• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ரூ .449 ப்ரீபெய்ட் பிளானில் மாற்றம் செய்துள்ள Vodafone - தினமும் கூடுதல் டேட்டா!

ரூ .449 ப்ரீபெய்ட் பிளானில் மாற்றம் செய்துள்ள Vodafone - தினமும் கூடுதல் டேட்டா!

Vodafone

Vodafone

இரவில் இலவச டேட்டா (12:00 AM முதல் 6:00 AM) , தினசரி 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் அழைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் வழங்குகிறது.

  • Share this:
தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் ஐடியா (Vi) அதன் ப்ரீபெய்டு பிளான்களில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது ரூ .449 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. தற்போது அறிவித்துள்ள மாற்றத்தின் படி, தினமும் இரட்டை டேட்டா, அதாவது ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டா மற்றும் 5ஜி பிரீமியம் சந்தாவை வழங்குகிறது.

மேலும் இரவில் இலவச டேட்டா (12:00 AM முதல் 6:00 AM) , தினசரி 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் அழைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் வழங்குகிறது. வார இறுதியில் டேட்டா ரோல்ஓவர் வசதி மற்றும் வி மூவிஸ் & டிவி ஆப் சந்தாவும் உள்ளது. இந்த பிளானின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.

ரூ . 444 ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் :

ரிலையன்ஸ் ஜியோ ரூ .444 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானை கொண்டுள்ளது, இதில் அனைத்து நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும். இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டாவும் அடங்கும், அதாவது நீங்கள் மொத்தம் 112 ஜிபி டேட்டாவை பெறுகிறீர்கள். மேலும் ஜியோ ஆப்ஸ்களுக்கான அணுகல் சந்தாவையும் பெறுவீர்கள். இந்த திட்டம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

ஜியோவில் ரூ .249 பிளானும் உள்ளது. இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, அதாவது மொத்தம் 56 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், உள்ளிட்ட பிற சேவைகளும் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த பிளானின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். ஜியோ ப்ரீபெய்ட் யூசர்கள் அனைவரும் ஜியோ செயலிகளுக்கு இலவச அணுகலைப் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 449 ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் :

ஏர்டெல் ரூ .449 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானை கொண்டுள்ளது. ஏர்டெல்லின் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும்.

மேலும் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றின் இலவச அணுகலையும் வழங்குகிறது. இந்த ப்ரீபெய்டு பிளானின் வேலிடிட்டி காலம் 56 நாட்கள் ஆகும்.

ALSO READ |  பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன்பு இதை நோட் பண்ணுங்க.. பிரபல வங்கியில் மாறிய ரூல்ஸ்!

மேற்கண்ட ஜியோ மற்றும் ஏர்டெல் பிளான்களுடன் ஒப்பிடுகையில் ரூ .449 என்ற விலையில் விஐ நிறுவனம் வழங்கும் ப்ரீபெய்டு பிளானில் 4 ஜிபி டேட்டா தினமும் வழங்கப்படுவதால், அதிகளவு டேட்டா பயன்படுத்துபவர்கள் மற்றும் வீட்டில் இருந்தே வேலை செய்பவர்களுக்கு இந்த பிளான் சிறந்த தேர்வாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: