Vodafone Idea: வோடாஃபோன் ஐடியாவின் ரூ.99, ரூ.109 பிளான் அறிமுகம் - ஜியோ ஏர்டெல் பிளான்கள் என்ன?

ஏர்டெல், ஜியோ

109 ரூபாய் திட்டத்திலும், மேற்கூறிய சிறபம்சங்களே ப்ரீப்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

  • Share this:
பிரீப்பெய்ட் கஸ்டமர்களை குறிவைத்து வோடாஃபோன் ஐடியா நிறுவனங்கள் ரூ. 99 மற்றும் ரூ. 109 பிளான்களை அறிமுகம் செய்துள்ளது.

வோடோஃபோன் ஐடியா நிறுவனங்கள் ப்ரீப்பெய்ட் திட்டத்தில் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ப்ரீப்பெய்ட் திட்டங்களை உபயோகிக்கும், மாத சந்தா வாடிக்கையாளர்களை குறிவைத்து குறைந்த விலையில் ப்ரீப்பெய்ட் திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு திட்டங்களும் ஏற்கனவே இருந்த திட்டங்களைவிட மலிவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இனிமேல், வோடோஃபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் ரூ.99 மற்றும் 109 ரூபாயில் ரீச்சார்ஜ் செய்துகொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரூ.99, ரூ.109 திட்டங்களின் ஸ்பெஷல்

ரூ. 99 திட்டங்களை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் 1 ஜிபி இலவச டேட்டா கிடைக்கும். 18 நாள் வேலிடிட்டியில் கிடைக்கும் இந்த திட்டத்தில் எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியாது. 100 ரூபாய்க்கும் குறைவாக ரீச்சார்ஜ் திட்டங்களை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கும், குறைவான டேட்டா பயன்படுத்துபவர்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்

109 ரூபாய் திட்டத்திலும், மேற்கூறிய சிறபம்சங்களே ப்ரீப்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். 1 ஜிபி இலவச டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸூடன், இலவச எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதி கிடையாது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 20 நாட்கள். இரண்டு ப்ரீப்பெய்ட் திட்டங்களையும் அறிவித்த வோடாஃபோன் ஐடியா நிறுவனங்கள் உடனடியாக அதனை நடைமுறைக்கும் கொண்டு வந்துள்ளது.

இதேபோல், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் குறைந்த விலையில் கொடுக்கும் ப்ரீப்பெய்ட் திட்டங்களின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

ஜியோவின் 98 ரூபாய் ப்ரீப்பெய்ட் திட்டத்தில் நாள்தோறும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஆனால் வோடாஃபோன் ஐடியாவில் இந்த திட்டம் கிடையாது. 14 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 21 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். அன்றாட டேட்டா வரம்பு மீறியவுடன் இணையத்தின் வேகம் குறைக்கப்படும். அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ்கள் மற்றும் எஸ்.எம்.எஸ் வசதி உண்டு.

Also read... Airtel: 3 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அதிரடியாக நீக்கிய ஏர்டெல் நிறுவனம் - புதிய பேக் அறிமுகம்!

ஏர்டெல் 129 ரூபாய் திட்டம்

ஏர்டெல் திட்டங்களைப் பொறுத்தவரையில் 100 ரூபாய்க்கும் குறைவாக அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் திட்டங்கள் எதுவும் இல்லை. மேலும் வேலிடிட்டியும் 14 நாட்கள் மட்டுமே கொடுக்கப்படுகிறது.129 ரூபாய் திட்டம் 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 1 ஜபி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ, விங் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்டீரிம் செயலிகளின் உபயோகமும் கூடுதலாக கொடுக்கப்படுகிறது.

மூன்று மாதங்களுக்கு ஒரே நேரத்தில் ரீச்சார்ஜ் செய்வது பலருக்கும் கடினமாக இருப்பதால், ஒரு மாத வேலிடிட்டி பேக்குகளை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அந்த பேக்குகளையும் ரீச்சார்ஜ் செய்வது இயலாதபோது குறுகிய கால வேலிடிட்டி பேக்குகள் அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. அந்தவகையில், வோடாஃபோன் ஐடியா நிறுவனத்தின் குறைந்த விலை ப்ரீப்பெய்ட் பிளான்கள் கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: