Home /News /technology /

ப்ரீபெய்ட் வடிக்கையாளர்களுக்காக அதிவேக இலவச இணைய சேவையை அறிவித்துள்ள Vi - விவரங்கள் உள்ளே!

ப்ரீபெய்ட் வடிக்கையாளர்களுக்காக அதிவேக இலவச இணைய சேவையை அறிவித்துள்ள Vi - விவரங்கள் உள்ளே!

Vodafone

Vodafone

இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் டூயல் டேட்டா மற்றும் வார இறுதி டேட்டா ரோல்ஓவர் நன்மைகளை அளிக்கின்றன. இது வாடிக்கையாளர்கள் வாரம் முழுவதும் பயன்படுத்தப்படாத தரவை குவித்து வார இறுதியில் ஒன்றாகப் பயன்படுத்த அனுமதிக்கிறது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
தற்போதுள்ள வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்கும், மேலும் அதிக வாடிக்கையாளர்களை தங்களது நெட்வொர்க்கிற்கு ஈர்ப்பதற்கும், Vi நிறுவனம் ஒரு செம ஆஃபரை அறிவித்துள்ளது.

நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தற்போது வாடிக்கையாளர்கள் எந்த ஒரு கூடுதல் கட்டணமும் இன்றி அன்லிமிடெட் ஹைஸ்பீட் இன்டர்நெட் வசதியை பெறலாம். இந்த இலவச இணைய சேவை நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை கிடைக்கும். இதற்காக வாடிக்கையாளர்கள் எந்த ஒரு எக்ஸ்ட்ரா கட்டணமும் செலுத்த தேவையில்லை. 

இருப்பினும் இந்த வசதியை பெற வாடிக்கையாளர்கள் தங்கள் Vi சிம்மில் ரூ. 249 மற்றும் அதற்கு மேற்பட்ட விலையை கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களைத் தேர்வு செய்திருக்க வேண்டும். இது குறித்து டெல்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா தொற்றுநோய் காலத்தில் மொபைல் இன்டர்நெட் உலகளவில் அனைத்து மக்களுக்கும் ஆக்ஸிஜனாக மாறியுள்ள நிலையில், வரம்பற்ற அதிவேக இரவு நேர டேட்டா போனஸ் Vi வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். Vi ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் இப்போது வரம்பற்ற இன்போடெயின்மென்ட் மூலம் ஒரு நாள் முழுவதும் அதிகவேக இணைய சேவையை பெற முடியும். 

இனி தினசரி டேட்டா தீர்ந்துவிடுமோ என்று கவலைப்படாமல், உங்கள் அன்புக்குரியவர்களுடன் நீண்ட வீடியோ அழைப்புகள் அல்லது பதிவிறக்கங்களை மேற்கொள்ளலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. Vi வாடிக்கையாளர்கள் பல்வேறு OTT தளங்களில் படங்களை பார்ப்பதற்கும், Vi மூவிகள் மற்றும் டிவி ஆப்- களில் இருந்து பல்வேறு வீடியோக்களை பிரவுசிங் மற்றும் டவுன்லோட் செய்யவும் வரம்பற்ற அதிவேக இரவு நேரத் டேட்டாவை பயன்படுத்தலாம் என்று Vi நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும் டிவி ஆப் சுமார் 10 மில்லியனுக்கும் அதிகமான Vi சந்தாதாரர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

Also read... Realme Narzo 30 Pro, Narzo 30Aன் அட்டகாசமான சிறப்பம்சங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

இந்த ஆப் 13 வெவ்வேறு மொழிகளைக் கொண்ட 9500-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 400க்கும் அதிகமான நேரடி தொலைக்காட்சி சேனல்கள், ஒரிஜினல் வெப் சீரிஸ் மற்றும் சர்வதேச தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என அனைத்து வகைகளிலும் பெரிய பட்டியலுடன் அணுகலை வழங்குகிறது என்றும் Vi நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கூடுதலாக, வீக்எண்ட் ரோல்ஓவர் டேட்டா பெனிஃபிட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு Vi நிறுவனம் வழங்குகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தினசரி பயன்படுத்தாத டேட்டாவை சேகரித்து வைக்கவும் அதனை வார இறுதிகளில் பயன்படுத்தவும் அனுமதிக்கிறது. 

தற்போது, வார இறுதி ரோல்ஓவர் டேட்டா நன்மை ஏப்ரல் 2021 வரை மட்டுமே செல்லுபடியாகும். மேலும், ரூ.299, ரூ.449 மற்றும் ரூ.699 விலை கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு டூயல் டேட்டா அணுகலை வழங்கும் ஒரே டெல்கோ, Vi நெட்ஒர்க் மட்டும் தான். இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் டூயல் டேட்டா மற்றும் வார இறுதி டேட்டா ரோல்ஓவர் நன்மைகளை அளிக்கின்றன. இது வாடிக்கையாளர்கள் வாரம் முழுவதும் பயன்படுத்தப்படாத தரவை குவித்து வார இறுதியில் ஒன்றாகப் பயன்படுத்த அனுமதிக்கிறது. அதன்படி, இந்த திட்டங்கள் ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டாவை வழங்குகின்றன. இது ஸ்ட்ரீமிங் ஷோக்களுக்கு அல்லது வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு ஏற்றதாக அமையும். மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் டேட்டா வீணாகி விடுமோ என்று கவலைப்படத் தேவையில்லை. இந்த ப்ரீபெய்டு திட்டங்கள் முறையே 28 நாட்கள், 56 நாட்கள் மற்றும் 84 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Vi

அடுத்த செய்தி