உலகம் முழுவதும் இன்னும் சில தினங்களில் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. எனவே வாழ்க்கை துணையை தேடி கொள்ள உதவும் சில டேட்டிங் ஆப்ஸை பார்க்க இது ஒரு நல்ல நேரமாக இருக்கலாம். டேட்டிங் வாழ்க்கை உட்பட நம் வாழ்வின் பல அம்சங்கள் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக மாறி இருக்கின்றன. பல செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) ஆப்ஸ்களை போலவே, டேட்டிங் ஆப்ஸ்களும் உங்களுக்கு பொருத்தமான துணையை தேர்வு செய்ய அதிநவீன அல்காரிதம்களை கொண்டுள்ளன. மேலும் பிறரை சந்திக்க பாதுகாப்பான வழியை உருவாக்க இந்த ஆப்ஸ்கள் பிரைவஸி மற்றும் செக்யூரிட்டி அம்சங்களையும் வழங்குகின்றன. எனவே நீங்கள் காதல் வாழ்க்கையை துவக்கும் ஒரு வாய்ப்பை பெறலாம். இந்த காதலர் தினத்திற்கு முன் iPhone யூஸர்களுக்கான சிறந்த டேட்டிங் ஆப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.
பம்பிள் (Bumble):
Bumble என்பது iPhone மற்றும் Android-ல் உள்ள பிரபல டேட்டிங் ஆப்ஸ்களில் ஒன்றாகும். Best Friends Forever-ஐ கண்டறிய அல்லது டேட்டை கண்டறிய இது யூஸர்களை அனுமதிக்கிறது. பெண் யூஸர்கள் தங்களுக்கு பொருத்தமான ஆணுடன் உரையாடலை தொடங்க மற்றும் முதல் தொடர்பை (first contact) ஏற்படுத்தி கொள்ள இந்த ஆப் அனுமதிக்கிறது. அதே போல Bumble-ல் கொடுக்கப்படும் லைக்ஸ்கள் 24 மணிநேரம் மட்டுமே இருக்கும், அதன் பிறகு மறைந்துவிடு. SuperSwipes போன்ற பிரீமியம் சேவைகளை மாதத்திற்கு ரூ.450-க்கு நீங்கள் தேர்வு செய்யலாம்.
ஜூஸ்க் (Zoosk):
இது மற்றொரு பிரபல iPhone டேட்டிங் ஆப் ஆகும். இது ஸ்ட்ரெயிட் மற்றும் LGBTQ (lesbian, gay, bisexual, transgender, and questioning ) நபர்கள் இணைந்து கொள்ள அனுமதிக்கிறது. இது ஃபன் நிறைந்தது, பாதுகாப்பானது மற்றும் சாதாரண அல்லது நீண்ட கால பார்ட்னரை கண்டறிய பயன்படுத்த எளிதானது. இதில் புதிய நபர்களை இலவசமாகக் கண்டறியலாம் என்றாலும், உங்களுக்கு விருப்பமானவர்களுடன் நீங்கள் சேட் செய்ய மற்றும் கிஃப்ட்களை அனுப்ப பெய்டு மெம்பர்ஷிப்பிற்கு நீங்கள் அப்கிரேட் ஆக வேண்டும்.
மீட் மீ (MeetMe):
நீங்கள் சில ஃபன், ஃபிரென்ட்லி மற்றும் ஃப்ரீ டேட்டிங் ஆப்ஷன்களை தேடி கொண்டிருக்கிறீர்கள் என்றால் MeetMe சிறந்த ஆப்ஷனாகும். உங்கள் ஆர்வங்களுக்கு மேட்ச்சாக கூடிய மற்றும் சேட் செய்ய விரும்பும் அருகிலுள்ள ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் இணைய MeetMe உங்களுக்கு ஒரு தளத்தை வழங்குகிறது. இதில் நீங்கள் நண்பர்களை உருவாக்கலாம் அல்லது காதலில் விழலாம்.
ஹைன்ச் (Hinge):
இது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் டேட்டிங் ஆப்களில் ஒன்றாகும். மேலும் இது இந்தியாவிலும் கிடைக்கிறது. உங்கள் ஆத்மார்த்தமான துணையை நீங்கள் கண்டறிந்த பிறகு டெலிட் ஆகும் வகையில் இது டிசைன் செய்யப்பட்டுள்ளது. எனவே தான் இது மற்ற டேட்டிங் ஆப்களின் "ஸ்வைப் டு மேட்ச்" கலாச்சாரத்திலிருந்து தனித்து நிற்கிறது. இது iOS மற்றும் Android டிவைஸ் என இரண்டிற்கும் கிடைக்கிறது.
Also read... பேஸ்புக் சாட்களை ஸ்கிரீன் ஷாட் எடுக்க வேண்டாம் - எச்சரிக்கும் மார்க்!
ஓகேக்யூப்பிட் (OkCupid):
நீங்கள் யார் மற்றும் உங்கள் விருப்பு-வெறுப்புகளின் அடிப்படையில் பார்ட்னரை கண்டறிய உதவும் ஆப்ஸில் சிறப்பான ஒன்றாகும். இந்த ஆப்ஸானது உங்களை மிகவும் இன்ட்ரெஸ்டிங்கான கனெக்ஷன்களில் மட்டுமே கவனம் செலுத்த அனுமதிக்கும் தனித்துவமான மெஸேஜிங் சிஸ்டமை கொண்டுள்ளது. நீங்கள் கேஷுவல் டேட்டிங் மற்றும் லாங் டெர்ம் கமிட்மென்டை இதில் காணலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dating apps, Dating Tips, Valentines day