Home /News /technology /

Vi வாடிக்கையாளர்கள் தங்கள் டேட்டா பேலன்ஸ், பிளான் வேலிடிட்டியை எவ்வாறு சரிபார்ப்பது?

Vi வாடிக்கையாளர்கள் தங்கள் டேட்டா பேலன்ஸ், பிளான் வேலிடிட்டியை எவ்வாறு சரிபார்ப்பது?

வோடபோன் ஐடியா

வோடபோன் ஐடியா

Vodafone-Idea | வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் தங்களது வாலிடிட்டியை சரிபார்க்க பய்னபடுத்தப்படும் USSD குறியீடுகள் மெயின் பேலன்ஸ் சரிபார்ப்பை போலவே இருக்கும்.

Vodafone-Idea (Vi) நெட்ஒர்க், ஏர்டெல் மற்றும் ஜியோவிற்கு அடுத்தபடியாக நாட்டில் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர் நிறுவனம் ஆகும். நாட்டிலேயே சிறந்த பதிவேற்ற வேகம் மற்றும் VoWiFi போன்ற புதிய சேவைகளை வழங்குவதன் மூலம், Vi இறுதியாக அதன் போட்டி நிறுவனங்களுக்கு சவால் விடுத்து வருகிறது. Vi சமீபத்தில் புனேவில் அதன் 5G திறன்களை நிரூபித்தது. மேலும் இது SA மற்றும் NSA நெட்வொர்க்குகளுடன் தயாராக இருப்பதாகக் நிறுவனம் தெரிவித்தது.

மேலும் Vi நெட்ஒர்க் வழங்கும் குறிப்பிட்ட ப்ரீபெய்ட் திட்டங்களில், இரவு நேர டேட்டா மற்றும் வார இறுதி டேட்டா ரோல்ஓவர் போன்ற சில நல்ல சலுகைகளையும் வழங்குகிறது. பிற நெட்ஒர்க்குகளை போல Vi தனது 4G ப்ரீபெய்ட் திட்டங்களின் விலைகளை உயர்த்தியுள்ளதால், உங்கள் டேட்டா பேலன்ஸைக் கட்டுக்குள் வைத்திருப்பது முன்னெப்போதையும் விட இப்போது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் உங்களுக்கு எவ்வளவு டேட்டா பேலன்ஸ் இருக்கிறது மற்றும் எஸ்எம்எஸ் பேலன்ஸ் மற்றும் உங்கள் ப்ரீபெய்ட் சிம்மின் பிளான் வாலிடிட்டி போன்றவற்றை எவ்வாறு சரிபார்ப்பது என்பதை இந்த பதிவில் காணலாம்.

Vi 4G டேட்டா பேலன்ஸை எவ்வாறு சரிபார்க்கலாம்?

உங்கள் மொபைலில் USSD (Unstructured Supplementary Service Data) குறியீட்டை டயல் செய்வதன் மூலம் உங்கள் டேட்டா பேலன்ஸை எளிதாகச் சரிபார்க்கலாம். அதற்கு *199*2*2# என்ற குறியீட்டை டயல் செய்தால் போதும், ஒரு நாளுக்கு எவ்வளவு டேட்டா மீதம் இருக்கிறது. மேலும் ஏதேனும் கூடுதல் டேட்டா பேக் மீதம் இருக்கிறதா, போன்றவற்றை ஒரு ஃபிளாஷ் செய்தியுடன் வெளியிடும்.

Vi-ல் SMS பேலன்ஸை எவ்வாறு சரிபார்க்கலாம்?

இப்போது, ​​உங்கள் SMS பேலன்ஸை சரிபார்ப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் பல பிளான்கள் SMS நன்மைகளுடன் வருவதில்லை. நீங்கள் தேர்ந்தெடுத்த பிளான்களில் டேட்டா மற்றும் கால்களுக்கான ஆதரவு மட்டுமே இருந்தால் உங்களால் SMS அனுப்ப முடியாது. ஒருவேளை உங்கள் SMS பேலன்ஸை சரிபார்க்க, *199*1*8# எண்ணை டயல் செய்யவும். அது உங்களுக்கு விவரங்களை ஃபிளாஷ் செய்தியாக அனுப்பும்.

Vi-ல் மெயின் பேலன்ஸை எவ்வாறு சரிபார்க்கலாம்?

இதற்கு *199*2*1# என்பதை டயல் செய்தால் போதுமானது. இந்த USSD குறியீடு உங்கள் Vi எண்ணுக்கான மெயின் பேலன்ஸை சரிபார்க்கும். மேலும் இந்த குறியீடு அனைத்து டேட்டா தொகுப்புகள் மற்றும் உங்கள் எண்ணில் செல்லுபடியாகும் முழு தகவலையும் வழங்குகிறது. அதுமட்டுமின்றி, ஏற்கனவே உள்ள திட்டங்கள் பற்றிய தகவல்களையும் நீங்கள் பெறுவீர்கள். மாற்றாக, நீங்கள் அதே தகவலை பெற *199# அல்லது *121# என்று டயல் செய்யலாம்.

Vi வாலிடிட்டி-யை எவ்வாறு சரிபார்க்கலாம்?

வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் தங்களது வாலிடிட்டியை சரிபார்க்க பய்னபடுத்தப்படும் USSD குறியீடுகள் மெயின் பேலன்ஸ் சரிபார்ப்பை போலவே இருக்கும். டயலர் பயன்பாட்டைத் திறந்து அதில் *199#, *121# அல்லது *199*2*1# என்ற குறியீட்டை அழைக்கவும். உங்கள் Vi மொபைல் எண்ணின் மீதமுள்ள வாலிடிட்டி தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும்.

ஆன்லைனில் Vi பேலன்ஸை எவ்வாறு சரிபார்க்கலாம்?

USSD குறியீடுகள் தவிர, Vodafone Idea (Vi) சந்தாதாரர்கள் Vi app, website மற்றும் WhatsApp வழியாக ஆன்லைனில் தங்கள் பிளான்களின் பேலன்ஸ் மற்றும் வாலிடிட்டியை சரிபார்க்கலாம். அவற்றை விரிவாக பின்வருமாறு காணலாம்.

ஆப் மூலம் Vi பேலன்ஸை சரிபார்த்தல்:

* கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரிலிருந்து Vi ஆப்பை டவுன்லோட் செய்யுங்கள்.

* உங்கள் எண்ணைப் பயன்படுத்தி ஆப்பில் உள்நுழைய வேண்டும்.

* உங்கள் பேக்கின் விவரங்களுடன் நீங்கள் வரவேற்கப்படுவீர்கள்

* மேலும் அந்த நாளில் எஞ்சியிருக்கும் டேட்டாவின் அளவு, பேக்கின் வாலிடிட்டி தன்மை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிளான்களை பொறுத்து வார இறுதி தரவு பரிமாற்றத்திற்காக நீங்கள் சேகரித்த டேட்டாவின் அளவு ஆகியவற்றை ஆப் உங்களுக்கு காண்பிக்கும். ஏற்கனவே உள்ள பிளான் காலாவதியாகிவிட்டால், உங்கள் எண்ணை ரீசார்ஜ் செய்வதற்கான விருப்பத்தையும் ஆப் உங்களுக்கு வழங்கும்.

Also Read : ஜனவரியில் அறிமுகமாகும் புதிய Samsung Galaxy S21 FE ஸ்மார்ட்ஃபோன்!

வாட்ஸ்அப் மூலம் விஐ பேலன்ஸை சரிபார்த்தல்:

* வோடபோன் ஐடியா எண்ணின் பேலன்ஸ் மற்றும் வாலிடிட்டி தன்மையை வாட்ஸ்அப் வழியாகவும் சரிபார்க்கலாம்.

* இதற்கு உங்கள் போன் கான்டாக்ட்டில் 9654297000 என்ற எண்ணைச் சேர்த்து, அந்த எண்ணிற்கு உங்கள் வாட்ஸ் மூலம் Hello அல்லது Hi என்று அனுப்பவும்

* இப்போது ஒரு தானியங்கி செய்தி தோன்றும்.

* அதில் மெனுவைத் தட்டவும். அங்கு நீங்கள் பேலன்ஸ் விருப்பத்தைக் காண்பீர்கள். அதைத் கிளிக் செய்யவும்.

* மற்றொரு செய்தி தோன்றும். பிறகு பதிலுக்கு 1 என்று டைப் செய்து அனுப்புவதன் மூலம் மை பேலன்ஸ் என்பதை தேர்ந்தெடுக்கவும்.

* அது முதலில், நீங்கள் ரீசார்ஜ் செய்ய விரும்பும் உங்கள் ஃபோன் எண்ணை உறுதிப்படுத்தும்படி கேட்கும்.

* உறுதிப்படுத்தியதும், உங்கள் தொலைபேசி எண்ணுக்கு OTP அனுப்பப்படும். OTP ஐ டைப் செய்து உறுதிப்படுத்தவும்.

* உறுதிப்படுத்திய பிறகு, உங்கள் கணக்கின் அனைத்து விவரங்களையும் பெறுவீர்கள். அதில் மீதமுள்ள டேட்டா பேக் அளவு, ஏதேனும் கூடுதல் பேக் விவரங்கள், உங்கள் பிளானின் வாலிடிட்டி தன்மை மற்றும் வார இறுதி டேட்டா பரிமாற்ற விவரங்கள் ஆகியவை அடங்கும்.

Also Read : ரூ.30,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த குரோம்புக் லேப்டாப்களின் பட்டியல்...!

இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் Vi பேலன்ஸை சரிபார்த்தல்:

Vi இணையதளத்திலும் உங்கள் பேலன்ஸை எளிதாகச் சரிபார்க்கலாம்.

* www.myvi.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்

* நீங்கள் உங்கள் கணக்கில் உள்நுழைய வேண்டும். எண்ணை டைப் செய்து OTP வழியாக உள்நுழையவும்

* நீங்கள் உள்நுழைந்ததும், உங்கள் ப்ரீபெய்டு எண்ணிற்கான டாஷ்போர்டைக் காண்பீர்கள். அதேபோல உங்கள் பேக்கின் விவரங்களை அங்கே பார்க்கலாம். அதில் அந்த நாளுக்கு எஞ்சியிருக்கும் டேட்டாவின் அளவு, பேக்கின் வாலிடிட்டி விவரம், அத்துடன் வார இறுதி டேட்டா பரிமாற்றத்திற்காக நீங்கள் சேகரித்த டேட்டாவின் அளவு ஆகியவை இருக்கும்.

Also read... ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவரா நீங்கள்? கூகுள் வெளியிட்டுள்ள 5 வழிகள்!

* பேக் விவரங்களைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​உங்கள் Vi எண்ணின் மெயின் பேலன்ஸ், செயலில் உள்ள சேவைகள் மற்றும் கடைசி ரீசார்ஜ் தேதிகள் ஆகியவற்றைக் காண்பீர்கள். அதேபோல இணையதளத்திலும் நீங்கள் நேரடியாக ரீசார்ஜ் செய்யலாம்.

IVR மூலம் Vi பேலன்ஸ் சரிபார்த்தல்:

199ஐ டயல் செய்தால், Vi இலிருந்து IVR (Interactive Voice Response) உங்களுக்கு கிடைக்கும். IVR உங்களுக்கு வழங்கும் விருப்பமான மொழியை டயல் செய்வதன் மூலம் உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு, 1 ஐ டயல் செய்வதன் மூலம் தொடரவும். அதில் உங்கள் டேட்டா பேக் பேலன்ஸ் மற்றும் வாலிடிட்டி ஆகிய விவரங்கள் கிடைக்கும். உங்கள் விசாரணையுடன் சில ரீசார்ஜ் சலுகைகளையும் பெறுவீர்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Vi, Vodafone

அடுத்த செய்தி