரை வியூ ஒன்ஸ் எனப்படும் தகவல்களை ஒருமுறை மட்டுமே பார்த்துக் கொள்ள முடிகிற வசதி புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றுக்கு மட்டுமே உள்ளது.

இந்நிலையில் எழுத்து வடிவத் தகவல்களுக்கும் இந்த வசதியைக் கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வசதி மூலமாக அனுப்பப்படும் தகவல்களைப் பெறும் நபர், அதனை ஸ்கிரீன்ஷாட் எடுக்கவோ காப்பி செய்யவோ மற்றவர்களுக்கு பகிரவோ முடியாது.

First published:

Tags: WhatsApp, Whatsapp Update