நீங்க VI வாடிக்கையாளரா? இந்த பிளான் ரீசார்ஜ் செய்தால் போதும்..Disney+ Hotstar VIP இனி வருடம் முழுவதும் பார்க்கலாம்..

மாதிரிப் படம்

VI தங்களது வாடிக்கையாளர்களுக்குடிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி அணுகலை 1 வருடத்திற்கு வழங்கும் ரீசார்ச் திட்டங்களை அறிவித்துள்ளது.

  • Share this:
வோடபோன் ஐடியா கடந்த புதன்கிழமை அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி அணுகலை 1 வருடத்திற்கு வழங்கும் ரீசார்ச் திட்டங்களை அறிவித்துள்ளது. ரூ.401 முதல் ஆரம்பமாகும் ரீசார்ஜ் பிளான்களில் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆபர்கள் வழங்கப்படுகின்றன.

அதாவது, ரூ.401, ரூ.601, ரூ.501 மற்றும் ரூ.801 விலையுடன் கணக்கை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி கிடைக்கும் என கூறப்படுகிறது. அதே சமயம் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பெற ரூ.499 முதல் தொடங்கும் பிளான்களை பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றான டிஸ்னி + ஹாட்ஸ்டாருடன் VI நெட்ஒர்க் தற்போது இணைந்துள்ளது. இது VI வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருட உயர்தர பொழுதுபோக்கு மற்றும் கிரிக்கெட் நிறைந்த வீடியோக்களை வழங்குகிறது. இதுகுறித்து வோடபோன் ஐடியா ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, "இது பொழுதுபோக்கு மற்றும் கிரிக்கெட்டின் மிகவும் பிரபலமான இரண்டு வகைகளில் இந்தியர்களுக்கு சிறந்த வீடியோ உள்ளடக்கத்தை கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

VI ஏற்கனவே தங்களது வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பிரைம், நெட்ஃபிக்ஸ் அணுகலுக்கான தொகுப்பைத் தேர்ந்தெடுக்க அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஈவிபி பிரப் சிம்ரன் சிங் கூறியதாவது "இந்த ஆண்டு உற்சாகமான கிரிக்கெட் நடவடிக்கைகள் நிரம்பிய காலெண்டருடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் வழங்கும் உயர்தர வீடியோக்களை Vi லைவ் ஸ்ட்ரீமிங் செய்கிறது. மேலும் Vi வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருட அணுகலை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Vi ப்ரீபெய்டு திட்டங்களின் விவரங்கள்:

Vi ரூ.401 ப்ரீபெய்ட் திட்டம்: இந்த பேக்கின் வாலிடிட்டி 28 நாட்கள். ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் 16 ஜிபி கூடுதல் டேட்டாவுடன் வருகிறது. இது அன்லிமிடட் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ், வீக்கெண்ட் ரோல்ஓவர், பிங் ஆல் நைட் நன்மைகள் மற்றும் 1 ஆண்டு டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா மற்றும் வி மூவிஸ் & டிவி கிளாசிக் ஆகியவற்றை கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.

Vi ரூ.501 ப்ரீபெய்ட் திட்டம்: இது டேட்டா ஒன்லி பேக் ஆகும். இதன் வாலிட்டிடி 56 நாட்கள். மேலும், மொத்தமாக 75 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த பேக் ஒரு ஆண்டுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா மற்றும் வி மூவிஸ் & டிவி கிளாசிக் அணுகலை வழங்குகிறது.

Vi ரூ.601 ப்ரீபெய்ட் திட்டம்: இந்த ரீசார்ஜ் திட்டத்தின் வாலிடிட்டி 56 நாட்கள். அன்லிமிடெட் கால்ஸ், ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் 32 ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. மேலும் ஒரு வருடத்திற்கான டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை வழங்குகிறது.

Vi ரூ.801 ப்ரீபெய்ட் திட்டம்: இந்த பேக் அன்லிமிடெட் கால்ஸ், 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா ஆகியவற்றை வழங்குகிறது. இதன் வாலிடிட்டி 84 நாட்கள். இந்த தொலைதொடர்பு நெட்வொர்க் 48 ஜிபி கூடுதல் டேட்டாவை வீக்எண்டு ரோல்ஓவர் மற்றும் இரவு நேர நன்மைகளுடன் வழங்குகிறது. இது 1 ஆண்டிற்கான டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி மற்றும் வி மூவிஸ் & டிவி கிளாசிக் அணுகலை வழங்குகிறது. அதிக ரீசார்ஜ் பேக்குடன் அதிக வாடிக்கையாளர்களை அதன் நெட்வொர்க்கில் ஈர்க்கவும், அவற்றை OTT பயன்பாடுகளுடன் தொகுக்கவும் Vi நிறுவனம் நோக்கமாக வைத்துள்ளது.
Published by:Tamilmalar Natarajan
First published: