Home /News /technology /

Vi-ன் ரூ.267 ப்ரீப்பெய்ட் பிளான் - இவ்வளவு ஆஃபர்களா?

Vi-ன் ரூ.267 ப்ரீப்பெய்ட் பிளான் - இவ்வளவு ஆஃபர்களா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் வழங்குவதுபோல் பிரபலமான ஓடிடி தளங்களான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5 உள்ளிட்ட தளங்களின் ஒருவருட இலவச சந்தா திட்டம் எதுவும் இதில் கிடையாது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
வோடாஃபோன் ஐடியா நிறுவனம் 30 நாள் வேலிடிட்டியுடன் கூடிய 267 ரூபாய் ப்ரீப்பெய்ட் ரீச்சார்ஜ் பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது.

Vi என கூறப்படும் வோடாஃபோன் ஐடியா நிறுவனம் மாதாந்திர வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதுப்புது ப்ரீப்பெய்ட் ரீச்சார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகிறது. லேட்டஸ்டாக 267 ரூபாய் மாதாந்திர ப்ரீப்பெய்ட் ரீச்சார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்களாகும். 25 ஜிபி டேட்டா மற்றும் நாள்தோறும் 100 எஸ்.எம்.எஸ்களை வாடிக்கையாளர்கள் அனுப்பிக் கொள்ளலாம். மேலும், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் வசதியுடன் Vi மூவீஸ் மற்றும் ஸ்டீரிமிங் ப்ளாட்மார்களை பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் வழங்குவதுபோல் பிரபலமான ஓடிடி தளங்களான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5 உள்ளிட்ட தளங்களின் ஒருவருட இலவச சந்தா திட்டம் எதுவும் இதில் கிடையாது. ஆனால் வோடாஃபோன் ஐடியாவின் மற்ற திட்டங்களில் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் வழங்கும் ஓடிடி இலவச சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த மாதாந்திர ப்ரீப்பெய்ட் திட்டத்தை விரும்பும் வாடிக்கையாளர்கள் வோடாஃபோன் ஐடியா நிறுவனத்தின் செயலி மற்றும் வெப்சடைகளின் வழியாக ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம்.

267 ரூபாய் ப்ளான்களைத் தவிர 200 மற்றும் 300 ரூபாய்களில் பல்வேறு திட்டங்களை வோடாஃபோன் ஐடியா கொடுக்கிறது. 299 ரூபாய் திட்டத்தை தேர்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு 4 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்கள், விஐ-யின் மூவீஸ் மற்றும் தொலைகாட்சிகளை இலவசமாக பார்த்துக்கொள்ளலாம். 249 ரூபாய் தேர்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு, 299 ரூபாய் திட்டத்தில் கிடைக்கும் அதே சிறப்பம்சங்கள் கிடைக்கும்.

ஆனால், ஒரு நாளைக்கு 1,5 ஜிபி டேட்டாவுக்கு மேல் உபயோகப்படுத்த முடியாது. இந்த இரண்டு திட்டங்களும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கொடுக்கப்படுகிறது. 269 ரூபாய் ரீச்சார்ஜ் திட்டத்தை தேர்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு 4 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள். இந்த திட்டத்தில் கூடுதல் சலுகைகள் எதுவும் இல்லை. கடந்த மாதம் ப்ரீப்பெய்ட் வாடிக்கையாளர்களுக்காக 60 நாள் வேலிடிட்டி கொண்ட 447 ரூபாய் ரீச்சார்ஜ் திட்டத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

Also read... Google Messages: கூகுள் மெசேஜில் OTP Auto-Delete அம்சம் விரைவில் அறிமுகம்!

அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வசதியுடன் 50 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், நாள்தோறும் 100 எஸ்.எம்.எஸ்களை அனுப்ப முடியும். இந்த திட்டத்தை தேர்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு வோடாஃபோன் ஐடியாவின் மூவீஸ் மற்றும் தொலைக்காட்சிகளை இலவசமாக பார்த்துக்கொள்ளலாம். இந்த திட்டத்தை வோடாஃபோன் அறிவித்த பிறகு ஏர்டெல் நிறுவனம் 60 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 456 ரூபாய் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வோடாஃபோன் ஐடியா நிறுவனத்துக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த பிளானில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்கள் உள்ளிட்ட பல சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Vi

அடுத்த செய்தி